Friday, September 7, 2012

Micro aspects of developing inherent potentials


Micro aspects of developing inherent potential ஒரே நாளில் நாம் நம்முடைய வாழ்கையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் .அதற்கு முதலில் மாற வேண்டும் என்பதில் உறுதியாகவும் உற்சாகமாகவும் தீர்மானமாகவும் திடமாகவும் இருக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டோம்.அப்படி இருக்கும் போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தானாகவே சிந்தனையில் தோன்ற ஆரம்பிக்கின்றன திக்குத் தெரியாத காட்டில் வழிகாட்டி போல அவை வழிநடத்திச் செல்வதால் தடுமாற்றங்களும் ஏமாற்றங்களும் பெரிய அளவில் ஏற்படுவதில்லை.எனினும் முயற்சியினால் வாழ்கையில் மகத்தான மாற்றங்களைக் காண வேண்டுமானால் அதற்கு சுயஒழுக்கமும் மிகமிக அவசியம். ஒழுக்கம் பிறப்பிலிருந்து இறப்பு வரை முதல் மூச்சிலிருந்து இறுதி மூச்சு வரை இருக்க வேண்டிய ஒன்று. ஒரு விதையை விதைத்து விட்டால் முதலில் முளைப்பது அதன் வேர் தான். வேர் செடியை நிலத்தில் நிலைகொள்ளச் செய்வதுடன் அது மேற்கொண்டு வளர்வதற்கு வேண்டிய ஆற்றலை உணவு மூலம் பெற்றுத் தருகிறது. ஒரு மரத்திற்கு வேர் எவ்வளவு முக்கியமோ அது போல மனிதனுக்கு ஒழுக்கம் முக்கியம்.நிலத்திற்கு அடியில் இருக்கும் வேரை நாம் காணமுடியாததைப் போல ஒரு மனிதனின் ஒழுக்கத்தையும் புறத்தோற்றத்தால் தெரிந்து கொள்ள முடிவதில்லை.வேர் ஆழமாகவும் விசாலமாகவும் இருந்தால் மரம் உறுதியாகவும் செழிப்பாகவும் வளரும் என்பதைப் போல ஒழுக்கத்தால் மனிதன் மென்மேலும் சிறந்து விளங்குவான்.ஒழுக்கமில்லாத கல்வி,உழைப்பு,பொருள் சமுதாயத்திற்கு நற்பயன் அளிப்பதில்லை.அவை பரிணாம வளர்ச்சியில் எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால் தனிமனிதன் மட்டுமின்றி முழு சமுதாயமும் சீரழிந்து போகும் அபாயம் உள்ளது. தவறான ஒழுக்கம் தற்காலியமாக மகிழ்ச்சி தரலாம்.ஆனால் நீண்ட காலப் போக்கில் அது உறுதியான தீமைகளையே நல்கும் .அது மட்டுமன்று சாகாத சமுதயாத்தில் நிலைத்து நின்றும் பரிணாம வளர்ச்சியால் புத்துருவம் கொண்டும் தொடர்வதால் அடுத்தடுத்த பிறவிகளிலும் அதன் தாக்கம் கூடுதல் வலிமையோடு தோன்றும்.