Monday, February 17, 2014

kavithai

வல்லவனிலும் வல்லவன்  

கல் எட்டிய தொலைவைவிட 
வில்விட்ட அம்பு எட்டும் 
அம்பு கடந்த தொலவை விட 
அலையாய் ஒலி கடக்கும் 
லி தொட்ட தொலைவை விட 
உறுமும் தோட்டா தொடும் 
தோட்டா முட்டிய தொலைவை விட 
சுடுகணைக் குண்டு முட்டும்   
றிந்தகுண்டு தாண்டிய தொலைவை விட 
ஏவிய ஏவுகணை தாண்டும்
ஏவுகணை முயன்ற தொலைவை விட 
ஏவா ஒளிகூட முயலும் 
ஒளியினும் விரைவாய்க்  கடக்க  
ஒன்றுள இவ்வுலகில் 
பேரண்டத்தையே ஆள நினைக்கும் 
பேராற்றல்மிக்க மனித மனத்தை 
வெல்லும் அன்பு மட்டுமே 
வற்றாத அன்பு எட்டாததொலைவில்லை
வளமான அன்பு

வல்லவனிலும் வல்லவன்  

KAVITHAI

சமுதாயத்தின்  வாழ்வாதாரம்  

சமுதாயத்தின்  வாழ்வாதாரம்  


பூமியைத் தோண்டி  
பொன்னும் பொருளும்
பொறுக்கி  எடுத்து   
கடிய  நிலந்திருத்தி 
விடிய நீர்பாய்ச்சி 
விளைபொருள்  பெருக்கி
வாழ்வோருக்கு உழைப்பே
வாழ்வாதாரம்
வசிகர   இலக்கின்
பொருளாதாரம் 
  
ஆண்டுக் கணக்கில்
ஆழத் தோண்டி 
துளித் துளியாய்
சேர்த்து சேமித்து
ஆங்காங்கே அடுக்கப்பட்டு
அழகாய்த் தூங்கும்
தங்கக் கட்டிகளா 
தாங்கிப் பிடிப்பது 
உலகின் ஒட்டுமொத்த 
பொருளாதாரத்தை?

உனக்குள் இருக்குதொரு 
தங்கச் சுரங்கம் 
கேட்பாரற்றுக் கிடக்குது
ந்தச் சுரங்கம் 
மண்ணைத் தோண்டி
மயங்கும் மனிதனே 
விண்ணைத் தாண்டி 
வியக்கும்  நீயுன்
மனதைத் தீண்டிப்
பார்க்க  மறந்தாயோ?


வெறும்  பொருளே
வாழ்க்கை ஆவதில்லை 
மெய்ப்பொருள்  உணரா 
மனித  வாழ்க்கை 
கருப்பொருள் இல்லா
கதை போல 
புறப்பொருள் தேடும்
மனிதனே  உனக்குள்
அகப்பொருள் நாடி
அறியவும் மறக்காதே

சிரிக்காத  தங்கக்கட்டிகள் 
சிறைக்கைதிகள்  போல
உறங்கிக் கிடக்கும் 
கனவுக் கன்னிகள்
உறவுக்கு உதவா 
உருவ  இளவரசிகள் 
மாவீரன்போல மனம்
சிறகடித்துப் பறக்கும்
உறங்கும் லகை
உசுப்புவிடும் த்தமன்

அன்பும் பொருளாதாரம் 
அறிவும் பொருளாதாரம் 
பொருள்  புறமென்றால்
அவையிரண்டும் அகமென்பர் 
அகலர  புறஞ்சிரிக்கும்
புறஞ்செழிக்க அகங்கொழிக்கும்
அன்பும் அறிவும் 
ஒருங்கிணைந்தால் அதுவே 
ழியாத சமுதாயத்தின் 
வளமிகு வாழ்வாதாரமாகும்

ஆக்கம் தரும் அறிவு 
அகப் பொருளாதாரமானது
ஏக்கம் தரும் அன்பு 
எப்படிப் பொருளாதாரமானது ?
அறிவறியா நாடுகள் 
வளமிழந்த திருவோடுகள்
அன்பைத்துறந்த நாடுகள்  
வம்பால்வளரா  நாடுகள் 
எடுத்துக்காட்டுகள் இருக்கு  
எண்ணிலா இவ்வுலகில் 

படித்தும் சரித்திரம்
பாடம் கற்கவில்லை 
அன்பின்றி வாழ்ந்தநாடுகள் 
எங்குமில்லை தோழா
அறிவு ஒருகண்ணென்றால் 
அன்பு மறு கண்ணாகும் 
இருகண் வேண்டாம்  
ஒரு கண் போதுமென்று
சொல்லத் துணிவார் 
யாருளர் தோழா


