Thursday, August 20, 2020

god-6

 

கடவுள் -6.

“உன்னுடைய முயற்சி எதுவானாலும்

                கடவுள் அதைக் கவனிக்கிறார்

உன்னுடைய போராட்டம் ஏதுவானாலும்

                கடவுள் அதை அறிகின்றார்

உன்னுடைய கூக்குரல் எதுவானாலும்

               கடவுள் அதைக் கேட்கின்றார்

உன்னுடைய   துன்பம் எதுவானாலும்

               கடவுள்  துணை புரிகின்றார்

உன்னுடைய  பிரச்சனை எதுவானாலும்

             கடவுள் புரிந்து கொள்கின்றார்

உன்னுடைய தேவை எதுவானாலும்

            கடவுள் அதற்கான தகுதியைத் தருகின்றார்”

ஆறுதலான இந்த கருணை மொழிகள் தீராத துன்பத்தால் துயருற்று கடவுளிடம் அழுது முறையிடும் பக்தர்களுக்கு சில ஆன்மிகவாதிகள் அடிக்கடி கூறும் வார்த்தைகள்தாம் . இந்த வர்ணனையை மேலோட்டமாகப் பார்த்தால் வழக்கமான கருத்தும் ,நுணுகிப் பார்த்தால் பிறிதொரு கருத்தும்  மெய்யறிவிற்குப் புலப்படும். ஒவ்வொருவருக்கும் அவரவர் மனமே கடவுள் என்பதை இவ்வரிகள் சுட்டிக்கட்டுகின்றன, இதிலுள்ள கடவுள்  என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு  (உன் )மனம் என்ற சொல்லைப்  பதிலீடு செய்தால் கடவுளை  இனமறியச் செய்கின்றது    கருத்துக்கள்  மாறாவிட்டாலும் கடவுளின் அர்த்தம் மனமென மாறுகின்றது. எந்த மனம் கடவுளை உண்டாக்கியதோ அந்த மனமே கடவுளாக இருக்க முடியும் என்பதை மறுப்பதற்கில்லை .

வெளிப்படையாகச் செய்தாலும் . மறைமுகமாகச் செய்தாலும். செய்யப்படும் எல்லாச் செயல்களையும் செயலைச்  செய்பவரும் , கடவுளும் மட்டுமே அறிவார்கள். இதைத்தான் மனச்சாட்சி என்று கூறுகின்றார்கள்.யாருக்கும் பயப்படாவிட்டாலும் ஒவ்வொருவரும் அவர்களுடைய மனச்சாட்சிக்குப் புயப்படவேண்டும் .அந்தரங்கமாகத் தவறுகளைச் செய்துவிட்டு , அதை யாரும் பார்க்கவில்லை என்று மகிழ்ச்சி கொள்ளவேண்டாம் .மனச்சாட்சி உறுத்தும் போது ஒரு நாள் தவறு செய்தவரே தன வாயால் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்கும் நிலை வரலாம் . பரிணாம வளர்ச்சியால் அவர்களுடைய வாரிசுகளை நேரடியாகவோ , மறைமுகமாகவோ பாதிக்கச் செய்யலாம். ஒருவர் மற்றவரைப்    

 பார்த்துத்தான் தீயவைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை..ஊகித்தும் ,உணர்ந்தும் பின்பற்றமுடியும் .பிறந்த கன்றுக்குட்டி எழுந்து நின்று ஓடுவதும்,, தாயை இனமறிந்து மடி தேடிப் பால் குடிப்பதும், ஆமைக் குட்டிகள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் கடலைத் தேடி நகர்வதும் , மீன்கள் நீருக்குள் நீந்திச் செல்வதும் ,பிறந்த உயிரினங்கள் எல்லாம் பிறந்தவுடன் சுவாசிப்பதும் எல்லாம் உணர்வுகளின் தூண்டுதலே. பரிணாம வளர்ச்சியால் உள்ளுக்குள்  ஊறும் உணர்வுகளே அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கின்றது . நல்ல எண்ணங்கள் பரிணாம வளர்ச்சியில் உயர் நிலைக்கும், தீய எண்ணங்கள் தாழ்ந்த நிலைக்குப்பின் காரணமாக அமைகின்றன,

No comments:

Post a Comment