காற்றை மாசுபடாமல் காப்போம் (Protect air from pollution)
தலைப்பு:
காற்றை மாசுபடாமல் காப்போம்
வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை
ஆண்டு : அக்டோபர் 2005
பதிவு எண் ISBN 81-234-0975-3
மொழி : : தமிழ்
கருப்பொருள்:
நலவியல்
பக்கங்கள் 188 விலை Rs.60
. சுற்றுப்புறத்தை
ஒரு தனிமனிதன் மாசுபடுத்தும் போது அது உலகளாவிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதை
இது விளக்கிக் கூறுகின்றது அறிவியல் கண்டுபிடிப்புக்கள்
ஆக்கத்திற்கு. ப் பயன்பட்டாலும் அதனால் அழிவுகளும் உள்ளன என்பதை உணர்த்த இந்நூலை ஆக்கியுள்ளேன்.
வளி மண்டலம் , நீர் மண்டலம் மா சுபடுத்தப்படும் விதத்தை விவரிக்கின்றது. ஓஸோன் படலம்
நலிவடைந்து வரும் நிலையையும் அதனால் ஏற்படும் விபரீதங்களை விள க் கிக் கூறுகின்றது
.கார்பன்-டை ஆக்ஸைடு . கார்பன் மோனாக்சைடு
சல்பர் டை ஆக்ஸைடு . நைட்ரஜென் ஆக்சைடுகள்
வளிமண்டலத்தின் நஞ்சாக வளர்ந்து வருவதை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகின்றது நூலின்
அடக்கம் நான்கு தலைப்புக்களில் அடங்கியுள்ளது. அவை 1.பூமியும் அதன் வளிமண்டலமும் 2.சூரிய ஒளியும் புவி வளிமண்டலமும் 3.ஓசோன்படலமும்
ஓசோன் துளையும் 4.வளிமண்டல மாசுகளும் விளையும்
கேடுகளும் . இந்நூல் சுற்றுப்புறச் சூழலின் தூய்மையை மேம்படுத்த மாசுக்களைக் கட்டுப்படுத்த
வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி கூறும் நன்முயற்சியால் சமுதாய முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான
பரிசு கிடைத்திருக்க வேண்டும் . எங்கே தவறு நடந்ததோ தெரியவில்லை
இந்நூல் ஆண்டுதோறும் ராயல்டி என்ற ஒப்பந்தத்தில்
வெளியிடப்பட்டது .நான் எழுதி எழுதி கேட்டால்தான்
இரண்டாண்டுக்கு ஒருமுறை ஆசிரியருக்கான அன்பளிப்புத் தொகையை வழங்கிவந்தார்கள்
.இப்போதும் அதையும் நிறுத்தி விட்டார்கள் .
No comments:
Post a Comment