மின்முலாம் பூசுவது எப்படி? (How to peform electroplating ?)
தலைப்பு : மின்முலாம் பூசுவது எப்படி?
வெளியீட்டாளர் இலக்குமி நிலையம் ,சென்னை
ஆண்டு அக்டோபர் 1992
மொழி : தமிழ்
கருப்பொருள் : அறிவியல் தொழிநுட்பம்
பக்கங்கள்: 80 விலைRs.10
மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் போது சில
பெற்றோர்கள் சீர் செய்ய வைக்கும் நகைகளை ப் பொலிவூட்ட தங்க முலாம் பூசுவதை பார்த்திருக்கின்றேன்
.இளமறிவியல் மாணவர்களுக்கு மின்னியல் பாடம் நடத்தும் போது மின்னார் பகுப்பு பற்றி பாடம்
நடந்தியிருக்கின்றேன் ..அப்போது மின்முலாம் பூச்சை நாமே செய்து பார்த்தல் என்ன என்று
நினைப்பேன். உண்மையில் காப்பர் வோல்டா மீட்டர் சோதனையில் தக ட் டிற்கு செம்பு முலாம்
பூசுவதேயாகும் .. ஆனால் வீட்டில் நிக்கல் முலாம் செய்து பார்க்கையில் ஒவ்வொருமுறையும்
தோற்றுப்போனேன் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மூதறிவியல் படித்து முனைவர் பட்டம்
பெற ஆராய்ச்சியும் செய்து அப்பியுள்ள ஆசிரியர்களும் தொடர்பு கொண்டிருந்ததால் 20 களில் என்னை பல்கலைக்கழகத்திற்கு மாற்றலாகி வருமாறு கேட்டுக்கொண்டார்கள்
. நான் அரசுப்பணியை விட மனமில்லாமல் மறுத்துவிட்டேன். எனினும் நான் மாணவர்களின் செய்முறைத்
தேர்வுக்கும் விடைத்தாள் திருத்தும் பணிக்கும் அடிக்கடி அழைக்கப்பட்டேன் . ஒருமுறை அப்படிச்
சென்றபோது அங்குள்ள வேதிப் பொறியியல் விளாகத்தைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.அப்போது
திரு சபாரத்தினம் பல்கலைக் கழகத்தின் பதிவாலாக இருந்தார்..அவர்களை எனக்கு முன்பே பழக்கம் என்பதால் அவருடை உதவியுடன் அங்குள்ள நூலகத்திலிருந்து
மின்முலாம் பூசும் தொழில்நுட்பம் பற்றிய ஒரு சில நூல்களைக் கடனாகப் பெற்று படித்தேன் நான் புரிந்து கொண்ட விஷயங்களே இந்நூலுக்கு
அடிப்படையாக அமைத்தத. இந்நூலை என் குழந்தைகளுக்கு
அன்பளிப்புச் செய்துள்ளேன்:
No comments:
Post a Comment