அறிக இயற்பியல்
நிலை மின்னியலில் ஒரு மின்னூட்டத்தால் ஒரு மின்னூட்டத்தின் மீது செயல்படும் விசையை கூலும் விதியைக் கொண்டு கணக்கிட்டு அறியமுடியும் .இதன் அடிப்படையில் நாம் கணக்குகளுக்குத் தீர்வு காணமுடியும் . Q மற்றும் q என்ற இருநேர் மின்னூட்டங்கள் d என்ற இடைவெளியில் இருக்கும் போது செயல் படும் நிலை மின் விலகு விசை F. இவ்விசை பாதியாக இருக்கவும், இருமடங்காக இருக்கவும் இருக்கும் தொலைவில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் எவ்வளவு ?
இரு மின்னூட்டங்களுக்கிடையே உள்ள நிலை மின் விசை F = Q q /k d 2.,k ஊடகத்தைப் பொறுத்த ஒரு மாறிலி.இது 2F ஆக இருக்க வேண்டுமெனில் இடைவெளியைக் குறைக்கவும் F /2 ஆக இருக்க இடைவெளியை அதிகரிக்கவும் வேண்டும்.
F ' = 2F = 2 Q q /k d 2 = Q q /k (d -x )2
இத் தொடர்பிலிருந்து ,2(d -x )2 = d2 என்ற நிபந்தனையைப் பெறலாம் .இது குறைக்கப்பட வேண்டிய தொலைவை x = d [1 - 1/(2)1/2] என்று தெரிவிக்கின்றது . F ' = F /2 = Q q /2k d2 = Q q /k (d + x )2 என்ற தொடர்பு 2d2 = (d +x )2 என்ற நிபந்தனையைத் தருகின்றது .இது அதிகரிக்க வேண்டிய தொலைவு d [-1+(2)1/2] என்ற மதிப்பைத் தருகின்றது .
No comments:
Post a Comment