Tuesday, August 18, 2020

GOD-5

 

கடவுள் -5

 இஸ்லாமியர்கள் தங்களுக்குரிய கடவுளை அல்லாஹ் என்று அழைத்தாலும் அருவமாகவே வர்ணிக்கின்றார்கள் .அரேபிய மொழியில் அல்லாஹ் என்றால் வணங்கப்படுவது என்று பொருள். இச் சொல் பால் வேற்றுமையற்ற சொல் மேலும் இதற்குப் பன்மையுமில்லை. அரேபியர்கள் அதி காலத்தில் இயற்கையை வணங்கி வாழ்ந்திருக்க வேண்டும் . இயற்கைக்கு ஆண்பால், பெண்பால்  என்ற பாகுபாடு கிடையாது. பன்மையில் குறிப்பிடப்படுவதுமில்லை.   அரேபியர்கள் தாங்கள் வணங்கும் மண் ,மரம் தொடங்கி மரணித்த மூதாதையர்களையும்  கடவுளாகக் கருதினார்கள். வணங்கப்படும்  திணைப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்க அவற்றை இல்லாஹ் என்று குறிப்பிட்டார்கள். வணங்கப்படும் எதுவும் கடவுளே என்ற நிலைக்கு மாறினார்கள் .அல்லாஹ் , இல்லாஹ் என்ற பலவீனமான கடவுளின் சித்தாந்தத்தை  முறைப்படுத்தி உலகிற்கு ஒரே இறைவன் என்ற கருத்தை நிலைப்படுத்திய போது இஸ்லாம் தோன்றியது .இவர்களுடைய கடவுள் கொள்கை ,கடவுளின் மெய்ப்பொருளை விளக்கிக்  கூறாவிட்டாலும் ,கடவுளின் தகுதியை வரையறுத்துக் கூறுவதில் முதன்மையாக விளங்கியது . இதன் படி கடவுள் என்பது ஒரு பொருளே இல்லை, அது உணர்வுகளின் படைப்பாக த் தோன்றுவதுமில்லை .கடவுளை எவராலும் அடக்கியாளமுடியாது ஆனால் கடவுள் இந்த உலகத்தை மட்டுமல்ல ,பிரபஞ்சத்தையே ஆளக் கூடியவர்.   முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு அப்பாற்பட்ட பண்பு களைப்  பெற்றிருந்தாலும் , நமக்கு மிகவும் அறிமுகமான பல பொருட்களுடன் நிறைந்திருக்கின்றார்  பல கடவுள் கள்  இல்லையென்று   மாபெரும் சக்தியான ஒரே இறைவனை உருவாக்கி அல்லாஹ் என்ற அழைத்தாலும்   வெவ்வேறு துறைக்கென 99 வகையான துணைப் பெயர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.  அதில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு கடவுள் என்பதற்கும், ஒரே கடவுள் பல துறைகள் என்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை.    

அரேபியர்கள் மற்றும்  இஸ்லாமியர்களின் கடவுள் பற்றிய கருத்துக்கள்   ஆதிகாலத்தில் மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான  இயற்கையைத்தான் கடவுளாக வணங்கினார்கள் என்பதையும்  ,பின்னர் காலமாகிப் போன மூதாதையர்களையும்  வணங்குவதற்குரிய கடவுளாக்கிக் கொண்டார்கள்  என்பதையும் தெரிவிக்கின்றன உண்மையில் மரணம் என்பது மனிதன் இயற்கையோடு மீண்டும் ஒன்றரக் கலக்கும் நிலைதான். அதனால்தான் ஒருவர் இறந்ததைக் குறிப்பிடும்போது அவர் இறைவனடி சேர்ந்தார் என்றும், காலமாகிப் போனார் என்றும் கூறுவார்கள்

இறப்பு என்பது இயற்கையோடு கலப்பு என்றாலும் அதை உணர்ந்து  மரணித்த முன்னோர்களை  வணங்கினார்கள் என்று சொல்வதற்கில்லை . அவர்கள் காலத்தில் இறந்து போன மன்னர்கள் மீண்டும்  வருவார்கள் என்று பாடம் செய்து புதைத்து எழுந்து வர வணங்கினார்கள் . அந்தப்பழக்கத்தையே  பின்னாளில் சமுதாயம்   பின்பற்றியது. எனவே இயற்கையை மட்டும் வணக்கத் திற்குரிய கடவுளாகக் கொண்டு வாழ்ந்த ஆதிகால மக்களோடு கடவுளின் மெய்ப்பொருள் காணாமற் போனது . பின்னால் வந்தவர்கள் அவரவர் விருப்பத்துக்கேற்ப கடவுளின் நிறத்தை மாற்றி அமைத்துக் கொண்டதே இதற்கு  க் காரணமாக அமைந்தது.,  

No comments:

Post a Comment