Sunday, December 3, 2023

முகூர்த்தக் கால் ஊன்றுதல்

முகூர்த்தக் கால் ஊன்றுதல்

 

திருமணத்திற்கு முன் ஒரு நல்ல நாளில் இரு வீட்டிலும் வளவு வாசலில் ஈசானிய மூலையாகிய வடகிழக்கு மூலையில் கொட்டகைக்காரரைக் கொண்டு முகூர்த்தக் கால் ஊன்றவேண்டும் .ஒரு நீண்ட மூங்கில் கம்பில் மஞ்சள் தடவி குங்குமப் பொட்டு வைத்து அதன் உச்சியில் மாவிலைக் கொப்பு வைத்து செங்குத்தாக ஊன்றிக் கட்டிவைப்பார்கள்.அதுவே முகூர்த்தக் காலாகும். இந்த நிகழ்வு பெரும்பாலும் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக நிகழுமாறு பார்த்துக்கொள்வார்கள் அதற்கு நெய்பவளம் வைத்து உறவினர்கள் பால் ஊற்றுவார்கள்-பின்னர் அதற்குத் தேங்காய் உடைத்து கற்பூரதீபம் காட்டி வீட்டுக்காரர்கள் விபூதி  பூசிக்கொள்ளவேண்டும்..அதற்கு கொட்ட.கைக்காரருக்குத் தட்டில் வெற்றிலை பாக்குடன்  பணம் வைத்துக் கொடுப்பார்கள் . மழைக்காலமாக இருந்து மழை வரும்போல் இருந்தால் ஒரு தேங்காயை மஞ்சள் தடவி பொட்டு வைத்து ஒரு வெள்ளைத் துணியில் கட்டி முகூர்த்தக் காலின் உச்சியில் கட்டித் தொங்கவிடுவார்கள். இதன் பிறகு புதுமண த் தம்பதியருக்குக் காய்ச்சி ஊற்றும் வரை இருவீட்டாரும் தீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது .என்ற மரபைப் பின்பற்றவேண்டும் 

No comments:

Post a Comment