அதனால் தான் தவறான ஒழுக்கத்தை மறந்தும் கற்பித்து விடாதீர்கள் என்று சான்றோர்கள் கூறுகின்றார்கள் ஒழுக்கத்தின் சிறப்பை ஒருவருக்கு உணர்த்த அவருடைய உடம்பே போதும். உயிர் வாழ உடம்பின் உள்ளே உள்ள ஒவ்வொரு உறுப்பும் வரம்பு மீறாமல் சுய கட்டுப்பாடோடு ஒருங்கிணைந்து தொடர்ந்து இயங்கி வரவேண்டும்.இதில் எதாவது ஒரு உறுப்பு வரம்பு மீறிச் செயல்பட்டால் உடல் நலம் பாதிக்கப் பட்டு உயிர் போகும் நிலைக்கும் ஆளாகலாம். அது போலத்தான் சமுதாயம் என்ற உடம்பில் வாழும் மனிதன் என்ற உறுப்பும். தீயொழுக்கம் இருந்தால் வாழ்கையில் சரிவு அப்பொழுதிலிருந்தே தொடக்கி விடுகிறது.நல்லொழுக்கம் இருந்தால் முன்னேற்றத்திற்கான வழிகாட்டல் எளிதாக,வெகு இயல்பாக கிடைக்கின்றது. ஒருவருடைய ஒழுக்கம் என்பது சமுதாயத்தின் ஒழுக்கத்தையும் பொறுத்தது.சமுதாயத்தில் ஒழுக்கமின்றி வளரும் ஒருவருடைய நல்லொழுக்கம் உடனடியாகப் பலன் தருவதில்லை ஊழல் மிகுந்த சமுதாயத்தில் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதை போல.கால தாமதம் இருப்பதால் ஒருவர் நல்லொழுக்கத்தைப் பின்பற்ற அகமனதில் ஒரு விதத்தயக்கத்தைப் பெற்றிருப்பது இயல்பாகின்றது.தீய ஒழுக்கத்தில் இந்நிலை இல்லை என்பதால் அவை வெகு எளிதாக மனிதர்களைத் தொற்றிக் கொண்டு விடுகிறது. ஒழுக்கத்தை எப்படி வளர்த்துக் கொள்ளவது என்று பலருக்குத் தெரிவதில்லை. சமுதாயத்திற்குப் பயன்படும் காலம் வரை இயன்ற வழிகளில் ஏதாவது திறமைகளையும் தகுதிப் பாட்டையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இதற்கு ஒருவர் மேற்கொள்ளும்,பிறராலும் பின்பற்றத் தகுந்த வழிமுறைகளே ஒழுக்கம் என்றும் வரையறை செய்யலாம். புற ஒழுக்கத்திற்கு அக ஒழுக்கமே அடிப்படையாக இருக்கிறது. அக வொழுக்கம் என்பது வெறும் அந்தப்புர நடவடிக்கைகள் மட்டுமே இல்லை.அகத்தே விளையும் எண்ணங்களும் சிந்தனைகளும் அதைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களே மனிதர்களை உருவாக்குகின்றன என்று சொல்வார்கள்.நல்ல எண்ணங்கள் சிறந்த மனிதர்கள் உருவாவதற்கு காரணமாய் இருக்கின்றன.

