தாங்களே எப்போதும் ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதற்காக இப்பொழுது அணைத்து ஆட்சியாளர்களும் மக்களிடம் கூடுதல் வரி வாங்கி இலவசம் கொடுப்பதாக அறிக்கை கொடுப்பதை வழக்கமாகக்கொண்டுள்ளார்கள் . இந்த இலவசம் ஒரு சிலருக்கு மட்டுமே எளிதில் கிடைக்கின்றது. மற்றவர்கள் அவர்களுடைய இயல்பான வேலைகளை விட்டுவிட்டு இந்த அற்ப இலவசத்திற்காக அலைகின்றார்கள். இலவசம் மக்கள் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை சீரழித்து விடுகின்றது. இதனால் மக்கள் பெரும்பாலானோர் பிச்சைக் காரர்களாக மாற்றப்பட்டு விடுகின்றார்கள் . உண்மையில் சமுதாயத்தில் உழைக்காமல் கிடைக்கும் பொருளுக்காக யாசிக்கும் பிச்சைக்காரர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றார்கள் . தீயசெயல்களில் ஈடுபடும் தீயவர்கள் மிகுந்து வருகின்றார் கள் .இவர்கள் அதிகாரிகளும் , மற்றும் நற்குடிமக்களும் வேஷம் போடு வதால் அதன் பரிணாம வளர்ச்சியைத் தடுத்துக் கொள்ள முடியவில்லை. இதைத் தடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருந்தாலும் அவர்களின் மறைவொழுக்கம் அவர்களை அப்படி வெளிப்படையாகச் செய்யத் தூண்டுவ தில்லை. அதையும் இலவசம் வாங்கி தாங்களாகவே ஏமாந்து போகும் மக்களே செய்ய வேண்டியிருக்கு.அவர்களிடம் உரிமையுள்ள அறிவினால் தூண்டப்படும் விழிப்புணர்வு இல்லை பொறியில் சிக்கிய எலி போல வலையில் மாட்டிக்கொண்ட மீன்கள் போல இவர்களால் என்ன சாதித்துவிடமுடியும். ஒரு நேர்மையான , நாட்டுப்பற்றுள்ள , மக்கள் நலத்தில் அக்கறையுள்ள , கொள்கையில் உறுதியுள்ள ,ஆளுமைத் திறனுள்ள ஒரு நல்ல தலைவன் இல்லாத பொது ஒரு கோடி மக்கள் ஒன்று சேர்ந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதையையே இது உணர்த்துகின்றது
No comments:
Post a Comment