Saturday, March 8, 2025

 பதவி கிடைக்காமல் பரிதவிக்கும் பல மூத்த ஆரசியல்வாதிகள் , சினிமாவில் பெரும் பொருள் சம்பாதித்துவிட்டு வாய்ப்பின்றி கட்டாய ஓய்வு பெரும்நாளில் அரசியலுக்குத் தாவும் நடிகர்கள் , அரசியலில் எப்படியாவது நேர்மைத்தனத்தை புகுத்திவிட மாட்டோமா என்று நிறைவேறாத கனவுகளோடு எந்தப்பின்புலமும் இன்றி  ஆழந்தெரியாமல் அரசியலில் காலைவிடும் விமர்சகர்கள்  எல்லோரும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரே செயல் முறையைத்தான் பின்பற்றி வருகின்றார்கள் .இதைக்கலாங்காலமாய்  கண்டு மீண்டும் மீண்டும் ஏமாந்து போகும் மக்கள் பெரும்பாலும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர்களுடைய பேச்சையும்  செய்முறைகளை கேலிபேசுகின்றார்கள் அல்லது எதிர்வாதம் செய்கின்றார்கள் .

உடைந்த மண்பானையை ஓட்டுவது எளிதில்லை. கெட்டுப்போன சமுதாயத்தை சீர்படுத்தி நேர்மைத்தனத்தை நிலைநாட்டுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. அது உண்மையில் மற்றொரு சுதந்திரப்போராட்டமாகத்தான் இருக்கும் . சமுதாயத்தில் நேர்மைத்தனம் தேவை என்பதற்கான புரிதல் மக்களிடம் சிறிதளவும் இல்லை. சாதி ,மதம், மொழி  எனப் பல்வேறு காரணங்களினால் மக்கள் காலங் காலமாய் பிரித்தாளப்பட்டு வந்திருக்கின்றார்கள் . வாழ்வாதாரம் நலிவந்தடைந்து வருவதால் நேர்மைத்தனம்  அவர்களுடைய எண்ணங்களில் எள்ளளவும்  இல்லை 

ஊழலை ஒழிப்பதுநிச்சியமாக  தனி மனிதர்களால் முடியாது. ஏனெனில் இது ஆட்சியாளர்களின் வருமானமாக இருக்கின்றது .எனவே இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் ஆட்சியில் பங்கேற்கவேண்டும் . அரசியலில் ,சமுதாயத்தில் ஊழலை ஒழிப்பதையும் , நேர்மைத்தனத்தை வளப்படுத்துவதையும்  ஒரே நாளில் நிகழ்த்திவிடமுடியாது என்பதை இவர்கள் உணரவேண்டும் . புதிதாய் அரசியலுக்கு வருபவர்கள் ஏற்கனவே அரசியலில் இருப்பவர்களை விமர்சிப்பதை  மட்டுமே வெற்றிக்கான யுக்தியாக க் கொண்டுள்ளார்கள். அவர்கள் செய்த ஊழல்களை பட்டியலிடுவதால் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதில்லை. அதைத் தடுப்பதற்கான சட்டரீதியிலான வழிமுறைகள் எல்லோரும் அறியுமாறு செய்யவேண்டும் . ஊழலை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும் .

புதிதாக அரசியலில் வருபவர்கள்  அரசியலில் என்ன மாற்றங்களைச் செய்யப்போகின்றோம் , எப்படி செய்யப்போகின்றோம் , ஏன் செய்யப்போகின்றோம்   என்ற முழுமையான விவரங்களை மக்கள் அறியச்சொல்லவேண்டும் . அதற்கான திட்டங்கள், செயல்முறைகள், நீதி போன்றவற்றைத் தெரிவிக்கும் போதுமக்களிடம் நம்பிக்கை மலர்வதை பார்ப்பீர்கள் .இதைப்பற்றி அடிக்கடி மக்களிடம் பேசுங்கள் , கடடுரைகள் எழுதி வெளியிடுங்கள். போலித்தனமான விளம்பரம் செய்யாதீர்கள் . உங்களுடைய சொற்கள் உண்மையானவை  என்ற நம்பிக்கை மக்களிடம் வரும்வரை இதை மட்டுமே செய்யுங்கள் . இதற்கு எதிர்ப்பிருந்தால்  அதற்கு தகுந்த விளக்கம் அளியுங்கள் . அதன் பிறகு நீங்கள் செய்ய விரும்பிய அரசியல் மாற்றங்களை நீங்கள் செய்யவேண்டியதில்லை . அதை மக்களே பார்த்துக்கொள்வார்கள். அத்தகைய மக்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் எதிர்த்தரப்பினரால்  எதுவும் செய்யமுடியாது போகும் .இந்த மாற்றங்கள் மெதுவாக நடைபெறும் என்பதால் அவசரப்பட்டு செய்யும் முயற்சிகள் செயலைப் பாழ் படுத்திவிடும் .  


Sunday, March 2, 2025

 அரசியல் பாதையில்  கொள்ளையடிப்பதை மறைக்கவே  மக்களுக்கு இலவசம் வழங்குவதாக அறிவித்து  ஒரு சிலருக்கு  மட்டும் கொடுத்துவிட்டு  மக்களை அலையவிட்டு , தங்களுக்கு அதிருஷ்டம் இல்லை அதனால் கிடைக்கவில்லை என்று அவர்களாகவே நொந்துகொள்ளுமாறு செய்கின்றார்கள். இந்த இலவசமும் சரி , ரேஷன் கடை விநியோகமும் சரி எதுவும் முழுமையாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை .தவறு செய்து மக்களால் பிடிபட்ட அரசு ஊழியர் உண்மைகளை உளறிக் கொட்டிவிடக்கூடாது  என்று ஊதியத் தோடு விடுப்பு அளித்து விட்டு மக்களைத் திருப்திப்படுத்த பணியிடை நீக்கம் என்று மக்களை ஏமாற்றுகிறார் கள். மக்கள் ஏமாற்றினால் அரசாங்கம் அவர்களை இனமறிந்து தண்டிக்கும் . ஆட்சியாளர்கள் தவறுசெய்தால்  தண்டிப்பதற்கு நம்முடைய அரசியல் அமைப்பில் வழியில்லாதிருக்கின்றது.ஆட்சி என்பது ஒரு சேவையாக இல்லாமல் ஒரு  தொழிலாக இருக்கும் வரை இந்த அமைப்பினால் மக்களுக்கு மேலும் மேலும்  ஏமாற்றங்களே பரிசாக அளிக்கப்படும்.

.மக்களுக்காக நேர்மையாகப் பணியாற்றும் ஆட்சியாளர்களும்  அரசு ஊழியர்களும்  இருப்பதற்கான  ஆட்சியியல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.  ஆட்சியில் அதிகாரத்துடன் கூடிய மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். மையத்தில் மக்கள் சபை போல மாநிலத்திலும் ஒரு மக்கள் சபை அமைக்கலாமே . இதில் கட்சி சார்பில்லாத பலதுறை சார்ந்த அறிஞர்கள்  , நன்மக்கள்  உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் . பல்கலைக்கழக பேராசிரியர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள் , ஆன்மிக வாதிகள் , எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகத்  தொண்டாற்றும்  மருத்துவர்கள் , பிரதமரின் விருது பெற்ற காவலர்கள் , விளையாட்டு வீரர்கள் , என ஒரு நூறுபேர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி அரசின் எந்த நலத்திட்டமும் இந்தக் குழுவின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் .என்று வரைமுறைப்படுத்தலாம்.  For that we can reduce the number of ministers in the ministry .