Thursday, September 6, 2012

Mind without fear


தற்கொலை இந்தியாவில் நாளுக்கு நாள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. பலவீனமான மனது ஒருமுறையாவது பலமான முடிவெடுத்து விடவேண்டும் என்று நினைக்கும் போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் சமுதாய விபத்துக்களாகி விடுகின்றன. தற்கொலைக்குக் காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் ,அடிப்படையில் மனித நேயம் இல்லாமையே எல்லாவற்றிற்கும் மூலாதாரமாக இருக்கிறது.மனிதர்களுக்கிடைய உள்ள இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.எனவே தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில் முதலில் நாம் மனித நேயத்தை மீண்டும் வளர்க்க வேண்டும் யாரெல்லாம் தற்கொலைக்குத் துணிவு கொள்கின்றார்கள்? பெரியோர்களில் பெரும்பாலும் இனி கடன் தொல்லையிலிருந்து மீளவே முடியாது என்ற நிலையில் தத்தளிக்கும் போது இப்படிப்பட்ட முடிவுக்கு வந்து விடுகின்றார்கள்.கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு விட்டோம் என்ற மகிழ்ச்சி ,இது நாள் வரை கடன் தொல்லை தந்தவருக்கு ஒரு கேடு செய்துவிட்டோம் என்ற நிம்மதி -இரண்டும் சேர்ந்து அவர்களுடைய திடீர் முடிவைச் செயல் படுத்தி விடுகிறது. தற்காலிய முடிவுகளின் நிரந்தரத் தீர்வாகத் தற்கொலைகள் வெளிப்படுகின்றன. ன்னால் தன் குடும்பத்தினருக்கு எதுவும் செய்யமுடிய வில்லையே என்ற எண்ணம் நெஞ்சைச் சுட்டெரிக்கும் போது தாங்கவொண்ணா வறுமையால் நெடுங் காலம் வருந்திய ஒருவன் தற்கொலை முடிவுக்குத் தாவி விடுகிறான். இவன் தன்னைப் போல தன் பிள்ளைகளும் துன்பப் படக் கூடாது என்று நினைத்து மனைவியையும் ,மக்களையும் கூட தற்கொலைக்கு கூட்டுச் சேர்க்கிறான்.தன்னை வருத்திய வறுமையிலிருந்து தான் முற்றும் விடுதலை அடைந்து விட்டோம் என்ற மகிழ்ச்சி அவனை அப்படிச் செய்யத் தூண்டுகிறது. வறுமை என்பது அறியாமையால் வருவது. அது வந்த பின் விரட்டுவதை விட ,வருவதற்கு முன்பே கவனமாக இருந்தால் அதன் பாதிப்பிலிருந்து தப்பி இருக்கலாம். எவனொருவன் தன்னைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இருகின்றானோ அவன் மிகையான சுயமதிபீட்டினால் ஏமாற்றங் கொள்கிறான், குறைவான சுயமதிபீட்டினால் ஏமாற்றப் படுகிறான். வறு செய்து மற்றவர்களுக்கு முன்னால் அவமானப் பட்டவர்கள் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயல்வார்கள் வகுப்பில் ஆசிரியர் திருத்தும் போது, நண்பர்களுக்கு முன்னால் பெற்றோர் கண்டிக்கும் போது, சக ஊழியர்களுக்கு முன்னால் உயர் அதிகாரிகள் திட்டும் போது அவர்களை வென்று விட்டோம் என்ற உணர்வு வரப் பெற்றவராக சிலர் தற்கொலையைத் தத்தெடுத்துக் கொள்வார்கள்.பெரும்பாலானவர்கள் தனித்திருக்கும்போது அதிகமாக அவமானப்பட்டாலும் தாங்கிக் கொள்வார்கள் ஆனால் பிறர் முன்னே சிறிய அளவிலான அவமானத்தைக் கூட தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.இந்த உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .அப்பொழுதான் இதன் காரணமாக நிகழும் தற்கொலைகளை ஓரளவாவது தவிர்க்க முடியும். ளம் வயதினரிடையே காதல் தோல்வி,பாலியல் கொடுமைகள்,ஆண்/பெண் ஆதிக்கத்தால் என்பதும் கருத்து வேறுபாடு மற்றும் மனக் கசப்பு,தேர்வில் தோல்வி, போட்டியாளரை விடத் தாழ்ந்திருத்தல் போன்ற இன்ன பிற காரணங்கள் தற்கொலைக்குப் பின்னணியாக இருக்கின்றன.பிறருடன் பகிர்ந்து கொண்டு தான் படும் துன்பத்திலிருந்து விடுவித்துக் கொள்ளத் தெரியாததால் தொடரும் மன அழுத்தத்தால் இப்படியொரு முடிவுக்கு கட்டாயமாகத் தள்ளப்படுகின்றார்கள்.வாழ்கையில் பிரச்சனைகளை வெற்றி கொள்ள வேண்டும்,பிரச்சனைகள் நம்மை வெற்றி கொள்ளக் கூடாது என்ற முடிவை எடுத்து விட்டால் தற்கொலைகள் தற்கொலை செய்து கொள்ளும்.

