Sunday, October 8, 2023

 செய்து மகிழச் சின்னச் சின்ன சோதனைகள்

 


தலைப்பு : செய்து மகிழச் சின்னச் சின்ன சோதனைகள்

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை

ஆண்டு டிசம்பர் 2000 முதல்பதிப்பு

பதிவு எண் :A-1105, ISBN 81-234-0698-6

மொழி: தமிழ் 

கருப்பொருள்: மின்னணுவியல் 

பக்கங்கள்: 128 விலை:Rs.43

 


இரண்டாம் பதிப்பு -மார்ச் 2005

மூன்றாம் பதிப்பு -பிப்ரவரி 2007

நான்காம் பதிப்பு -2010

ஐந்தாம் பதிப்பு -மார்ச் 2014

பக்கங்கள்: 128 விலை:Rs.45

 


                                                                                             

ஆறாம் பதிப்பு மார்ச் 2018

பக்கங்கள்128 விலை: Rs.100

 

மின்னணுவியல் எனக்கு அதிகம் விருப்பமில்லாத பாடம். நான் இயற்பியல் படிக்கும் காலத்தில் வெற்றிடக் குழாய் மூலமே மின்னணுவியல் பாடங்களைக் கற்றுக்கொடுத்தார்கள் . படிகங்களைக் கொண்ட மின்னணுவியல் பாடத்தை நான் ஆசிரியராக வந்த பிறகே கற்றுக்கொண்டேன். இன்றைக்கும் எனக்கு கணனி அறிவியல் பற்றி எதுவும் தெரியாது . நான் நீண்ட காலம் சயன்ஸ் டுடே சான்ஸ் ரிப்போர்ட்டர் இதழ்களுக்குச் சந்தா கட்டி வாங்கி படித்துவந்தேன். தொகாத்த்தில் .  சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழ் ஒன்று 50 பைசாக்கள்  சயன்ஸ் டுடே 1 ருபாய்.     அதில்  நீங்களும் செய்யலாம் என்று பல மின்னணு சோதனைகள் படங்களுடன் விளக்கப்பட்டிருக்கும் .முதலில் அதில் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை பிற்பாடு இளமறிவியல் மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் என்று வழிகாட்டவேண்டிய பொறுப்பு வந்தபோது இப்பகுதி எனக்கு மிகவும் பயன்பட்டது. .மேலும் இளமறிவியல் மாணவர்களுக்கு மின்னாணுவியல் பாடம் நடத்தியபோது கூடுதல் விவரங்களையும் புரிந்துகொண்டேன். அவற்றையெல்லாம் தொகுத்து செய்து மகிழச் சின்னஞ் சிறு மின்னணு சோதனைகள் என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டேன் .மின்னணுவியல் மற்றும் மணைவியல் சுற்றுக் கூறுகள் பற்றிய ஒரு முன்னுரையுடன் 15 எளிய மின்னணு செய்முறைச் சோதனைகள் விளக்கப்பட்டுள்ளன .இந்நூலை எனக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் வி .சண்முகசுந்தரத்திற்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.

       இந்நூல் ராயல்டி அடிப்படையில் வெளியிடப்பட்டது .இது பள்ளி மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பொதுவாக புத்தக வெளியீட்டாளர்கள் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பைக் கொடுப்பதில்லை. இவர்கள் இந்த நூலை என்னுடைய அனுமதியில்லாமலேயே அமேசானில் வெளியிட்டுள்ளார்கள். ராயல்டியையும் கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதில்லை . ஒரு முறை கூட அவர்களாக ராயல்டியை வாங்கியதில்லை . என் புத்தகங்கள் என் வாழ்க்கை எனும் நூலை எழுதும் போது நான்கு ஆண்டுகளாக ராயல்டி வழங்கவில்லை.  

 

No comments:

Post a Comment