Micro aspects of developing inherent potentials
ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணம்போலவே வாழ்கை அமைகின்றது என்று கூறுவார்கள் .எண்ணங்களை நெறிப்படுத்திக் கொண்டு விட்டால் இனிய வாழ்கை எளிதில் வசப்படும் என்று இதன் பொருள் . பெரும்பாலானோர்க்கு இதில் நம்பிக்கை ஏற்பாடாமல் இருப்பதற்குக் காரணம் இனிய வாழ்கையை வேறு விதமாகக் கற்பனை செய்வது மட்டுமில்லை நேர் மறையாக எண்ணாமலும் ,எதிர் மறையாக எண்ணுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளதுதான் .
எதையுமே தனக்குச் சாதகமாக எண்ணுவதைவிட சமுதாயத்திற்கு இணக்கமாக எண்ணும் பழக்கம் இல்லாததால் மனம் எதிர் மறையான எண்ணங்களை மட்டுமே அசை போடுகின்றது. அதிகமான நேரத்தை ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி நினைக்கவே செலவழிப்பதால் ,மற்றவர்களைப் பற்றியும் ,சுற்றுச் சூழல் பற்றியும் ,ஒரு பொருளோடு தொடர்புடைய மாறுபட்ட கருத்துக்கள் பற்றியும் சிந்திக்கத் தவறிவிடுகின்றார்கள்.ஒரு ரூபாயில் உலகத்தைச் சுற்றிப் பார்க்க ஒருபோதும் பயணம் பண்ணிவிட முடியாது . இது பொருள் உலகிற்கு மட்டுமின்றி எண்ண உலகிற்கும் பொருந்தும் .மரத்திலிருந்து பழங்கள் கீழே விழுவதை எல்லோரும்தான் பார்த்தார்கள் ,அனால் அது பற்றி சிந்தித்துப் பார்த்த நியூட்டன் மட்டும் தான் புவி ஈர்ப்பைக் கண்டுபிடித்தார் .பழம் ஒவ்வொருமுறையும் ஏன் கீழே விழவேண்டும் மேல் நோக்கி ஏன் விழக்கூடாது என்று மாறுபட்டு சிந்தித்ததின் விளைவே இந்த வெற்றி .தேவாலயத்தில் காற்றில் ஆடிக் கொண்டிருந்த லாந்தர் விளக்கைப் பற்றி சிந்தித்ததால் கலிலியோவால் ஊசலைக் கண்டுபிடிக்க முடிந்தது. அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பானையின் மூடி நீராவியால் தூக்கி எறியப்படுவதைப் பார்த்து சிந்தித்த ஜேம்ஸ் வாட் நீராவியின் ஆற்றலைக் கண்டுபிடித்தார்.வித்தியாசமாகச் சிந்திக்க முடிந்தால் நாமும் அவர்களைப் போல முயற்சிகளில் வெற்றிவாகை சூடமுடியும்
சிந்தனைகளை வளப்படுத்துவது மனதில் தோன்றும் எண்ணங்களே .இந்த எண்ணங்கள் மரபு வழியிலான நிர்பந்தங்களினால் சமுதாய நலம் கருதி கட்டுப்படுத்தப்படுவதுண்டு .அதைப் புரிந்து கொண்டு மாறுபட்டு வேறு கோணங்களிலும் சிந்திக்கும் பழக்கத்தை வழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும் .சில சமயங்களில் தவறான திசையில் எண்ணுமாறு நாம் பிறரால் தூண்டப்படுவதுமுண்டு. இது வித்தியாசமாகச் சிந்திக்கின்றோம் என்று வினையில் சிக்கிக் கொண்ட மாதிரித்தான் .தந்திரக் காட்சிகளைக் காட்டுபவர்களுக்கு பார்போரின் சிந்தனைகளை தவறான திசையில் எடுத்துச் செல்வதில் தான் வெற்றி இருக்கின்றது .அவர்கள் காட்சி முடியும் வரை நம்மை முட்டாளாக்கி வைத்திருப்பார்கள் .நம் கண்களை விட அவர்கள் கைகள் மிக விரைவாகச் செயல்படுவதால் அவர்களால் அப்படிச் செய்ய முடிகின்றது.அங்கே மறுக்க முடியாததால் தவறான எண்ணங்களை அப்படியே ஒப்புக் கொண்டுவிடுகின்றோம்.
6 க் குறிக்கும் சொல் SIX .இதில் ஒரேயொரு மாற்றம் செய்து 9 ஆக மாற்றவேண்டும் என்று சொன்னால் சிந்தித்து எவ்வளவு விரைவில் முடித்துக்காட்டுவீர்கள் ? இது உங்கள் சிந்தனைக்கு ஒரு சிறு போட்டிதான்.சிந்தித்து பழக்கப்பட்டவர்களுக்கு இது மிக எளிது. S என்ற எழுத்தை நீக்கிவிட்டால் 9 யைக் குறிக்கும் ரோமன் குறியீடு கிடைக்கும் .
No comments:
Post a Comment