Wednesday, September 5, 2012

Eluthatha kaditham


எழுதாத கடிதம். சமுதாயமக்கள் முதலில் வறுமையால் வாடாமல் வாழவேண்டும்.அது உறுதியான பின்பு அடிப்படை வசதிகளுடன் கவலையின்றி வாழவேண்டும் அதன் பின்னர் கூடுதல் வசதிகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும்.நாட்டின் வளமும்,செல்வமும் சமமாக மக்களிடையே பங்கிடப்பட முடியாததால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளினால் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ளவும், எல்லையின்றி மேம்படுத்திக் கொள்ளவும் தவறான வழிகளில் ஈடுபடுகின்றார்கள் .நேரிடையாகச் செய்தால் இனமறிந்து கொண்டு விடுவார்கள் என்று இப்பொழுதெல்லாம் தவறுகளை மறைமுகமாகவும், அரசாங்கத்தின் கூட்டணியோடும் மறைமுகமான அனுமதியுடனும் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். செல்வமும் வசதிகளும் ஒரு சிலரிடையே குவிவதைத் தடுத்து, எல்லோருக்கும் சமப் பகிர்வு என இல்லாவிட்டாலும் ஓரளவு கிடைக்கும் படி செய்வதற்காக உருவாக்கப் பட்ட அமைப்பே அரசாங்கம். இது மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்புத்தான் என்றாலும் சராசரி மனிதனின் தேவைகளை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது பூர்த்தி செய்யக் கூடிய அமைப்பாக இல்லை.சமப் பகிர்வு என்று சொல்லிவிட்டு அரசியலுக்குள் நுழைந்தவர்கள் எல்லோரும் தனக்கென ஒதுக்கிக் கொள்ளும் மனப் போக்கை சமுதாய மக்களை விட அதிகம் பெற்றுள்ளார்கள் . தேர்தல் என்பது தேர்வு அதில் வெற்றி என்பது இதைச் செய்வதற்கு மக்கள் கொடுக்கும் வாய்ப்பு என்று இவர்கள் நம்புவதால் இன்றைக்கு ஏராளமானோர் அரசியலில் புகுந்துள்ளனர். போட்டியால் மக்களிடையே இருந்த அதே ஏற்றத் தாழ்வு அரசியலில் புகுந்தோரிடமும் இருப்பதால் மக்களை மறந்தவர்களாக மாறி வருகின்றார்கள். மக்கள் ஏமாந்து விட்டால் ,மக்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் .விழிப்போடு இருக்க வேண்டுமானால் அது பற்றிய குறைந்த பட்ச அடிப்படை அறிவு அவசியம்.ஒரு சிலர் ஒரு சிலவற்றில் விழிப்போடு இருக்க முடியும் ஆனால் எல்லோரும் எல்லாவற்றிலும் அப்படி இருக்கவே முடியாது.மக்களை விழிப்போடு இருக்கவேண்டும் என்று எச்சரித்து விட்டதோடு தன்கடமை முடிந்து விட்டது என்று அரசாங்கம் கைகளைக் கட்டிக் கொள்வதால் மக்களை ஏமாற்றுவது மக்களுக்கு எளிதாகிறது. சீட்டுப் பணம் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு, கோழிப் பண்ணை,ஈமு கோழி பண்ணை,தேக்கு மரம் வளர்ப்பு,போலித் தங்கம்,போலி உற்பத்திப் பொருட்கள்,நில மோசடி,உயர்ந்த கூலிக்குத் தரக் குறைவான வேலை, குறைந்த கூலி கொடுத்து அதிக வேலை,பணம் இரட்டிப்பு,கிரெடிட் கார்டு தில்லுமுல்லு,செல் போன் மற்றும் கம்பியூட்டர் தில்லுமுல்லுகள் என பட்டியல் முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருக்கிறது.இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மக்களை விட அரசுக்குத்தான் உள்ளது. மக்கள் வாழவேண்டியவர்கள் அரசு ஆளவேண்டியவர்கள் .மக்கள் எதைப்பற்றியும் கவலைப் படாமல், அதையெல்லாம் கவனித்துக் கொள்ள நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் தன்னுடைய பணியை மட்டும் செய்யும் போது சமுதாயம் மகிழ்ச்சியுடன் வாழ்கிறது அரசாங்கம் மக்களுடைய நலனைக் காக்கும் என்ற நம்பிக்கையைப் பெறாத போது மக்களிடையே ஏற்படும் மனக் குழப்பத்தால் ஒவ்வொருவரும் ஒரு வரம்பு மீறிச் சிந்திக்கவும் செயல்படவும் துணிவு கொள்கின்றனர்.இது நாட்டின் ஒட்டு மொத்த நலனைச் சீர்குலைக்கும். மக்கள் ஏமாற்றப் படுவதைத் தடுக்க அரசாங்கம் எல்லா வகையாலும் முயலவேண்டும்.இதை அரசாங்கம் செய்யத் தவறினாலும் அல்லது அரசாங்கமே மக்களை ஏமாற்றினாலும் நீதியை நிலைநாட்ட வேண்டியது நீதிமன்றங்களே .பழங் காலத்தில் அரசர்களே தலைவனாகவும் நீதிபதியாகவும் இருந்தார்கள். மக்கள் ஆட்சியில் அப்படி இல்லை என்பதால் அரசாங்கத்தை நீதிமன்றங்களும்,நீதிமன்றங்களை அரசாங்கமும் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வது மக்களை விட சமுதாயத்திற்கு நல்லது.அப்பொழுதுதான் தன்னைத் தட்டிக் கேட்பதற்கும் ஆள் இருக்கின்றார்கள் என்ற பயத்தில் எந்த சமுதாய அமைப்பும் சமுதாயத்திற்கு எதிராக மறைமுக வேலைகளில் ஈடுபடுவதும் ,ஊக்குவிப்பதும் தடுக்கப்படும். எல்லோருக்கும் வேலை வாய்ப்பை அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.அப்பொழுதான் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்கையை நிலைப்படுத்திக் கொள்ள மாற்று வழிச் சிந்தனைகளை விட்டு விடுவார்கள்.

