விண் இயற்பியலின் சில அம்சங்கள்
தலைப்பு :: விண்ணியற்பியலின் சில அம்சங்கள்
வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை
ஆண்டு முதற் பதிப்பு டிசம்பர் 2008
பதிவு எண்A 139
மொழி தமிழ்
கருப்பொருள்: விண்ணியற்பியல்
பக்கங்கள்: 132 விலை: Rs.60
தலைப்பு :: விண் இயற்பியலின் சில அம்சங்கள்
வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை
ஆண்டு : இரண்டாம் பாதிப்பு செப்டம்பர் 2011
மூன்றாம் பதிப்பு ஜுலை 2013
பதிவு எண் ISBN 978-93-8089-210-1
மொழி தமிழ்
கருப்பொருள்: விண்ணியற்பியல் ;
பக்கங்கள்:132 விலை: Rs.90
இயற்பியலை விருப்பப் பாடமாக எடுத்துக் கொண்டதால் விண்ணியற்பியலில் எனக்கு இயல்பாகவே ஈடுபாடு இருந்தது. தொடக்கத்தில் பூமி மற்றும் சூரியக் குடும்பத்தைச் சுற்றி வந்த ஆர்வம் அருகாமையிலுள்ள விண்மீன்கள் , பால்வளி மண்டலம், அண்ட்ரோமெடா அண்டம் என எல்லையை விரித்துக் கொண்டே சென்றது .விண்ணியற்பியலில் எனக்கு ஆர்வம் ஏற்பட வேறு சில காரணங்களும் இருந்தன. முதலாவது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சார்புக் கொள்கையும் அண்டவியலும் என்ற தலைப்பில் 1984 ல் நடந்த கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டது அப்போது முதன் முதலாகத் துறை வல்லுனர்களின் அறிவார்ந்த சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சில நூல்களை அன்பளிப்பாகப் பெற்றேன். இரண்டாவது நான் அமெரிக்காவில் மகனுடன் தங்கியிருந்த போது நூலகங்களில் படித்து சேகரித்த புள்ளிவிவரங்கள்.
இந்தப் புள்ளிவிவரகளைத் தொகுத்து நூலாக எழுதிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இந்நூலை எழுதி நிறைவு செய்து கொண்டேன் . உண்மையில் நூல்வடிவம் பெறாத வேறு சில விவரங்கள் இன்னும் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன .
விண்ணியற்பியலில் சொல்லப்படும் கருத்துக்களை கணிதவியற் சமன்பாடு களைத் தீர்வு செய்து சரிபார்ப்பேன். அந்தப்பழக்கத்தால் அறிந்து கொண்ட விஷயங்களையே இந்நூலில் எழுதியுள்ளேன் .பூமியின் ஆரம் . சுற்று வேகம் , சுற்றுங் காலம் ,நிறை, பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு போன்றவற்றை மதிப்பிட்டறியும் வழிமுறையைத் தெரிவித்துள்ளேன் .சூரிய மண்டலத்தின் எல்லை ,ஒரு விண்ணுறுப்பின் விடுபடு வேகம், விண்மீனின் ஆற்றல் மூலம், ,விண்மீன்களின் ஒளிப்பொலிவெண், ,தொலைவு, விட்டம், நிறை, வெப்பநிலை போன்றவற்றை கணக்கிடும் வழிமுறையம் விவரித்துள்ளேன்ஒரு விண்ணுறுப்பின் இயற்பியல் பண்புகளை மதிப்பிட்டறியும் வழிமுறையைத் தெ ளிவாக விளக்கிக் கூறுவதால் இந்நூல் மக்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. மூன்றாம் பதிப்பிற்குப் பிறகு எத்துணை பதிப்புக்களை வெளியிட்டார்கள் என்ற விவரம் எனக்கு இன்றுவரை கிடைக்கவில்லை,இதற்குத் தமிழக அரசு சிறந்த அறிவியல் தமிழ் நூலுக்கு வழங்கவேண்டிய பரிசைக் கொடுக்கத் தவறிவிட்டது .
1984 ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சார்புக்கொள்கையும் அண்டவியலும்
என்ற தலைப்பில் நிகழ்ந்த கோடைகாலப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இது உண்மையில்
எனக்கு அண்டவியலில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது
No comments:
Post a Comment