மாணவர்கள் அதிக விழுக்காடு தேர்வில் தேர்ச்சி பெற்றால் அதற்கு நாங்கள்தான் காரணம் . உலக அரங்கில் விளையாட்டில் வெற்றிபெற்றால் நாங்கள் தான் காரணம் , வெளிநாட்டில் CEO வாக வேலைசெய்வோர் எண்ணிக்கை மிகுந்தால் அதற்கு நாங்கள்தான் காரணம் , இப்படி இயல்பாக நடக்கும் எல்லா நல்லனவற்றிற்கும் தங்களை இணைத்துக் கொள்ளும் நம் அரசியல்தலைவர்கள் , சீனாவை விட இந்தியா பொருளாதாரதில் பின்தங்கி யிருப்பதற்கும் அவர்களே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றார்கள் . சீனாவை விட இந்தியா பொருளாதாரத்தால் பின்தங்கி இருக்கலாம் ஆனால் இந்திய அரசியல்வாதிகள் அவர்களைவிட பணக்காரர்க ளாக இருக்கின்றார்கள் .
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Saturday, January 10, 2026
Friday, January 9, 2026
கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்றும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகலாம் என்றும் இன்றே பதிவு செய்துகொள்ளுங்கள் என்றும் தொட்டஇடமெல்லாம் அடுக்கடுக்காய் விளம்பரங்கள். இவை யாவும் போலித்தனமான ,மக்களைத் தவறான பாதைகளில் அழைத்துச் செல்கின்ற அறிவிப்புக்கள். ஒரு விளம்பரத்தில் கூட உண்மையான முகவரி இல்லை என்பதே அதற்குத் சான்று கூறுகின்றது. மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பது மட்டும் போதாது . அரசாங்கமும் ஏமாற்றும் பேர்வழிகளிடமிருந்து ஏமாறும் மக்களைப் பாதுக்காக்க வேண்டும்
Wednesday, January 7, 2026
.உலகம் ஒரு நாடாக இருந்தபொழுது மக்கள் எல்லோரும் இன,மத வேற்றுமையின்றி ஒருங்கிணைந்த சமுதாயமாக இருந்தனர். போட்டி பொறாமை வளர்ந்தபோது ஒருவர் மற்றொருவரை அழித்துவிட்டு முன்னேற நினைத்தனர். ஒன்று பலவானது. பல மதங்கள் . மதத்திற்குள் பல பிரிவுகள் பிரிவுக்குள் பல இனங்கள் . பல இனங்களுக்குள் பல ஏற்றத் தாழ்வுகள். பல ஏற்றத்தாழ்வுகளுக்குள் பல மொழிகள். பல நாடுகள் .எல்லாமே இயற்கைக்கு அப்பாற்பட்டு மனித மனத்தால் வளர்ச்சிபெற்று வருகின்றன.அழிவு ஆயுதங்களினால் இல்லை பொல்லாத இந்த மனதினால் தான் நிகழப்போகிறது
.அரசியல்வாதிகள் செய்யும் குற்றங்கள் பிற அரசியல்வாதிகளுக்குத் தெரியவரும் நிலையில் அதை எப்படி அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்வது என்று மட்டுமே சிந்திக்கிறார்கள் . சமுதாய நலனுக்காகத் தடுக்க நினைப்பதேயில்லை . ஆட்சியாளர்களாக இருந்தால் எதிரிகளை அச்சமூட்டி அடிபணிய வைக்கின்றார்கள் .முடியாவிட்டால் சட்டத்தின் பிடியில் மாட்டிவிடுகின்றார்கள். எதிராணியிராக இருந்தால் கூட்டணியில் இணைந்து தப்பித்து விடுகின்றார்கள் . அரசியல் இங்கே அரசியலாக இல்லை என்பது எனக்குள் வளர்ந்து வரும் ஒரு கவலையாகி வருகின்றது
Saturday, January 3, 2026
. ஓர் அரசியல்வாதியின் உண்மையான முகத்தை பிற அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருந்தாலும் போதிய ஆதரமில்லாததால் அதை வெளிப்படுத்திக்காட்டுவதில்லை. அரசின் உயர் அதிகாரிகளுக்கு அரசியவாதிகளின் முழு ஜாதகமும் தெரியும் .என்ன சொல்கின்றார்கள் என்ன செய்கின்றார்கள் அதில் உள்ள உண்மைத்தன்மை என்ன என்பது அவர்களுக்கு தெரியும். இருந்தும் குற்றம் புரியும் அரசியல் வாதிகள் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்படுவதில்லை.. நீதிமன்றமும் மக்களுக்காக வாதாடுவதில்லை .
Thursday, January 1, 2026
. அரசியலில் பதவி என்பது மக்களுக்கு லாப நோக்கற்ற சேவை செய்வதாகும் . அவர்கள் ஊழல் செய்வதும் , சுயநலத்தால் குற்றங்கள் செய்வதும் கூடாது என்பதற்காக அரசாங்கம் தெரிந்த மற்றும் தெரியாத பல அனுகூலங்களை வழங்கியுள்ளது. நல்ல மனிதர்கள் மக்களுக்குச் சேவை செய்ய விரும்புவார்கள் ஆனால் பிறரைத் தடுக்கமாட்டார்கள் .சேவை எல்லோராலும் செய்யப்படவேண்டும் அது தன்னால் மட்டுமே செய்யப்படவேண்டும் என்று நினைப்பது தவறாகும். இன்றைக்கு அரசியல்வாதிகள் விளம்பரம் செய்து போலியான சேவையை ச் செய்கின்றார்கள். அரசியலில் பதவிக்கு பெரிய அளவில் போட்டி இருக்கின்றது என்றால் பதவியால் கிடைக்கும் அனுகூலங்களை அபகரித்துக் கொள்ள போட்டி போடுகின்றார்கள் என்றே அர்த்தம் . பதவி பதவிக்காக இல்லை .சேவை சேவைக்காக இல்லை. அரசியல் வாதிகள் திருந்துவதாக இல்லை. அவர்களைத் திருத்தும் பொறுப்பு நீதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது. நாட்டில் நீதியை நிலைநாட்டுவது அவர்களுடைய கடைமையாகும்