Saturday, February 22, 2025

 மொழி என்பது ஒருவர் தன்தனித்திறமைகளை   மொழி என்பது ஒருவர் தன் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கருவி . எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொது ஊடகம் . கருத்துப்பரிமாற்றங்களுக்கு ஒரு மொழி போதும். ஆனால் மக்களில் ஒரு பிரிவினர் தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்கொள்ள விளைந்த போதுபல மொழிகள் உண்டாக்கப்பட்டன . மொழிகள் மூலம் தொழில்  இரகசியங்களை பாதுகாத்துக்கொண்டார்கள் . ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட கருவி போதும். பல கருவிகள் தேவையில்லை . பல கருவிகள் இருந்தால் பணிகளில் சுயசுய சிந்தனை ,  ஏற்படுவதில்லை  .  (A bad workman always quarrels with his tools, too many tools make a labour to become a bad workman) விலையுயர்ந்த ஒரு கருவியை விலைக்கு வாங்குவதால் மட்டும் அந்தக்கருவியை எல்லா நேரங்களிலும் பயனுறுதிறனுடன் பயன்டுத்தும் திறமை வந்துவிடுவதில்லை . அதற்குப் பயிற்சிவேண்டும் .பல மொழிகளை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேவைஇல்லாத வளர்ச்சி .அதனால் ஒருவர்க்கு கூடுதல் திறமையை பெறுவதற்கான வாய்ப்பு மிகச் சொற்ப அளவு கூடலாம் அனால் தனித்திறமை மொழியால் மட்டுமே கிடைத்துவிடுவதில்லை. திறமைகளும்  , மனித வளமும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத நாட்டில் கூடுதல் மொழியைக் கற்றுக்கொள்ள கட்டாய ப் படுத்துவது மாணவர்களுக்கு கூடுதல் சுமை . மொழியைக் கற்றுக்கொள்ளும் கட்டாயத்தில்  திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புக்களை த் தவறவிட்டுவிடுவதற்கு வாய்ப்பு கள் அதிகம் .  தாய்மொழி மற்றும் ஆங்கிலம்            கட்டாயம் என்றும் மற்றொரு மொழி கற்க விரும்புகின்றவர்கள் தனி நிறுவனங்கள் மூலம் பெறலாம் என்றும் மொழிக்கொள்கையை வகுத்துக்கொள்ள வேண்டும் .


No comments:

Post a Comment