மக்கள் தவறான வழிகளில் குறுகிய காலத்தில் உழைப்பின்றி அதிகப் பொருள் சம்பாதிக்க விரும்புகின்றார்கள் . இதற்கு இந்திய அரசியல்வாதிகள் கற்றுக்கொடுத்த பாடம் அரசியலை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்வதுதான் .ஆட்சியாளர்கள் மட்டுமே தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் ,பாதுக்காவலர்களாகவும் இருக்க முடியும் என்பதால் ஆளும் கட்சியில் தொண்டர்களாக இருந்துகொண்டு பலனடைகின்றார்கள் . பலனடைபவர்கள் பங்கு கொடுக்கவேண்டும் என்பது உள்ளார்ந்த ஒப்பந்தம் .பலனும் பங்கீடும் ஒருவருடைய அரசியல் சீனியாரிட்டியை க்காட்டும் அளவுகோலாகும். ஒருவருடைய சீனியாரிட்டியை முந்திக்கொண்டு வேறொருவர் முந்திச் செல்ல கட்சித் தொடர்கள் அனுமதிப்பதில்லை என்றாலும் பலன் மற்றும் பங்கீடுகளில் ஏற்படும் பிழைகளால் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கட்சி தாவலையும் புதிய கட்சிகளின் உதயத்தையும் அவ்வப்போது செய்கின்றார்கள் . நேர்மையான அரசியலை மேற்கொள்ளாத ஆட்சியாளர்களும் , மக்களின் ஆதரவு தனக்கே இருக்கின்றது என்பதை வெளிக்காட்ட இவர்களைப்போன்ற கட்சித் தொடர்களை விளம்பரமாக்கிக் கொள்வதும் , அவர்களால் சமுதாய வீதியில் ஏற்படும் வேண்டாத மாற்றங்களைக் கண்டுகொலாமல் இருப்பதும் இந்திய மக்களால் இன்னமும் இனமறிந்து கொள்ளாத கொரோனா வைரஸ்ஸாகும் . மக்களின் நலம் காக்க இரண்டு காட்சிகள் போதும்- ஒரு கட்சி ,ஒரு எதிர்க்கட்சி. தன்னலம் மிகும் போதுதான் கட்சிகள் பலவாகின்றன
No comments:
Post a Comment