Monday, February 24, 2025

 இன்றைக்கு எல்லோருக்கும் தீர்வு காணமுடியாமல் இருக்கும் பல பிரச்சனைகளுள் ஒன்று விலைவாசி உயர்வைச்சமாளிப்பது .விலைவாசி ஏற்றத் தாழ்வு என்பது உற்பத்தி  மற்றும் தேவை இவை களுக்கிடையே உள்ள இடைவெளியின் அளவைப்பொறுத்தது என்றுதான் முன்பு பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள்.  உண்மையில் அவை மட்டும்தான் விலைவாசியைத் தீர்மானிக்கின்றாதா  என்றால் அது தவறு என்றுதான் தோன்றுகின்றது . ஏனெனில் அவற்றோடு மட்டும் தொடர்புடையதாக இருந்தால் விலைவாசி ஒவ்வொருநாளும் எல்லைமீறி உயராது. சிலசமயம் உற்பத்தி குறையும் போது உயரும் . கூடும்போது குறையும். விலைவாசி உயர்வுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதையே இவை சுட்டிக்காட்டுகின்றன .தேவை அதிகம் என்றால் தொழித்துறையில் உற்பத்தி பெருகி தொழில் வளர்ச்சிப்பாதையில் முன்னேறி விலைவாசியை மட்டுப்படுத்தியிருக்கும் அந்தமுன்னேற்றம் அரசியல் காரணங்களினால் தடைப்படும் போது விலைவாசி கூடுகின்றது . தொழில் தொடங்க இருக்கும் நிபந்தனைகளை இலஞ்சம் வாங்காமல்  மேலும் எளிமைப்படுத்தினால்  தேவைக்கேற்ற உற்பத்தியை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளமுடியும் . தேவை இயல்பானதாக இருக்கும் போது பொருளின் விலையை உயர்த்தி அதிகம் பொருள் சம்பாதிக்க விரும்பும் வர்த்தகர்கள் கூடுதலாக கையிருப்பில் இருக்கும் பொருளை ப்பதுக்கி வைத்து  உற்பத்தி குறைவு  தேவை அதிகம்  என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி  விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் . விலை உயர்விற்கு கூடுதல் செலவோ அல்லது உழைப்போ காரணமாக இருப்பதில்லை. முன்பு நேர்மையான அரசாங்கம் பொருட்களை பதுக்கிவைப்பபவர்களை கண்டுபிடித்து தண்டித்தார்கள் . இன்றைக்கு அதன் மூலம் ஆதாயம் தேடிக்கொள்கின்றார்கள். மேலும்  விற்பனை விலை உயர  கூடுதல் முயற்சியின்றி GST  உயர வருவாய் அதிகரிப்பதாலும் ,இலஞ்சம் பெற வாய்ப்பு அதிகரிப்பதாலும் மக்களிடம் கிளர்ச்சியைத் தூண்டிய, இலஞ்சம் பெறமுடியாத  ஒரு சில முறைகேடுகளைமட்டுமே தடை செய்கின்றார்கள் .

  மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்காத ஆட்சியாளர்களின் சுய நலத்திற்க்காக உருவாக்கிய  அரசாங்கத் திட்டங்களுக்காக வரியை அவ்வப்போது அதிகரிக்கின்றார்கள் . இது விலைவாசியை நேரிடையாகவும் மறைமுக மாகவும்  பாதிக்கின்றது .கல்விக் கட்டணம், போக்குவரத்துக்கட்டணம் , மருத்துவச் செலவு , வீட்டு வரி ,மின்சாரக் கட்டணம் போன்றவை அதிகரிக்கும் போது வர்த்தகர்கள் முன்பு பெற்றஅதே இலாபத்தை த் தக்கவைத்துக்கொள்ள உற்பத்திப் பொருளின் விலையை உயர்த்திவிடுகின்றார்கள் . இதனால் வரி உயர்வின் பாதிப்பு மக்கள் மீது கூடுதலாகிறது . அதாவது வர்த்தகர்களின் இழப்பை  மக்களே ஈடுசெய்ய வேண்டியிருக்கின்றது .,விலைவாசி உயர்வு தாறுமாறாக இருக்கும்போது அதன் தாக்கம் மக்களிடையே எதிர்மறையாக இருக்கின்றது. விலைவாசி ஏற்றத்தை நேர்மையான  ,இயல்பான சம்பாத்தியத்தால் ஈடுசெய்ய முடியாததால் மக்கள் பெரும்பாலானோர் தவறான வழிகளில் பொருள் ஈட்டும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள் .உண்மையான காரணமின்றி விதிக்கப்படும்  கூடுதல் வரிவிதிப்பு அரசியல்வாதிகளுக்கு  நலம் பயக்கலாம் . நாட்டின் நலத்தை மேம்படுத்துவதில்லை .

No comments:

Post a Comment