Monday, December 4, 2023

 கல்யாணம் பேசி முடித்துக்கொள்ளுதல் (நிச்சியதார்த்தம்)

 இருவீட்டாரும் திருமணத்தை முடிவு செய்து கெட்டிபண்ணிக் கொண்டு முன்னேற்பாடு களைச் செய்து வந்தாலும் , திருமணச் செய்தியை முறையாக இருவீட்டுப் பங்காளிகள்  முன்பாகத் தெரிவிக்கும் நிகழ்ச்சியே கல்யாணம் பேசிக்கொள்ளுதலாகும் . இதைப்  பெரும்பாலும் திருமணநாளுக்கு முதல்நாள் காலையில் மாப்பிள்ளை வீட்டில்  நடத்துவார் கள். திருமணத்திற்கு ஒரு சில நாட்கள் முன்பாக இரு வீட்டாருக்கும் இணக்கமான ஒரு நாளில் கூட இந்த சம்பிரதாயச் சடங்கை நடத்தலாம்.  சிலவிடங்களில் பெண் .வீட்டிலும் நடத்தப்படு வதுண்டு. பேசி முடிப்பதற்காக வரும் எதிரி வீட்டினர் மஞ்சள்,குங்குமம் வெற்றிலை பாக்கு கல்கண்டு தேங்காய் வாழைப்பழம் ,மற்றும் வகைப் பழங்கள் ,பூ போன்றவற்றை அதற்கான எவர்சில்வர் வாளி  அல்லது பித்தளைப் பாத்திரம் மற்றும் தட்டுகளில்   அவர்கள் தகுதிக்கு ஏற்ப கொண்டுவருவார்கள்

விரலி மஞ்சள் -100 கிராம் பாக்கெட்

வெற்றிலை -1 கவுளி

பாக்கு 300 கிராம்

கல்கண்டு -300 கிராம்

ரஸ்தாளி அல்லது செவ்வாழை வாழைப்பழம் சீப்பு -5

ஆரஞ்சு -5

ஆப்பிள் -5

தேங்காய் -5

எலுமிச்சம் பழம் -5

குங்குமம் டப்பா

சந்தனம்

மல்லிகைப்பூ சரம் 10 முழம்

பழம் மற்றும் தேங்காய்கள் எண்ணிக்கையை ஒற்றைப்படையில் 7,11,21 என்றும் இரட்டைப்படையில் 16 என்றும் கொண்டு செல்லலாம் .இது அவரவர் விருப்பதைப் பொறுத்தது. இப்பொருட்களைக் கொண்டுவந்து வளவுப் பத்தியில் அல்லது திருமண அறையில் பரப்பி வைக்கவேண்டும்

பின்னர் பங்காளிகளில் ஒருவர் இன்னார் வீட்டு  மாப்பிள்ளைக்கு இன்னார் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சியக்கப்பட்டதாகவும் அதற்கு இருவீட்டாரும் இன்னன்ன முறைகளைச் செய்வது என்றும் இரண்டு நோட்டுப் புத்தகத்தில் தெளிவாக எழுதி நோட்டுப் புத்தகத்தின் அட்டை மற்றும் முதல் பக்கத்தில்  கீழிருந்து மேலாக மஞ்சள் தடவ வேண்டும்.அதன் பின்னர் அதில் எழுதப்பட்ட வாசகத்தை    சங்கு ஊதி எல்லோர் முன்னிலையிலும்  படிக்கவேண்டும் ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், இரண்டு  எலுமிச்சம் பழம் .வைத்து எழுதப்பட்ட இரு நோட்டுப் புத்தகங்களையும்  வைத்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள்     . முதலில்  பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளையின் தகப்பனாருக்கும் பின்னர்  ,மாப்பிள்ளையின் தகப்பனார் பெண்ணின் தகப்பனாருக்கும் கொடுத்துப் பின்னர் திருமண அறையில் வைத்து கும்பிட்டு ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு பிரதி எடுத்துக்கொள்ளவேண்டும் . இதில் மாப்பிள்ளையின் தகப்பனாருக்குப் பதிலாக குடும்பத்தின் பெரியவர் கலந்து கொண்டால் , அவர் வாங்கிக்கொண்ட திருமண ஒப்பந்த நோட்டுப் புத்தகத்தின் பிரதியை கிழக்கு முகமாக இருந்து கொண்டு மாப்பிள்ளையின் தகப்பனாரிடமும் ,பெண்ணின் தகப்பனாருக்குப் பதிலாக அவர்கள் குடும்பத்தின் பெரியவரொருவர் கலந்து கொண்டால் அவர்களும் அவர்களுடைய திருமண ஒப்பந்த நகலை கிழக்கு முகமாக இருந்து கொண்டு பெண்ணின் தகப்பனாரிடமும்  வழங்கவேண்டும். மாப்பிள்ளையின் தகப்பனாரும் ,பெண்ணின் தகப்பனாரும் பெரியவர்களை விழுந்து கும்பிட்டு திருமண ஒப்பந்த நகலைப் பெற்றுக்கொள்ளவேண்டும்  . இதன் மூலம் பேசிமுடித்துக் கொள்ளுதல் முடிவிற்கு வருகின்றது . பின்னர் மத்திய விருந்து அல்லது சிற்றுண்டி நடைபெறும் .மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார்களிடம் சொல்லிக்கொண்டு செல்லும் போது அவர்களைக் கௌரவிப்பதற்காக இரண்டு 10 " எவர்சில்வர் வாளியில் பழங்களில் வீதத்திற்கு 2 வீதம் வைத்து மற்றும் வெற்றிலை, பாக்கு மற்றும் பணம் வைத்து ஒன்றைப் மாப்பிள்ளையின் தகப்பனாருக்கும் மற்றொன்றை மாப்பிள்ளையின் தாயாருக்கும் கொடுப்பரார்கள்    

No comments:

Post a Comment