Saturday, August 22, 2020

god-10

கடவுள் -10

பிரச்சனையோ அல்லது விவாதமோ  எதுவானாலும் , மனிதன் மனிதனை வெல்வது என்பது முக்கியமில்லை. .மனிதன்  முதலில் தன்னைத் தானே வெல்ல வேண்டும் .அப்பொழுதுதான் அவன் பிறரை நேர்மையாக வெல்லும் பக்குவத்தைப் பெறமுடியும். அதுதான் ஒருவனுக்கு மட்டும் வெற்றியா இல்லை உலகத்துக்கே வெற்றியா என்பதைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது. பேரண்டத்தின் வளர்ச்சிக்கும் இயக்கங்களுக்கும்  அறிவியல் விளக்கம் கொடுக்கும் என்றாலும் பேரண்டத்தின் பரந்த  கட்டமைப்பிற்குத் தேவையான வெளி மற்றும் ஆற்றலுக்கான மூலத்தை அறிவியல்பூர்வமாக கற்பிக்க முடியவில்லை.  கடவுள் இருக்கின்றார்,இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சம் தோன்றியிருக்கவே முடியாது. செய்து முடிக்கப்பட்ட ஒரு  செயல் மனிதர்களால் முடியாது முடியவே முடியாது என்று தெரியவரும்போது அது மக்கள் மனதில்  கடவுள் நம்பிக்கையை நிலைப்படுத்துகிறது. கடவுளின் பெயரால் மக்கள்  ஏமாற்றப்படுவது, கடவுளின் சொத்துக்களை களவாடுவது , மதச் சாயங்களை பூசுவது போன்ற இன்ன பிற காரணங்களுக்காக கடவுள் நம்பிக்கைமறுக்கப்படுகின்றது.   கொள்பவனும் வாழ்கின்றான் .கடவுள் இல்லை . இந்த உலகில் எம்மதத்தைச் சேர்ந்தவர்களாக  இருந்தாலும்,இந்த உலகில் கடவுள் நம்பிக்கை உள்ளவனும் வாழ்கின்றான் , கடவுள் நம்பிக்கை இல்லாதவனும் வாழ்கின்றான். . இது உலகில் வாழ்வதற்கு கடவுள் ஒன்றும் அவசியத் தேவையில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது

கடவுள் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகம் என்பது ஒருவிதத்தில் அறிவியலே. இயல்பாக வாழும் கலையை வாழ்க்கையின் போக்கிலேயே எளிமையாக யாவர்க்கும் கற்றுக்கொடுக்கின்றது. நலமான சமுதாயத்திற்கு வேண்டிய சுய ஒழுக்கங்களை தனிமனிதனுக்கு உணர்த்துகின்றது .இயற்கையைப் பார்த்துப் பார்த்து பாடம் கற்றுக்கொண்டு வாழ்க்கையை மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்ளும் அணுகுமுறை .இயற்கையின் வழிமுறைகளே ஆன்மிகத்தின் நெறிமுறைகளாக இருப்பதால் ஆன்மிகம் அறிவியல் போல யாராலும் மறுக்கமுடியாததாக இருக்கின்றது . சுய நலத்திற்காக ஆன்மிகத்தைச் சீர்குலைத்தவர்களும்,மெய்ப்பொருளைஅறியாமல் கடவுள்மறுப்புக்  கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களும் ஆன்மிகத்தில்  ஒளிந்திருக்கும் அறிவியலை காணாமற் செய்துவிட்டார்கள் பிறருக்கு உதவி செய்து , பிறரிடமிருந்து உதவி பெற்று தானும் வாழ்ந்து தன்னுடைய சமுதாயமும் வாழ மனப்பக்குவம் வேண்டும் . அத்தகைய உயரிய மனப்பான்மையைத் தருவது ஆன்மிகமே என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள் .     

No comments:

Post a Comment