Tuesday, September 4, 2012

Vinveliyil ulaa


விண்வெளியில் உலா -மோனோசிரோஸ்(Monoceros) இது ஓரியன் மற்றும் கானிஸ் மைனர் வட்டாரங்களுக்கு இடையில் பேரண்ட நடுவரைக் கோட்டுக்கு அருகாமையில் இருக்கின்ற ஒரு நவீன வட்டார விண்மீன் கூட்டமாகும்.இப் பகுதியில் 85 விண்மீன்கள் இருப்பதை இனமறிந்துள்ளனர்.டச்சு நாட்டின் பெட்ரஸ் பிளான்சியஸ்(Petrus Plancius) என்பார் 17 ம் நூற்றாண்டில் இதை அறிமுகப் படுத்தினார் இது புராணக் கதைகளில் வரும் கொம்புள்ள குதிரையாக (Unicorn) கற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள பிரகாசமிக்க ஆல்பா மோனோசிரோடிஸ் சின் தோற்ற ஒளிப் பொலி வெண் 3.93 அருகாமையிலுள்ள பிரகாசமாய் மினுமினுக்கின்ற வட்டார விண்மீன்களினால் இது பெரும்பாலும் பெரும்பாலானவர்களால் தவறவிடப்படுகின்றது.இது பால் வெளி மண்டலத்தில் அமைந்துள்ளது.
ஒரு விண்மீன் போலத் தோன்றும் பீட்டா மோனோசிரோடிஸ் உண்மையில் ஒரு மும்மீனாகும் முக்கோணம் போல நிலையாகத் தோன்றும் இதை முதன் முதலாக வில்லியம் ஹெர்சல் கண்டுபிடித்தார். இவற்றின் தோற்ற ஒளிப் பொலி வெண் முறையே 4.7,5.2,6.1 ஆக உள்ளது.ஆல்பா, பீட்டா மோனோசிரோடிஸ் க்கு மிகச் சரியாக நடுவில் M.50 என்று பதிவு செய்யப்பட்ட ஒரு கொத்து விண்மீன் கூட்டம் உள்ளது. இதைச் சுற்றி எல்லையாக சற்று கருமையான புற வெளி உள்ளதால் இதை எளிதாகக் காண முடிகிறது. எப்சிலான் (ε) மோனோசிரோடிஸ் ஓர் இரட்டை விண்மீனாகும். இவற்றின் ஒளிப் பொலி வெண் முறையே 4.4 மற்றும் 6.7 ஆக உள்ளன இவ் வட்டாரத்தில் பிளாஸ்கெட் விண்மீன் (Plaskett 's star) என்ற நிறைமிக்க ஒரு இரட்டை விண்மீன் உள்ளது.இதன் மொத்த நிறை 100 சூரிய நிறையாகும் .S மோனோசிரோடிஸ் நீலங் கலந்த வெண்ணிற விண்மீனாக உள்ளது. இது NGC 2264 என்ற அண்டவெளி கொத்து விண்மீன் கூட்டத்தின் மையத்தில் உள்ளது.இது ஒரு மாறொளிர் விண்மீனாகும் .இதன் ஒளிப் பொலிவெண் மாற்றம் மிகவும் குறைவு.v838 மோனோசிரோடிஸ் செந்நிற, மாபெரும் மாறொளிர் (super giant) விண்மீனாகும்.இது ஜனவரி 2002 ல் வெடித்துச் சிதறி ஆற்றலை வெளியில் உமிழத் தொடங்கியது.பிப்ரவரி மாதத்தில் இதன் ஒளிப்பொலிவெண் ஒரே நாளில் பத்தாயிரம் மடங்கு அதிகரித்தது.ஹபுல் தொலைநோக்கி இதை ஆராய்ந்து இந்த விண்மீனைச் சுற்றியுள்ள தூசிப் படலத்தை புலப்படுத்திக் காட்டியது.NGC 2264,100 ஒளி ஆண்டுகள் தொலைவில் நெருக்கமாக அமைந்த 50 விண்மீன்களால் ஆன கூட்டமாக உள்ளது . இப் பகுதியில் குழி உருவ (Socket ) நெபுலா உள்ளது .இது சற்றேறக் குறைய கோள் வடிவ நெபுலா போல இருக்கிறது.இது ஒரு பரவல் (diffuse) வகை நெபுலாவாகும்.இதன் மையப் பகுதியில் உள்ள 'o' வகை விண்மீன்களினால் இது ஒளியூட்டப்படுகின்றது.இது 3600 ஒளி ஆண்டுகள் தொலைவில் விண்ணில் தோற்ற விட்டம் முழு நிலைவைப் போல இரண்டு மடங்காகத் தெரிகின்றது.

