முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும் என்றும் வைரத்தை வைரத்தாலதான் வெட்டமுடியும் என்றும் தமிழ் ச் சான்றோர்கள் கூறுவார்கள் .ஆனால் சமுதாயத்தில் தீயவனை தீயவனாக இருந்துகொண்டு முழுமையாகத் திருத்தவோ அல்லது தடுக்கவோ முடியாது .நேர்மையான சமுதாயத்தில் ஒரு நேர்மையானவன் துளிர்க்கும் தீயவர்களை திருத்திவிடுவான் ள்ளது தண்டித்துவிடுவான் போலித்தனமான நேர்மையுடன் வளரும் சமுதாயத்தில் உண்மையான நேர்மையுள்ளவர்கள் யாருமில்லை .தவறிப்போய் ஒரு நேர்மையானவன் இருந்தாலும் அவனுக்கு சமுதாயம் துணைநிற்பதில்லை ..அவனால் தவறான வழியில் முன்னேறும் சமுதாயத்தை தடுத்து நிறுத்தமுடிவதில்லை மக்களுக்காக நேர்மையானவர்கள் போல வேஷம் போடும் அரசியல் தலைவர்களால் தீயவர்களுடன் நட்பு கொள்ளமட்டுமே முடியும் ,அவர்களை க் கட்டுப்படுத்த முடியாது .. இது இயற்கை யின் நியதி அதை மூடி மறுக்கமுடியாது .
No comments:
Post a Comment