Nuclear Physics (அணுக்கரு இயற்பியல்)
தலைப்பு : Nuclear Physics (for B.Sc)
வெளியீட்டாளர் LMN வெளியீடு
ஆண்டு முதல் பாதிப்பு ஜனவரி 1990 ,இரண்டாம் பதிப்பு டிசம்பர் 1994
மொழி : ஆங்கிலம்
கருப்பொருள்:
அணுக்கரு இயற்பியல்
பக்கங்கள் 216 விலை: Rs.48
9.
Advanced Mechanics and Atomic Physics
தலைப்பு :Advanced Mechanics and Atomic Physics (for B.Sc)
வெளியீட்டாளர் LMN வெளியீடு
ஆண்டு: ஜுலை1990
மொழி ஆங்கிலம்
கருப்பொருள் : அணுவியல் ,புள்ளியியற் கொள்கை
பக்கங்கள்: 210 விலை: Rs.23
.நான் அழகப்பா அரசு கலைக் கல்லூரிக்கு 1987
ல் இடமாற்றம் பெற்று துறைத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட போது அது அப்போதுதான் தனியார்
கல்லூரியிலிருந்து அரசுக் கல்லூரியாக மாறியிருந்தது .அப்போது கல்லூரியின் முதல்வராக
முனைவர் செல்வக் கணபதி இருந்தார் .அவர் கொஞ்சம் கடுமையான நிர்வாகி. ஒரு முறை இயற்பியல்
மாணவர்கள் பேரவை கூட்டம் நடந்த போது தலைமை தாங்கிய முதல்வர் என்னுடைய சில அறிவியல்
தமிழ் நூல்களைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றார் .இது எனக்கு நல்வாய்ப்பாக அமைத்தது.
தனியார் கல்லூரி ஆசிரியர்களின் மூத்தோர் வரிசை
முடிவாகாமல் இருந்ததால் தனியார் கல்லூரி ஆசிரியர்க்கே அதிக முக்கியத்துவமும் முன்னுரிமையும்
வழங்கி வந்தார் .என்னுடை எழுத்தாற்றலைப் பற்றி தெரிந்துகொண்டவுடன் என்னை 1989 ல் சவேரியர்புரம் போப்ஸ் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட இயற்பியல்
பாடத் திட்ட சீரமைப்பு முகாமிற்கு கல்லூரியின் சார்பாக அனுப்பிவைத்தார்.அந்த முகாம்
மூன்று நாட்கள் நடைபெற்றது .அதில் கலந்து கொண்ட தியாகராஜர் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்
பழனியப்பன் அவர்களும் ,சரஸ்வதி நாராயணன் கல்லூரிப் பேராசிரியர் வெங்கிடாஜலமும் எனக்குப்
பழக்கமானார்கள்.இந்த சந்திப்பின் போது நாங்கள் மூவரும் இணைந்து இளமறிவியல் மாணவர்களுக்கான
பாட நூல்களை எழுதுவது என்று தீர்மானம் செய்தோம்.
பாடப் பகுதிகளைப் பிரித்துக்கொண்டு தனித்தனியாக
எழுதி ஒன்று சேர்த்து நூலாக வெளியிட்டோம். நூலை அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை பழனியப்பன்
அவர்களே மேற்கொண்டார்கள் .முதலில் Advanced Mechanics and Atomic Physics என்ற நூலும்
பின்னர் Nuclear Physics என்ற நூலும் LMN வெளியீ.டாக
வெளியிட்டோம்.
ஆசிரியர்களின் பெயர்களின் இனிஷியல் களை ஒன்றுசேர்த்து LMN வெளியீடு என்று பெயரிட்டதாக பின்னர் பழனியப்பன் அவர்கள் தெரிவித்தார்கள் .. சில ஆண்டுகளுக்குப் பிறகு
அதே வெளியீட்டில் அதே நூல்களை அவர் மட்டுமே எழுதி வெளியிட்டது போல வெளியிட்டார்கள்
No comments:
Post a Comment