Wednesday, October 4, 2023

.கலைச் சொல்லாக்க நெறிமுறைகள் (Methods in terminology)      

                             

                                 

     

 

தலைப்பு : கலைச் சொல்லாக்க நெறிமுறைகள்

வெளியீட்டாளர்: அழகப்பா அரசு கலைக் கல்லூரி

ஆண்டு : ஜனவரி 2003

மொழி: தமிழ்  

கருப்பொருள்அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைகள்  தொகுப்பு நூல் )

பக்கங்கள் 171:  விலை குறிப்பிடப்படவில்லை. 

      அறிவியல் தமிழ் எனக்குப் படிக்கும் காலத்திலிருந்தே அதிக ஈடுபாடு கொண்டிருந்தேன் ..இது இன்றைக்கும் மங்காது பொங்கி வளர்ந்து வருகின்றது . 1972 ல் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறை நடத்திய ஒரு அறிவியல் ஆய்வரங்கத்தில் கட்டுரை சமர்பித்து கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. திருமணமான கொஞ்ச நாளிலேயே கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நானும் என் மனைவியும் அலகாபாத் சென்று கருத்தரங்கத்தில் கலந்து கொண்டுவிட்டு ,காசி சென்று காசி விஸ்வநாதரை த் தரிசித்தோம் . அதன் பிறகு நான் அதிகம் ஆய்வரங்கங்களில் கலந்து கொண்டதில்லை. காரைக்குடிக்கு மாற்றலாகி வந்தபின் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் மைய மின் வேதியியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்திய  கருத்தரங்கங்களில் பலவற்றில் தமிழில் ஆய்வுரைகளைச் சமர்பித்து கலந்துகொண்டேன் . அப்போது நானும் பல்கலைக் கழக நல்கைக் குழுவின் நிதி உதவியுடன் ஒரு ஆய்வங்கம் நிகழ்த்த வேண்டும் என்று விருப்பம் நீறு பூத்த நெருப்பாக என் நெஞ்சிற்குள் இருந்தது. அறிவியல் தமிழில் தொடர்ந்து பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வந்ததால் ,அதே தலைப்பில் ஒரு கருத்தரங்கம்  நடத்தினால் என்ன என்ற எண்ணம் என்னிடம் வலுத்தது . ஏற்கனவே ஒரு மாணவர் அறிவியல் தமிழில் என்னிடம் ஆராய்ச்சி செய்து வந்ததால் அந்த முயற்சி எனக்கு எளிமையாகவே இருந்தது. அப்போது கல்லூரியின் முதல்வராக இருந்த சொ.சுப்ரமணியக்கவிராயர் எனக்கு உறுதுணையாக இருந்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில். பல்கலைக் கழக நல்கை க் குழுவின் நிதி உதவியுடன்   கலைச் சொல்லாக்க நெறிமுறைகள் என்ற தலைப்பில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி விளாகத்தில்  2 நாட்கள் இந்த கருத்தரங்கம் நடந்தது . முதல் நாள் கருத்தரங்கம் முடிந்தவுடன்  கட்டுரையாளர்கள் அனைவரையும் காரைக்குடிக்கு அருகாமை யிலுள்ள  சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்றது மன மகிழ்ச்சியைத் தந்தது . இந்த ஆய்வரங்கத்தில் என்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் இரண்டுடன் மொத்தம் 16 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பொன்னம்பல அடிகளார் நிதியுதவியடன் சொல்லாக்க நெறிமுறைகள் என்ற தலைப்பில் ஒரு நூலாகஅழகப்பா அரசு கலைக் கல்லூரியின் ஒரு வெளிஈடாக  வெளியிடப்பட்டது .இந்நூலுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருப்பது நூலின் சிறப்பாகும் .இதில் இறைவணக்கம் அறிவியல் இறைவணக்கமாக கூறப்பட்டுள்ளது அதன் சிறப்பிற்கு மற்றொரு காணரமாகும். இந்நூலை  வள்ளல்  அழகப்பச் செட்டியார் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்து அழகப்பா அரசு கலைக்கல்லூரி தனது நன்றிக் கடனைத் தீர்த்துக்கொண்டுள்ளது      

Tuesday, October 3, 2023

கதைக் கணக்குகள்


 

