அரசாணைக் கால் கட்டுதல்
திருமண வீட்டிற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மனைக்கு அருகில் வீட்டுப் பெண்கள் சங்கு ஊத பங்காளிவீட்டு ஆண்கள் அரசாணி மேடையில் உள்ள குழியில் கொஞ்சம் பால்விட்டு , அதில் ஒரு பவளத்தை காகிதத்தில் வைத்து மடித்து போடுவார்கள்.அதன் பின் மூக்கில் கம்பின் ஒரு முனையை அக் குழியில் வைத்து செங்குத்தாக நிற்குமாறு செய்து கொள்வார்கள் அதனுடன் கிளுவை மற்றும் பாலைக் குச்சிகளை இணைத்துக் கட்டுவார்கள். மூக்கில் கம்பு சாய்த்துவிடாமல் இருக்க அதன் மேல் முனையை உத்திரம் அல்லது ஒரு நிலையான அமைப்புடன் இணைத்துக் கட்டுவார்கள். குச்சிகள் தெரியால் இருக்க அவற்றைச் சுற்றி மாவிலை களையும் அரச இலைகளையும் வைத்துக் கட்டுவார்கள் .உள்ளூர் திருமணமாக இருந்தால் அரசாணைக் கால் கட்டுதல் அவரவர் பங்காளிகளைக் கொண்டு இருவீட்டிலும் நிகழும். வெளியூர் திருமணமாக இருந்தால் பெண்வீட்டில் மட்டுமே நிகழும். பகவணம் செய்யும் பொது புரோகிதரால் அரசாணிக் காலுக்கு மரியாதை செய்யப்படும் திருமணம் முடிந்ததும் அரசாணைக்காலுக்குப் பொங்கல் வைப்பார்கள் .பெண்ணழைப்பு முடிந்த பின்னரே அரசாணைக் காலைப் பிரிக்கவேண்டும்.
No comments:
Post a Comment