Thursday, August 20, 2020

god--7

 

கடவுள் -7

யார் தன்னுடைய மனமே தனக்கு உதவிசெய்யக்கூடிய கடவுள் என்று நினைத்து தனக்குத் தானே வேண்டிகொள்கின்றார்களோ அவர்கள் பிறரிடம் அது கடவுளேயானாலும் கேட்டுப் பெறுவதற்கு ஏதுமில்லை. உண்மையில் மனதை மனிதன் ஆள்கின்றானா அல்லது மனிதனை மனம் ஆள்கின்றதா என்பதை பொறுத்தே இது தீர்மானிக்கப்படுகின்றது. ஏனெனில் மனிதனால் ஆளப்படும் போது மனம் அவனுக்கு நல்ல  நண்பனாக இருக்கின்றது  ஆனால் அவனே மனதால்  ஆளப்படும் போது அவனுக்கு அவனே எதிரியாகிவிடுகின்றான். ஒருவனுக்கு ஏற்படும் துன்பங்களில் நண்பர்கள் மட்டுமே எதிர்பார்ப்பின்றி பங்குகொள்கின்றார்கள்

மனமே சிந்திக்கின்றது. திட்டமிடுகின்றது .ஆலோசனை கூறி வழி நடத்திச் செல்கின்றது . உண்மையில் வாழ்க்கைப்  போராட்டத்தில் மனமே முக்கியப் பங்கேற்கின்றது . மனம் வாழ்க்கையின் அகநிலை , உடல்  புறத் தொடர்புகளுக்கான ஓர்  ஊடகம் மட்டும்  தான் ஒவ்வொருவருடைய மனமும் அவர்களுடைய விருப்பத்தையும் தகுதியும் எடைபோட்டு ,என்ன செய்யமுடியும் என்பதைத் தெரிவிக்கின்றது. நிறைவேற்ற முடியாத விருப்பமாக இருந்தால் , தகுதியை மேம்படுத்திக்கொள்ள அறிவுறுத்தும். அந்த அறிவுரையை மதிக்காதவர்களே மனதையும் கேளாமல் தவறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள். அதன் பிற்பயன்களை அனுபவிக்கின்றார்கள் துன்பப் பட்டு வேண்டிக்கொள்ளும் அந்த மௌன மொழியை மனம் மட்டுமே அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறது. அந்தத் துன்பம் ஏன் வந்தது , அதைப் போக்க என்ன செய்யலாம் ,என்று ஆராய்ந்து தக்க வழி சொல்கின்றது ..மனதின் இந்தத்  தனிச்சைச் செயல் ஒருவரின் தகுதியையும் ஆற்றலையும் பொறுத்தது என்பதால் இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றது .அறிவும் புரிதலும் இணைந்து பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கின்றன இழப்பால் வந்த துன்பம் அதை வென்று பெறுவதால் மகிழ்ச்சியாக மாறுகின்றது.     ஒருவர் என்னவெல்லாம் வேண்டும் என்று விரும்பி செயல்பட்டாரோ , அதை மனதின் வழிகாட்டலால் உடல் செய்த உழைப்பு கொடுக்கின்றது. இந்த நடைமுறையில் கடவுள் எங்கிருந்து வந்தார் ? எல்லாக் கடவுள்களும் அந்த மனதிற்குள் அடக்கமாகிப் போய்விடவில்லையா ?

  மனம் என்பது பிறக்கும் போதே ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுத்த ஒரு புதையல்.மண்ணுக்குள்  புதைந்திருப்பது மட்டுமல்ல மனதில் புதைந்திருப்பதும் புதையல்தான். மண்ணைத் தோண்டினால் தான் புதையல் கிடைக்கும் .மனதைத்  தூண்டினாலும்  புதையல் கிடைக்கும். மனம் கற்பனை சக்தியை அதிகரிக்கக் கூடியது .இந்த கற்பனை அறிவைவிட ஆக்கத் திறன் மிக்கது என்று சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞராகப் போற்றப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுவார்         

No comments:

Post a Comment