Monday, September 3, 2012

Vethith thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -பொட்டாசியம் -கண்டுபிடிப்பு பொட்டாசியம் எரிமலைப் பாறைகளில் சிலிகேட்டாக எங்கும் பரவலாகக் காணப்படுகின்றது .பூமியில் மேலோட்டுப் பகுதியில் இதுவும் சோடியமும் ஏறக்குறைய ஒரே செழுமையைப் பெற்றுள்ளன .பொட்டாசியத்தின் செழுமை எடையில் 2 .35 % இது செழுமை வரிசையில் ஏழாவதாகும்.கிரானைட் கற்களில் பொட்டாசியம் ஓரளவு சேர்ந்திருக்கிறது .கடல் நீரில் சிறிதளவு பொட்டாசியம் இருக்கிறது. சோடியம் மற்றும் பொட்டாசியச் சேர்மங்களை மக்கள் தனிமங்களை அறிவதற்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.இவற்றின் கார்போனேட்டுக்கள் பழங்காலத்தில் சலவைத் தொழிலில் பயன்படுத்தப்பட்டன .இந்த கார்போனேட்டுக்களைப் பொதுவாக காரங்கள் (alkali) என அழைத்தனர் .சோடியம் காபோனேட்டை சோடா என்றும் பொட்டாசியம் கார்போனேட்டை பொட்டாஷ் என்றும் பெயரிட்டனர். 1807 ல் சர் ஹம்ப்ரி டேவி என்ற இங்கிலாந்து நாட்டு வேதியியலார் பொட்டாஷ்ஷை உருக்கி நீர்மமாக்கி அதை மின்னார் பகுத்து பொட்டாசியத்தை தனித்துப் பிரித்தார் .பொட்டாசியம் எதிர் மின் வாயில் படிந்திருந்தது இது கடல் பாசியின் சாம்பலிலிருந்து பெறப்பட்டதால் பொட்டாசியம் என்ற பெயரைப் பெற்றது.காரத்திற்கு அரேபிய மொழியில் 'காலியம் ' என்று பெயர். இதன் முதல் எழுத்தே பொட்டாசியத்திற்கு வேதிக் குறியீட்டைத் தந்தது . பண்புகள் பொட்டாசியம் இலேசான,மென்மையான வெள்ளி போன்று வெண்ணிறத்துடன் ஆனால் சற்று நீலம் பாய்ந்த பொலிவுடன் கூடிய உலோகமாகும்.காற்று வெளியில் சட்டென மங்கி விடுகிறது.அறை வெப்ப நிலையில் மெழுகு போன்றிருக்கிறது.இதைக் கம்பியாக நீட்டவும்,தகடாக அடிக்கவும் முடிகிறது.இது நேர் மின் வாய் நாட்டமிக்கது(electro positive). நீரை வெடிச் சத்தத்துடன் பகுத்து ஹைட்ரஜனை வெளியேற்றி பொட்டாசியம் ஹைட்ராக்சைடை உற்பத்தி செய்கிறது.இந்த வினையில் மிகுந்த அளவு வெப்பம் வெளிப்படுவதால் ஹைட்ரஜன் எரிகிறது.பொட்டாசியம் தீ சுவாலையுடன் வெடிக்கிறது.வேதி வினைகளின் அடிப்படையில் இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதைவிட வினைதிறமிக்கது. பொட்டாசியம் கிளர்ச்சியுடன் ஹாலஜன்கள்,கந்தகம் மற்றும் ஆக்சிஜனுடன் இணைகிறது.சூடுபடுத்தப்பட்ட பொட்டாசியம், ஆக்ஸிஜனைக் கொண்டுள்ள எல்லா வளிமங்களையும் பகுக்கின்றது. நிலையான போரான்,சிலிகான் ஆக்சைடுகள் மற்றும் மக்னீசியம், அலுமினியத்தின் குளோரைடுகள்கூட விதி விலக்கில்லை.