தலைப்பு : கதைக் கணக்குகள்

வெளியீட்டாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை  

ஆண்டு மே 2000 முதல் பதிப்பு

பதிவு எண்Code A 475

மொழி : தமிழ்

கருப்பொருள்: கணக்குப் புதிர்

பக்கங்கள்: 100   விலை Rs.12

 

 

தலைப்பு : கதைக் கணக்குகள்

வெளியீட்டாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை

ஆண்டு: செப்டம்பர்   2008, இரண்டாம் பதிப்பு

பதிவு எண்ISBN 81-234-1380-7

மொழி : : தமிழ்

கருப்பொருள்: கணக்குப் புதிர்

பக்கங்கள்: 88 விலை Rs.40 

     கணக்கென்றால் பல பிள்ளைகளுக்குப் பயம். அதனால் பல குழந்தைகள் கணக்குப் பாடத்தில் ஆர்வம் காட்டமாட்டார்கள் . இதற்குத் தீர்வு காணும் பொறுப்பு பெற்றோர்களிடம்தான் இருக்கின்றது. கனக்குப் பாடத்தில் சுய விருப்பம் கொள்ளுமாறு செய்ய ஒரு சிறந்த வழி தொடக்கத்தில் கனக்குப் புதிர்கள் , கதைக்கணக்குகள் போன்றவற்றைப் பின்பற்றலாம் ..கணக்கைக் கற்பிக்கவும் கற்கவும் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் பற்றிய ஒரு முன்னுரையுடன் 16 கணக்குகள் கதையுடன் இந்நூலில் கூறப் பட்டுள்ளது கணக்கைத் தீர்வு செய்யும் வழிமுறைகள் விவரமாக விளக்கப்பட்டுள்ளதால் கதையோடு கணக்கையும் கதைபோலப் புரிந்து கொள்ள எளிதாயிருக்கின்றது    

 .அறிவியல் ஆக்கத் தமிழ்

 


 

தலைப்பு? அறிவியல் ஆக்கத் தமிழ்  

வெளியீட்டாளர்: மணிவாசகர் பதிப்பகம், சென்னை

ஆண்டு: ஆகஸ்ட் 2004

மொழி : : தமிழ்

கருப்பொருள்: அறிவியல் தமிழ்  

பக்கங்கள்:232 விலை : Rs.60 

      அறிவியல் தமிழில் எனக்குப் படிக்கும் காலத்திலிருந்தே சுய விருப்பம் இருந்தது .இதற்க்கு காரணம் கட்டுரைகள் எழுதி வெளியிட்டு பணம் சம்பாதித்து நூல்கள் வாங்கவேண்டும் என்று விருப்பியதுதான் . தொடக்கத்தில் அறிவியல் தலைப்புக்களில் கட்டுரைகள் எழுதினேன் என்னுடைய முதல் கட்டுரை 1964 ல் கலைக்கதிரில் வெளியானது பெரிய திருப்புமுனையாக அமைந்தது .அடுத்தது கட்டுரைகள் வரியா அதுவே ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தது .1985-86 களில் நூல் எழுதும் தைரியம் மலர்ந்தது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையால் . ஈர்க்கப்பட்டதால் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இனிச் செய்யவேண்டியது என்ன என்று அடிக்கடி சிந்திக்கலானேன் . ஒரு மொழியின் வளர்ச்சியை இனிமேல் அறிவியலால் மட்டுமே சிறக்கச் செய்யமுடியும் என்ற முடிவில் எனக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது . .  அழகுத தமிழின் வளர்ச்சிக்கு இனி அறிவியல் தமிழே தேவை என்பதைப் புரிந்து கொண்டு என் பணிகளைத் தொடங்கினேன் .அறிவியல் தமிழ் பற்றிய ஆராய்ச்சிக்கு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேன் (ஏ.கா. தமிழியல் 57,58,79-90, 2000. அறிவியல் தமிழில்  முனைவர் பட்டத்திற்கு அழகப்பா பல்கலைக் கழகத்தில் வழிகாட்டியாகப் பதிவுசெய்துகொண்டு என்னுடன் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர்க்கு முனைவர் பாதாம் வாங்கி கொடுத்தேன்..அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2003 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவியல் தமிழும் கலைச் சொல்லாக்க நெறிமுறைகளும் என்ற தலைப்பில் பல்கலைக் கழக நல்கைக் குழுவின் நிதி  உதவியுடன் நடத்தினேன். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் மைய வேதியியல் ஆராய்ச்சி மையம்  இணைந்து ஆண்டுதோறும் நடத்திய அறிவியல் தமிழ் பேரவை சார்பில் நிகழ்த்திய ஆய்வரங்கத்தில் கட்டுரைகள் சமர்பித்தேன். சில நேரங்களில் ஆய்வரங்கத்திற்குத் தலைமையும் தூங்கினேன் . இந்நூல் அறிவியல் தமிழி ன் வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்துகின்றது அறிவியல் தமிழ் பற்றிய கருத்துக்கள் முதல் அத்தியாயத்திலும் ,எழுத்துப் புணரியல் ,தமிழ் மொழி மரபுகள் ,வேர்க் சொற்கள் . சொல்லாட்டுக்கள் ,விகாரப் புணர்ச்சி பற்றி இரண்டாம் அத்தியாயமும் சொல்லாக்கங்களில் சொல்லமைப் புக்கள்  என்ற தலைப்பில்  பல் பின்னூட்ட விகுதிகள் பற்றி மூன்றாம் அத்தியாயமும் ,வளரும் அறிவியலுக்கு ஏற்ப புதிய புதிய கலைச்சொற்களைப்  படைக்கும் அவசியத்தைச்  சுட்டிக்காட்டி கலைச் சொல்லாக்க நெறிமுறைகள் பற்றி நான்காம் அத்தியாயமும் கூறுமாறு நூலை வடிவமைத்துள்ளேன் 

