திருமணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் சான்றோர் போற்றும் வண்ணம் இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நன்மக்களைப் பெற்றெடுக்க
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது
மிகவும் அவசியமாகிறது. பெரியவர்களால் தீர்மானிக்கப்படும் திருமணங்களில் காதல் என்பது கல்யாணத்திற்குப் பிறகே வருவதால் ,புரிதலும் ஒருவரையொருவர் நேசித்தலும் முக்கியமானதாகும் . ஜாதகத்தில் இதை வசியப் பொருத்தம் தான் தீர்மானிக்கின்றது பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் அது உத்தமம் ஆகும். ஆனால் ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமானால் அது மத்திமம் ஆகும். அந்த வகையில் பெண் ராசிக்கு பொருந்தும் ஆண் ராசிகள் எவை என்பதை பார்ப்போம்.
வ.எண் பெண் ராசி ஆண் ராசி
1 மேஷம் சிம்மம், விருச்சிகம்
2 ரிஷபம் கடகம், துலாம்
3 மிதுனம் கன்னி
4 கடகம் விருட்சிகம், தனுசு
5 சிம்மம் மகரம்
6 கன்னி ரிஷபம், மீனம்
7 துலாம் மகரம்
8 விருச்சிகம் கடகம், கன்னி
9 தனுசு மீனம்
10 மகரம் கும்பம்
11 கும்பம் மீனம்
12 மீனம் மகரம்
மறுத்துப் பேசமுடியாத சில சம்பந்தங்களில் வரன்களைக் கருத்து வேறுபாடின்றி தவிர்த்துக்கொள்ள இந்த ராசி மற்றும் நட்சத்திரப் பொருத்தங்கள் பயன்படலாம் என்பதைத் தவிர அடிப்படையில் எந்த அறிவியலும் இல்லை .சில நேரங்களில் நாம் விரும்பும் ஒரு சம்பந்தம் ராசி மற்றும் நட்சத்திரப் பொருத்தமின்மையால் விலகிப் போவதுமுண்டு மனப் பொருத்தம் அமைந்துவிட்டால் எந்தப் பொருத்தத்தையும் ஆராய வேண்டியதில்லை என்ற கருத்தையே இது வலியுறுத்திக் கூறுகின்றது
No comments:
Post a Comment