மக்களின் நடவடிக்கைகளே கடவுளை மெய்ப்பிக்கின்றன என்று சொல்லும் போது மக்களின் நடவடிக்கைகளே கடவுளை பொய்ப்பிக்கவும் செய்கின்றன. எடுத்துக்கட்டாக கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பர் என்றும் கடவுள் ஒருவரே என்றும் அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்றும் கூறுவார்கள் . ஆனால் அதை நிம்பினாலும் நம்பாமல் ஒரே கடவுளைத் தேடி பல இடங்களுக்குச் செல்வார்கள் . எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு தொழுதுவிட்டு உழைக்கும் எண்ணத்தை செயல்படுத்தவேண்டும் . நாம் வாழ்வதற்குத்தான் படைக்கப்பட்டோம் . அது உழைப்பதால் மட்டுமே முழுமைபெறும் . நேர்மையாகவும் ,ஒற்றுமையாகவும் வாழ்வதற்குத்தான் கடவுள் தேவை . அது வே ஒருவருடைய அடிப்படைக் கொள்கையாக இருக்குமானால் அவரே கடவுளாகிவிடுகின்றார் .
No comments:
Post a Comment