Saturday, February 15, 2014

Eluthaatha Kaditham

    ஆட்டோவில் மீட்டர் பொருத்தவில்லை என்றால்,காவல் துறை நடவடிக்கை எடுக்கின்றது,அனுமதி இன்றி மணல் அள்ளினால் தாசில்தார் நடவடிக்கை எடுக்கின்றார்.வருமான வரி ஏய்ப்புச் செய்தால் வருமான வரித் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றார்கள்,மக்கள் தவறு செய்யாமல் இருக்க அரசியல்வாதிகள் பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் என்றாலும் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு இருக்கும் எல்லா நடவடிக்கைகளையும் வலுவிழந்து போகச் செய்து விடுகின்றார்கள். அதற்காக அதிகாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கின்றார்கள் கண்காணிப்புப் பணிகளும் தீவிரமாகவும்,பிசகின்றியும் செய்யப்படுவதில்லை  அவர்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்.? எல்லா வளம் மிருந்தும் இந்தியா முன்னேறவில்லை என்றால் அதற்கு அரசியல்வாதிகளின் இந்த மனப் போக்கே காரணம்.அரசியல்வாதிகள் உண்மையான அரசியல்வாதிகளாக இருப்பார்களேயானால் இந்தியா 2020 என்ன,அதற்கு முன்னால் கூட ஒரு வல்லாரசாக உருவாகும். அரசியல்வாதிகள் பல கட்சிகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஆதாயத்திற்காகச் சண்டை போடுகின்றார்கள்..பொறுப்பின்றி திட்டமிடுவதும், திட்டச் செலவு செய்வதும் அவர்களுக்கு வாடிக்கையாகி வருகின்றது.அரசியல்வாதிகள், அதிகாரிகள்,மக்கள் என யாரிடமும் மன எழுச்சியோ அல்லது மாற்றமோ ஏற்படவில்லை.அதிகாரிகள் பொது மக்களுக்காகப் பணிபுரிவதை விட அரசியல்வாதிகளின் அடிமைகளாக வேலை செய்கின்றார்கள். அரசியல்வாதிகள் இந்தியாவின் முதலாளிகள் போலவும், அதிகாரிகள் அவர்களுக்குக் கீழ் வேலைசெய்வது போலவும்,ஆன நிலை மேலும் மேலும் வலுவடைந்து வருவதால் இந்தியா உண்மையான வளர்ச்சியை ஒருகாலத்திலும் எட்டாது என்பதே நிதர்சனமான உண்மை.                                                                                                                     

Friday, February 14, 2014

cartoon

கார்ட்டூன்
சிங்கப்பூரில் வாழ்ந்து  வரும் மகளும் மாப்பிள்ளையும் வயதான,ஓய்வு பெற்ற பெற்றோரை ஒருமுறை அழைத்துச் சென்றனர். இந்தியாவிற்கும் 

சிங்கப்பூருக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு அவளுடைய அப்பா ஆச்சரியப்பட்டு முணுமுணுத்தார்.சிங்கப்பூரில் திட்டம் போட்டு வளர்ச்சி பெறுகின்றார்கள் நாட்டின் அகக் கட்டமைப்பு உண்மையாகவே விரிவடைந்து வருவதால் அது கடுமையான எதிர்காலத்தைத் தாக்குப் பிடித்து நிலைத்து நிற்கும் வாய்ப்பைப் பெறுகின்றது.இந்தியாவில் வளர்ச்சியென வளர்ச்சிகாணா திட்டம் போடுகின்றார்கள்.அரசியல்வாதிகளிடம் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றார்கள்.அவர்களிடம் அரசியலை விட அநாகாரியமிக்க செயல்களே மிகுந்து வருகின்றன.இந்தியாவின் உண்மையான எதிரி அங்கு பெருகிவரும் கேவலமான அரசியல்வாதிகளே என்று அவர் சொன்னார். உண்மைகள் உணரப்படுவதற்கு இந்தியாவில் எப்போதும் நெடு நாட்களாகும்,

Monday, February 10, 2014

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம்
உலகம் ஒரு நாள் அழிந்துவிடும். ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில் எல்லாம் தோன்றியும் அழிந்தும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.உலகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதால் இயற்கை ஒரு வேறுபாடான அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. 

இயற்கையைப் பொறுத்த மட்டில் உயிருள்ளவையும் உயிரற்றவையும் ஒன்றுதான்.எல்லாம் மீண்டும் தோன்றியிருப்பதற்காக அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இயற்கையாக உலகம் அழிவதை யாரும் தடுத்து விட முடியாது. ஆனால் மனிதர்கள் ஒருவர்க்கொருவர் காட்டி வரும் மிகுதியான பகைமை உணர்வுகளால் இந்த உலகம் இயற்கையால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு வெகு முன்பே மனிதர்களால் அழிந்துவிடும் அபாயத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது. இனப் படுகொலை ,தீவிரவாதத்தின் முரட்டுத்தனமான போக்குகள்,மாசு படுத்துவதால் ஏற்படும் உலகலாவிய பருவ மாற்றங்கள்,உடலை முட்டித் தள்ள  மனத்தில் வளரும் அளவில்லாத பேராசைகள்,மது மற்றும் மாது மயக்கங்கள், வரம்பு மீறிய இனப்பெருக்கம் இப்படிப் பல காரணங்களைக் கூறலாம். இது தவிர ஒவ்வொரு நாடும் வேறுசில தனித்த காரணங்களையும்  தங்கள் அழிவிற்கென வளர்த்துக் கொண்டு வருகின்றன. இதில் வளர்ந்த நாடுகளும் விதி விலக்கில்லை.வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது அக்கறை காட்டுவது போல ஆதிக்கம் செலுத்த முயலும் போது ஏற்படும் போட்டி பொறாமையால் மனவிகாரம் பெறுகின்றன. இது வளரும் போது உலகப் பெரும் போர் மூழும் அபாயமும் வளர்ந்து விடுகின்றது.இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மதம் மற்றும் சமுதாயச் சிந்தனைகளால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு வரும் ஒழுங்கின்மை வெடித்துச் சிதறும் ஒரு அபாயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.அரசியல் வாதிகளின் ஊழல்கள் ,நிர்வாகத் திறமையின்மை,நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது உண்மையான அக்கறையின்மை,மக்கள் சம்பாதித்து வாழ எல்லோருக்கும் சமவாய்ப்பின்மை,எங்கும் எதிலும் கட்டுப்பாடின்றி வளரும் அறநெறியின்ம -மக்களுக்கு மக்களே அணு குண்டாய் மாறும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்‌தி இருக்கின்றது