          இந்நூல் அறிவியல் தமிழில் ஆய்வு மேற்கொள்ளும் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக விளங்குகின்றது. இந்நூலும் தமிழக அரசின் சிறந்த படைப்பிற்க்கான விருதை தவறவிட்டது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது

      

Monday, October 2, 2023

காற்றை மாசுபடாமல் காப்போம்  (Protect air from pollution)

 


 

 

தலைப்பு: காற்றை மாசுபடாமல் காப்போம்  

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை

ஆண்டு  : அக்டோபர் 2005

பதிவு எண் ISBN 81-234-0975-3

மொழி : : தமிழ்

கருப்பொருள்: நலவியல்  

பக்கங்கள் 188 விலை Rs.60

 

 

. சுற்றுப்புறத்தை ஒரு தனிமனிதன் மாசுபடுத்தும் போது அது உலகளாவிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதை இது விளக்கிக் கூறுகின்றது  அறிவியல் கண்டுபிடிப்புக்கள் ஆக்கத்திற்கு. ப் பயன்பட்டாலும் அதனால் அழிவுகளும் உள்ளன என்பதை உணர்த்த இந்நூலை ஆக்கியுள்ளேன். வளி மண்டலம் , நீர் மண்டலம் மா சுபடுத்தப்படும் விதத்தை விவரிக்கின்றது. ஓஸோன் படலம் நலிவடைந்து வரும் நிலையையும் அதனால் ஏற்படும் விபரீதங்களை விள க் கிக் கூறுகின்றது .கார்பன்-டை ஆக்ஸைடு . கார்பன்  மோனாக்சைடு  சல்பர் டை ஆக்ஸைடு . நைட்ரஜென் ஆக்சைடுகள் வளிமண்டலத்தின் நஞ்சாக வளர்ந்து வருவதை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகின்றது நூலின் அடக்கம் நான்கு தலைப்புக்களில் அடங்கியுள்ளது. அவை 1.பூமியும் அதன் வளிமண்டலமும்  2.சூரிய ஒளியும் புவி வளிமண்டலமும் 3.ஓசோன்படலமும் ஓசோன் துளையும்  4.வளிமண்டல மாசுகளும் விளையும் கேடுகளும் . இந்நூல் சுற்றுப்புறச் சூழலின் தூய்மையை மேம்படுத்த மாசுக்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி கூறும் நன்முயற்சியால் சமுதாய முக்கியத்துவம்  பெற்றுள்ளது. இந்நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்க வேண்டும் . எங்கே தவறு நடந்ததோ தெரியவில்லை

 

          இந்நூல் ஆண்டுதோறும் ராயல்டி என்ற ஒப்பந்தத்தில் வெளியிடப்பட்டது .நான் எழுதி எழுதி கேட்டால்தான்  இரண்டாண்டுக்கு ஒருமுறை ஆசிரியருக்கான அன்பளிப்புத் தொகையை வழங்கிவந்தார்கள் .இப்போதும் அதையும் நிறுத்தி விட்டார்கள் .