சோடியம் போல பொட்டாசியமும் மண்ணெண்னைக்குள் முக்கி பாதுகாப்பார்கள். நீரில் உடனடியாக தீப்பற்றி எரிகிறது. பொட்டசியத்தின் அணு எண் 19,அணு எடை 39.10 .இதன் அடர்த்தி 860 கிகி/கமீ.இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 336.8,1033 K ஆகும். பயன்கள் மின்னணுவியல் துறையில் எலெக்ட்ரான் வால்வுகளைஉண்டாக்கும் போது பல்புக்குள் சிறிதளவு பொட்டாசியத்தை இடுவார்கள். பல்பை மூடிய பின் இது ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதால் உயரளவு வெற்றிடம் உள்ளே ஏற்படுகிறது.வால்வு வெள்ளிப் பூச்சிட்டது போலத் தோன்றுவது இதனால்தான். பொட்டாசியம் ஹைட்ராக்சைடு என்பது பொட்டாஷ்.பொட்டாசியம் குளோரைடு கரைசலை மின்னாற்பகுத்தும் அல்லது பொட்டாசியம் கார்போனேட் மற்றும் சுண்ணாம்பு நீரிலிருந்தும் இதைத் தயாரிக்கலாம்.இது மென்மையான சோப்பு தயாரிக்கவும்,இதோடு வினை புரியாத வளிமங்களை வறட்சியூட்டவும் பயன்படுகிறது இது விவசாயத்திற்குத் தேவையான உரங்களின் உற்பத்தி முறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது . பொட்டாசியம் குளோரைடு பொட்டாஷ் உற்பத்திக்கும் ,பொட்டாசியம் புரோமைடு ஒளிப்படச் சுருள்களுக்குத் தேவையான ஒளி உணர் வெள்ளி புரோமைடு உற்பத்திக்கும் பயன் தருகின்றன.பொட்டாசியம் புரோமைடு மருத்துவத் துறையில் மயக்க மூட்டியாக ப் பயன் படுத்தப் படுகிறது .பொட்டசியம் குளோரேட் குளிர் நீரில் குறைவாகவும் சுடு நீரில் உடனடியாகவும் கரைகிறது.இது ஒரு வலிமையான ஆக்சிஜனூட்டிப் பொருளாகும்.பொட்டசியம் குளோரேட்டும்,பாஸ்பரசும் கலந்த கலவை பலத்த ஓசையுடன் வெடிக்கிறது.குளோரேட்டை கந்தகத்துடன் கலக்க மோதும் போது வெடிக்கிறது.அடர் மிகு கந்தக அமிலத்துடன் வினை புரிந்து வெடிக்கக் கூடிய குளோரின் பெராக்சைடை விளைவிக்கின்றது. பொட்டசியம் குளோரேட்,ஆக்சிஜன் உற்பத்தி முறையில் பயன் படுகின்றது. இது வான வேடிக்கைக்கான வெடிகள்,தீக்குச்சிகள்,ஒளிப் படத்திற்கான மின்னல் விளக்குகளுக்கான பொடிகள் போன்றவைகள் தயாரிக்கப் பயன் படுகிறது.தொண்டைக்கு இதமளிக்கும் மருந்துகளில் சிறிதளவு குளோரேட் இருக்கும்.பொட்டாசியம் கார்போனேட் கண்ணாடி, மென் சோப்பு தயாரிக்கவும்,பொட்டாசியம் நைட்ரேட் துப்பாக்கிக்கான வெடி மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றன. சோடியமும்,பொட்டாசியமும் சேர்ந்த கலப்பு உலோகம் வெப்பப் பரிமாற்று ஊடகமாகப் பயன் படுகிறது.ஈனுலைகளில் இதன் நீர்மத்தை குளிர்விப்பானாகப் பயன்படுத்துகின்றார்கள் .

