கடவுள் -11
இன்பங்கள்
வந்தால் அது தன்னுடைய முயற்சியால் விளைந்தது என்று யாருக்கும் தெரிவிக்காமல் ,பங்களிக்காமல்,
முழுதாக அனுபவிக்கிறார்கள் ஆனால் துன்பம் வந்தால் உலகமே திரண்டு வந்து கவனிக்க வேண்டும்
என்று எதிர்பார்க்கின்றார்கள். இன்பம் கிடைத்ததிற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டு
, துன்பம் வந்த போது கடவுளிடம் அடிக்கடி முறையிடுகிறார்கள் .கடவுளுக்கு நன்றி சொல்வது
என்பது பலனில் ஒரு பகுதியை ஏழை எளியவர்களுக்கு கிடைக்கும்படி பங்கீடு செய்வதாகும். அதை எளிமைப்படுத்த
கோயில் நிர்வாகம் எடுத்த முயற்சியே உண்டியல்.. ஆனால் இன்றைக்கு உண்டியல் வருமான தவறான வழிமுறைகளில் களவாடப்படுவதால்
ஏழை எளிய மக்களுக்குப் போய்ச் சென்றடைவதில்லை..
கடவுளிடம்
அடிக்கடி இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கும் ஒரு மனிதன் முணுமுணுப்பதைக் கேளுங்கள்.
. "கடவுளே உனக்கு செவி இருக்கின்றதா ? நான் சொல்வது மட்டும் ஏன் உனக்கு கேட்கவில்லை?
. அடுத்த வீட்டுக் காரனுக்கு மட்டும் கேட்டதெல்லாம் கொடுக்கின்றாயே, ஏன் இந்த ஓரவஞ்சனை
?"
கடவுள்
கற் சிலைதான் . அதிலிருப்பது உயிரற்ற உடல் ,செயலாற்ற உறுப்புக்கள் . அதனால் கடவுளால்
மனிதர்களை போல பார்க்க முடியாது , கேட்க முடியாது , பேச முடியாது. அவருக்குத் தெரிந்தெதெல்லாம்
மௌன மொழிதான் . அதை மொழிபெயர்க்கத் தெரிந்தால் அவரிடம் நாம் பரிபூர்ணமாக உறவாடமுடியும்
.
தன்
சன்னதிக்கு வந்து முறையிடுவோர்க்கு கடவுள்
மௌன மொழியில் கூறிய வார்த்தைககள் எனக்குப் புரிகின்றது. உங்களுக்கும் புரியும்
என்று நினைக்கின்றேன் .
"
எதையெல்லாம் விருப்பிக் கேட்டாயோ அதையெல்லாம் முயன்று பெறுவதற்குத் தேவையான எல்லாவற்றையும் நீ பிறக்கும்போதே அளித்துவிட்டேன். அவற்றைப் பயன்படுத்தாவிட்டால்
காலப்போக்கில் அவற்றை நீ நிரந்தரமாகவே இழந்து விடுவாய். இந்த உறுப்புக்கள் எல்லாம்
தேவையில்லை என்றால் அதை பயன்படுத்தக் கூடிய வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு அப்புறம்
என்னிடம் வந்து முறையிடு”.
“நான்
உயிரற்ற கற் சிலை என்னால் மனிதர்களை போல செயல்களைச் செய்யமுடியாது. கற் சிலையான என்னால்
காரியங்கள் செய்யமுடியும் என்று நீ எதிர்பார்க்கும் போது உயிருள்ள செயல்திறன் மிக்க
உன்னால் எப்படி முடியாமற் போனது ?
கடவுளிடம்
எதைக்கேட்டாலும் தருவான். எப்போது. அந்தக் கடவுள் நமக்குள் இருப்பதாக நாம் உணரும்போது. உண்மைதான். நாம் எதை வென்றெடுக்க விரும்பினாலும்
அதை நிச்சியமாக நம்முடைய ஈடுபாட்டினால் மட்டுமே பெறமுடியும். நம்முடைய
தகுதிக்கு மீறிய எதையும் நம்மால் ஒருபோதும் பெறமுடியாது .அப்போதுதான் கடவுள் நம்முடைய
குரலுக்கு செவிகொடுக்க மறுப்பது போலத் தோன்றும். அப்படி கடவுள் மறுப்பது
கூட ஒருவரின் நலத்திற்குத்தான் . ஏனெனில் தகுதிக்கு மீறிய எதையும் ஒருவரால் நீண்ட நேரம்
தாங்கிக் கொள்ளவே முடியாது. அதனால் விரைவில்
அதை இழக்க வேண்டிய நிலை வரலாம். இந்த உண்மையை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதற்காக
த்தான் உலகில் மனிதனைத் தவிர பிற உயிரினங்க ளையும் படைத்திருக்கிறார்ன் .ஒரு மரம் காய்களைத்
தாங்கிக்கொள்ளும் வலிமையற்று இருந்தால் அது காய்ப்பதில்லை. தன் தகுதியறிந்தே மரங்களெல்லாம் பூத்துக் காய்க்கின்றன.
இயற்கையைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ளாத மனிதர்களே தன் தகுதியை முன்னறிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள்.
No comments:
Post a Comment