 .நல்லவை கேட்கின் (What are the best)

 


 

தலைப்பு: நல்லவை கேட்கின்

வெளியீட்டாளர் ? மணிவாசகர் பதிப்பகம், சென்னை

ஆண்டு: நவம்பர்  2004

மொழி : : தமிழ்                                                                                                                                  

கருப்பொருள்: நன்னெறி

பக்கங்கள் 136 விலை Rs.35

 

       வாழ்ந்து மறைந்து போன முன்னோர்களின் வார்த்தைகளும் அவர்கள்  அனுபவங்களை பின்வரும் தலைமுறையினருக்குப் பயன்படவேண்டும் என்று எழுதிவைத்த நூல்களும் தான் நமக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கின்றன .இவற்றைப் புறக்கணித்துவிட்டு வேற்று வழிகளில் நாட்டம் கொண்டு விலகிச் செல்வது நம் இளைஞர்கள் செய்யும் தவறாகும் .அவர்கள் அவர்களுக்கே ஏற்படுத்திக் கொள்ளும் முன்னேற்றத் தடைகள் என்பதை உணராத வரை இதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதுஇந்நூல் பாதை தவறி நடக்கத் துணிவு துணிவு கொள்ளும் இளமைக் காலத்தில்  ஒருவருக்கு ஊட்டப்பட்டடேண்டிய ஒரு சில அறிவுரைகளைத் தொகுத்து வழங்குகின்றது

கற்ற கலவி என்றைக்கும் கைம்மண்ணளவே .எனவே கல்வி தேடுதல் என்பது வாழும் காலத்தில் ஒவ்வொருநாளும் மேற்கொள்ள அறிவுறுத்துகின்றது அதற்குச் சுய ஆர்வமும் ,பெற்றோர்களின் உதவியும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் தேவை என்று தீர்வு சொல்கின்றது .சுய மதிப்பு ஒரு வலிமையான தூண்டற்காரணி அதை ஒவ்வொருவரும் அதை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அதற்க்கான வழிமுறைகளித்த தெரிவிக்கின்றதுபடைப்புத் திறனை வளர்த்துக் கொள்வதுடன் மனித நேயத்துடன் மற்றவர்களுடன் பழகவும் தெரிந்து கொள்ள வேண்டும் .உதவி செய்யும் மனப்பாண்மை இருந்தால்தான் உதவி பெறமுடியும்உயர்விற்கு ஒழுக்கத்தின் அவசியத்தைக் கட்டாயப்படுத்துகின்றது .இந்த ஒழுக்கம் ஆன்மிகத்தைப் போற்றுவதால் மட்டுமே பெறமுடியும்  ஆன்மிகத்தை அறிவியல்பூர்வமாக விவரிக்கின்றது .ஆன்மிகம் மட்டுமே எதிர்பார்பற்ற அன்பை வளர்கின்றது 

         இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும்  பிறருக்குச் சொல்லப்படும் அறிவுரைகளாக இல்லாது எனக்கு நானே ஏற்றுக்கொண்ட கொள்கையின் வரர்த்தைகளாக உள்ளது. எனக்கு கல்வி தேடுதல் பிடிக்கும் என்பதால் அதிகம் நூல்களை வாங்கிப் படிப்பேன் , நூலகங்களுகுச் செல்வேன் .ஆன்மிகம் பிடிக்கும் இதனால் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத் தேவையான ஒழுக்கம் மேம்படுகிறது படைப்பாற்றலை   வெளிப்படுத்த முயற்சியையும் வாய்ப்புக்களையும் தேடும் இயல்பை கல்வி தேடுதலும் ஆன்மிகத்தல் வளர்ந்த மனித நேயமும் ஊக்குவிக்கின்றன