Sunday, September 2, 2012

Kavithai


இந்தியாவின் பயனுறுதிறன் ங்கே அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் னால் ஆட்சியில் செங்கோலைத் தொலைத்துவிட்டார்கள் ங்கே மக்கள் இருக்கின்றார்கள் னால் வாழ்கையில் சுயஒழுக்கத்தை விட்டுவிட்டார்கள் ங்கே வணிகர்கள் இருக்கின்றார்கள் னால் வர்த்தகத்தில் நேர்மையை விற்றுவிட்டார்கள் ங்கே அலுவலர்கள் இருக்கின்றார்கள் னால் லஞ்சத்தை ஒழிக்க மறுத்துவிட்டார்கள் ங்கே காவலர்கள் இருக்கின்றார்கள் னால் குற்றங்களைக் குறைக்கத் தவறிவிட்டார்கள் ங்கே நீதிபதிகள் இருக்கின்றார்கள் னால் நீதிதேவதையின் கண்ணைத் திறந்துவிட்டார்கள் ங்கே ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் னால் கல்வியில் தரம்தான் இல்லை ங்கே மாணவர்கள் இருக்கின்றார்கள் னால் வாழ்கையில் பொறுப்புத்தான் இல்லை ங்கே மருத்துவர்கள் இருக்கின்றார்கள் னால் பணியில் சேவைதான் இல்லை ங்கே தொழிலாளிகள் இருக்கின்றார்கள் னால் வறுமை மட்டும் எஞ்சி இருக்கிறது ங்கே காதலர்கள் இருக்கின்றார்கள் னால் காமம் மட்டும் விஞ்சி இருக்கிறது ங்கே துறவிகள் இருக்கின்றார்கள் னால் ஆசை மட்டும் மனதில் இருக்கிறது ந்தியாவின் பயனுறு திறன் மொத்தத்தில் வெறும் எட்டு சதவீதமே மட்டுமே ந்த எட்டை ஒன்றிணைந்து என்பதாக்க காந்தித்தாத்தா சொன்னதைப் போல ங்கும் எதிலும் சுயகட்டுப்பாடு வேண்டுமே பொங்கும் சிந்தனையோடு இனி சிந்திப்போமே

Saturday, September 1, 2012

cartoon


கார்ட்டூன்
அமைச்சர் : மன்னா,நாட்டில் வீடு புகுந்து கொள்ளை அடிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இன்றிரவு மாறுவேடமிட்டு திருடர்களைப் பிடிக்கப் போகலாமா ? மன்னர்: வேண்டாம் அமைச்சரே,இனி வீட்டில் திருட ஒன்றுமில்லாவிட்டால் திருட்டே இருக்காது.மக்களும் திருட்டு பயமின்றி வாழலாமே.