Thursday, September 6, 2012

Mind without fear


தற்கொலை இந்தியாவில் நாளுக்கு நாள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. பலவீனமான மனது ஒருமுறையாவது பலமான முடிவெடுத்து விடவேண்டும் என்று நினைக்கும் போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் சமுதாய விபத்துக்களாகி விடுகின்றன. தற்கொலைக்குக் காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் ,அடிப்படையில் மனித நேயம் இல்லாமையே எல்லாவற்றிற்கும் மூலாதாரமாக இருக்கிறது.மனிதர்களுக்கிடைய உள்ள இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.எனவே தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில் முதலில் நாம் மனித நேயத்தை மீண்டும் வளர்க்க வேண்டும் யாரெல்லாம் தற்கொலைக்குத் துணிவு கொள்கின்றார்கள்? பெரியோர்களில் பெரும்பாலும் இனி கடன் தொல்லையிலிருந்து மீளவே முடியாது என்ற நிலையில் தத்தளிக்கும் போது இப்படிப்பட்ட முடிவுக்கு வந்து விடுகின்றார்கள்.கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு விட்டோம் என்ற மகிழ்ச்சி ,இது நாள் வரை கடன் தொல்லை தந்தவருக்கு ஒரு கேடு செய்துவிட்டோம் என்ற நிம்மதி -இரண்டும் சேர்ந்து அவர்களுடைய திடீர் முடிவைச் செயல் படுத்தி விடுகிறது. தற்காலிய முடிவுகளின் நிரந்தரத் தீர்வாகத் தற்கொலைகள் வெளிப்படுகின்றன. ன்னால் தன் குடும்பத்தினருக்கு எதுவும் செய்யமுடிய வில்லையே என்ற எண்ணம் நெஞ்சைச் சுட்டெரிக்கும் போது தாங்கவொண்ணா வறுமையால் நெடுங் காலம் வருந்திய ஒருவன் தற்கொலை முடிவுக்குத் தாவி விடுகிறான். இவன் தன்னைப் போல தன் பிள்ளைகளும் துன்பப் படக் கூடாது என்று நினைத்து மனைவியையும் ,மக்களையும் கூட தற்கொலைக்கு கூட்டுச் சேர்க்கிறான்.தன்னை வருத்திய வறுமையிலிருந்து தான் முற்றும் விடுதலை அடைந்து விட்டோம் என்ற மகிழ்ச்சி அவனை அப்படிச் செய்யத் தூண்டுகிறது. வறுமை என்பது அறியாமையால் வருவது. அது வந்த பின் விரட்டுவதை விட ,வருவதற்கு முன்பே கவனமாக இருந்தால் அதன் பாதிப்பிலிருந்து தப்பி இருக்கலாம். எவனொருவன் தன்னைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இருகின்றானோ அவன் மிகையான சுயமதிபீட்டினால் ஏமாற்றங் கொள்கிறான், குறைவான சுயமதிபீட்டினால் ஏமாற்றப் படுகிறான். வறு செய்து மற்றவர்களுக்கு முன்னால் அவமானப் பட்டவர்கள் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயல்வார்கள் வகுப்பில் ஆசிரியர் திருத்தும் போது, நண்பர்களுக்கு முன்னால் பெற்றோர் கண்டிக்கும் போது, சக ஊழியர்களுக்கு முன்னால் உயர் அதிகாரிகள் திட்டும் போது அவர்களை வென்று விட்டோம் என்ற உணர்வு வரப் பெற்றவராக சிலர் தற்கொலையைத் தத்தெடுத்துக் கொள்வார்கள்.பெரும்பாலானவர்கள் தனித்திருக்கும்போது அதிகமாக அவமானப்பட்டாலும் தாங்கிக் கொள்வார்கள் ஆனால் பிறர் முன்னே சிறிய அளவிலான அவமானத்தைக் கூட தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.இந்த உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .அப்பொழுதான் இதன் காரணமாக நிகழும் தற்கொலைகளை ஓரளவாவது தவிர்க்க முடியும். ளம் வயதினரிடையே காதல் தோல்வி,பாலியல் கொடுமைகள்,ஆண்/பெண் ஆதிக்கத்தால் என்பதும் கருத்து வேறுபாடு மற்றும் மனக் கசப்பு,தேர்வில் தோல்வி, போட்டியாளரை விடத் தாழ்ந்திருத்தல் போன்ற இன்ன பிற காரணங்கள் தற்கொலைக்குப் பின்னணியாக இருக்கின்றன.பிறருடன் பகிர்ந்து கொண்டு தான் படும் துன்பத்திலிருந்து விடுவித்துக் கொள்ளத் தெரியாததால் தொடரும் மன அழுத்தத்தால் இப்படியொரு முடிவுக்கு கட்டாயமாகத் தள்ளப்படுகின்றார்கள்.வாழ்கையில் பிரச்சனைகளை வெற்றி கொள்ள வேண்டும்,பிரச்சனைகள் நம்மை வெற்றி கொள்ளக் கூடாது என்ற முடிவை எடுத்து விட்டால் தற்கொலைகள் தற்கொலை செய்து கொள்ளும்.

No comments:

Post a Comment