Sunday, October 1, 2023

 விளையாட்டுக் கணக்குகள் (Fun with Mathematics)

 


 

தலைப்பு : விளையாட்டுக் கணக்குகள்

வெளியீட்டாளர் : விசாலாட்சி நிலையம்  (இலக்குமி நிலையம்)

ஆண்டு : டிசம்பர்  1995

மொழி : : தமிழ்

கருப்பொருள் : பொழுதுபோக்குக் கணிதம்

பக்கங்கள் 144 விலை Rs.27

 

 

           இந் நூல் இந்திய அணுவியலின் தந்தை ஹோமி  பாபா அவர்களுக்குச் சம்பார்ப்பணம் செய்து மகிழ்வடைந்துள்ளேன் .இந் நூலில் 18 விளையாட்டுக் கணக்குகள்  ஒரு சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட  கணக்குப் புதிர்களாக அதன் தீர்வுகளுடன் விளக்கப்பட்டுஉள்ளன . விடுவிக்கும் வழிமுறைகளும் விவரிப்பட்டுள்ளன ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒன்றுக்கும்  மேற்பட்ட தீர்வுகள் இருக்கும். தீர்வுகளே இல்லாத பிரச்சனை என்று இவ்வுலகில் ஏதுமில்லை  ஒருவருடைய அறியாமையும் முயற்சியின்மையும் இந்தத் தீர்வுகளை மறைத்துவிடுகின்றன .விளையாட்டுக் கணக்குகளை இயல்பாகத் தீர்வு செய்யும் போது எதிர்கொள்ளும் எந்தச் சிக்கல்களையும் தீர்வு செய்யும் இயல்பு தானாக வந்துவிடுகின்றது எனவே இளம் வயதிலே யே குழந்தைகளுக்கு கணக்குப் புதிர்களைத் தீர்வு செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டவனேடும்  என்ற உள்ளார்ந்த என்னுடைய விருப்பதத்தின் எதிரொலியே இந்நூல் .  

 

 

எண்ணி விளையாட எண்கள் (Play with numbers0 

 

  முதல் பதிப்பு  (1989)               இரண்டாம் பதிப்பு (2003)

  விலை :15                                              விலை : 40

 

தலைப்பு: எண்ணி விளையாட எண்கள்  

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை

ஆண்டு  அக்டோபர் 1989

பதிவு எண் ISBN 81-234-0416-6

மொழி : : தமிழ்

கருப்பொருள் : பொழுதுபோக்கு க் கணிதம்

பக்கங்கள் 156  

          என்னுடைய முதல் நூல் மாய க் கட்டங்கள் வெளிவந்த பிறகு அதுவே எனக்கு ஒரு உந்த ற் காரணியாக விளங்கியது . எழுத்துக்கு வரவேற்பு இருக்கும் போது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்பினேன். ஏற்கனவே நிறைய புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளேன். நிறையக் கட்டுரைகள் எழுதி யுள்ளேன். இவற்றைவிட மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை  அவற்றோடு தொடர்புடைய பொது விஞ்ஞானக் கருத்துக்களை கூறிவந்துள்ளேன். இவையனைத்தும் எனக்கு நூல் எழுத்துவதற்குத் துணையாக இருந்தன.

      என்னுடை தொடக்க காலத்தில் கனக்குப் புதிர்களில் அதிக ஆர்வம் கட்டிவந்தேன்..அவையெல்லாம் எண்களோடு தொடர்புடையனவாக இருந்ததால் எண்களையே கருப்பொருளாகக் கொண்டு ஒரு நூல் எழுதினால் என்ன என்று நினைத்தேன். எண்கள் உலகத்தில் இருக்கும் ஒற்றை-இரட்டை எண்கள் , இருவழியொக்கும் எண்கள் ,கூட்டு எண்கள்  அவற்றின் வகுபடுத்தன்மை ,பகா எண்கள் ,ஓரிலக்க எண் மூலம் ,நிறைவு எண்கள் , வட்டச் சுற்று வடிவெண்கள், விஜயா எண்கள் போன்றவற்றை விவரித்துள்ளேன். இந்நூல் பள்ளி மாணவர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது’