Sunday, February 17, 2013

Creative thoughts


அன்பு

இயற்கை மனிதனுக்குத் தந்த அணிகலன் அன்பு மட்டும்தான் .நாம் தான் அதை விட்டுவிட்டு திருநீறு ,நாமம் ,சிலுவை ,சுன்னத் என்று வேண்டாத அணிகலன்களை அணிந்து கொண்டிருக்கின்றோம் .அதில் நமக்கிருக்கின்ற நம்பிக்கை வேறு ,வழிவழியாக வரப்பெற்றது .அணிகலன் உடலில் இருப்பதை விட மனதில் இருப்பதே நல்லது .மனதில் அணிகலன் இல்லாமல் உடலில் எவ்வளவு அணிகலன்கள் இருந்தும் என்ன பயன்.?

மக்கட்தொகை பெருகப்பெருக நெருக்கத்தினால் மனிதர்கள் நெருங்கி வந்தாலும் மனம் என்னவோ விலகிச் செல்கிறது.மனித நேயம் நலிவடைந்து கொண்டே வருகின்றது .அதாவது மனிதன் மற்றொரு மனிதனை மேலும் எதிராகப் பார்க்கின்றான் என்று பொருள் அளவில்லாத ஆசைகள் ,வேண்டாத ஆசைகள், விபரீதமான ஆசைகள்,விளையாட்டான ஆசைகள் ,இப்படி ஆசைகள் பெருகிக் கொண்டே போனால் மனித நேயம் நலிவடையவே செய்யும் .

ஓர் உயிருக்கு ஆயிரமாயிரம் ஜென்மங்கள் உண்டு. அடுத்தடுத்த ஜென்மங்களில் ஓர் உயிர் அதே உயிரினமாகப் பிறக்கக்கூடிய வாய்ப்பு மிக அரிது.தொடரும் ஜென்மங்களில் ஓர் உயிர் பலதரப்பட்ட உயிரினங்களாகப் பிறந்து வாழ்ந்து மடிகின்றது .ஒரு ஜென்மத்தின் மறைவு மறு ஜென்மத்தின் பிறப்பிற்காகவே. வெவ்வேறு ஜென்மங்களில் வெவ்வேறு உயிரினமாகப் பிறப்பதால் எல்லா உயிரினங்களையும் நேசிக்க வேண்டும்,கொல்லாமையைப் போற்றவேண்டும் .நாம் இப்போது விலங்கினங்களை நேசிக்காவிட்டால் நாம் அதே விலங்கினமாகப் பிறந்து வாழும்போது நம்மை யார் நேசிப்பார்கள் ,முன்பு நாம் செய்யத் தவறிய செயல்களே பெரிதாக வளர்ந்து முன்னைவிடத் தீவிரமாக நம்மீதும் பாயும்

அன்பு மனதிற்கு மகிழ்ச்சியையும் தெம்பையும் தரும்.உலகத்தாரை உற்றாராக்கும் ,கொடிய காட்டு விலங்கினங்களைக் கூட தோழமை பாராட்டும் .மனதில் ஏற்படும் தேவையில்லாத மற்றும் தவறான ஆசைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும். நல்ல குறிக்கோள்களை தொடக்கத்திலேயே மனதில் விதைக்கும்.

சாகாத சமுதாயத்திற்கு அன்பு தான் உயிர்நாடி

அன்பில்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை எதோ விபத்தில் பிறந்து காலத்தைக் கழிப்பதற்காக வே வாழ்கை என்பதைப் போல வாழ்கையில் ஒரு இனிமையே இருப்பதில்லை

பிறப்பொக்கும் எல்லா உயிரினங்களும் அன்பெனும் உணர்வோடுதான் பிறக்கின்றன. இதில் மனிதன் மட்டும் வளரும் போதே தொலைத்துவிட்டுத் தடுமாறுகின்றான்.

No comments:

Post a Comment