கடவுள் -8
கடவுளுக்கு அடிப்படை அறிவியல்
கடவுளைத் துதிப்பது ஆன்மிகம்
கடவுளை அறிந்துகொள்வது புறவியல்
கடவுளை புரிந்து கொள்வது அகவியல்
ஆன்மிகத்தை
நாம் நன்கு அறிவோம். ஆனால் ஆன்மிகத்திற்குள் இருக்கும் அறிவியலை நாம் முழுமையாக அறிந்திருக்கவில்லை.
கடவுளை அறிந்து கொண்டால்தான் புரிந்து கொள்ள முடியும் பெரும்பாலானோர் புறவியலோடு நின்று விடுவதால் கடவுளின் மெய்ப்பொருளை
உணரத் தவறிவிடுகிறார்கள். சாதாரண மக்கள் மட்டுமின்றி ஆன்மிகவாதிகள் கூட இதில்
பிழை செய்துவிடுகிறார்கள். அதனால் கடவுள் கொள்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமல்
, பல நூற்றாண்டு காலமாக விவாதப்பொருளாவே இருந்து வருகின்றது. வேற்றுமை நிலைத்திருக்க
, கடவுள் கொள்கையோடு மதம் , இனம் எனப் புறச்சாயம் பூசிவிடுகின்றார்கள்
உடலால்
கடவுளைத் துதிக்கலாம் ஆனால் புரிந்து கொள்ள முடியாது. அது மனத்தால் மட்டுமே இயலக்கூடியது
.ஒரு ஜென் கதை இக்கருத்தை மிக அற்புதமாக விவரிக்கின்றது .
ஜப்பானியத்
துறவிகளை ஜென் என்பார்கள் .ஜென் துறவியிடம் மாணவராகச் சேர்ந்து ஆன்மிகத்தை கற்றுக்கொள்ள
ஒருவர் வந்தார்.அவர் தன் வருகையைத் தெரிவிப்பதற்காக வாசலில் கட்டப்பட்டிருந்த மணியை
அடித்து ஓசையை எழுப்பி பின் அனுமதி பெற்று உள்ளே சென்றார்.
"மணி
இருப்பதால் அதை அடித்து ஓசையை எழுப்ப முடிகின்றது
. அந்த மணி அங்கு இல்லையென்றால் நீ என்ன செய்வாய்" என்று துறவி மாணவரைப் பார்த்துக் கேட்டார் .அதற்கு
அந்த மாணவர் கைகளைத் தட்டி ஓசை எழுப்புவேன்
என்றர். ஒரு மாணவன் தன் வருகையை ஒரு ஆசிரியருக்குத் தெரிவிக்க கை தட்டுவதோ, விசிலடிப்பதோ
மரியாதையில்லை.
"இரன்டு
கைகளால் தட்டி ஓசை எழுப்புவதைக் கேட்டிருப்பாய் . இப்பொழுது நீ ஒரு கை
ஓசையைக் கேட்டு எனக்குக் காட்டு. ஆன்மிகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால்
ஒரு கை ஓசையை ஒருவர் அறிந்திருக்க வேண்டும் " என்றார் துறவி .
இந்த
மாணவன் ஒரு கையால் இசைக்கக்கூடிய இசைக்கருவியை இசைத்துக் கட்டினான். “இல்லை இல்லை இது
ஒரு கை ஓசையில்லை நீ இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை” என்றார்
துறவி.
கடிகார
ஓசை , இலைகளின் சலசலப்பு .நீர்வீழ்ச்சியின் ஓசை . பறவைகளின் குரல் .கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு இப்படிப் பலவற்றைச் செய்து காட்டியும் எல்லாவற்றையும்
ஜென் துறவி மறுத்துவிட்டார், பலமுறை தோற்றுப்போன அந்த மாணவன் இனி என்ன செய்யலாம்
என்று யோசித்துக்கொண்டே தியானத்தில் ஆழ்ந்துவிட்டான் . அப்போது அவன் மனதில் பல விதமான மௌன ஓசைகளைக் கேட்டான். யாரோ உள்ளுக்குள்
இருந்து கொண்டு பேசுவது போல இருந்தது .அது
தான் ஒரு கை ஓசையாக இருக்கவேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டான் .புறத் தொடர்பு ஏதுமின்றி ஒருவர்
தன்னைப்பற்றித்
தானே அறிந்து கொள்வது ஒருகை ஓசை.ஒரு கை ஓசை மட்டுமே கடவுளைப் பற்றிய புரிதலைத் தரும்
No comments:
Post a Comment