Sunday, March 2, 2025

 அரசியல் பாதையில்  கொள்ளையடிப்பதை மறைக்கவே  மக்களுக்கு இலவசம் வழங்குவதாக அறிவித்து  ஒரு சிலருக்கு  மட்டும் கொடுத்துவிட்டு  மக்களை அலையவிட்டு , தங்களுக்கு அதிருஷ்டம் இல்லை அதனால் கிடைக்கவில்லை என்று அவர்களாகவே நொந்துகொள்ளுமாறு செய்கின்றார்கள். இந்த இலவசமும் சரி , ரேஷன் கடை விநியோகமும் சரி எதுவும் முழுமையாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை .தவறு செய்து மக்களால் பிடிபட்ட அரசு ஊழியர் உண்மைகளை உளறிக் கொட்டிவிடக்கூடாது  என்று ஊதியத் தோடு விடுப்பு அளித்து விட்டு மக்களைத் திருப்திப்படுத்த பணியிடை நீக்கம் என்று மக்களை ஏமாற்றுகிறார் கள். மக்கள் ஏமாற்றினால் அரசாங்கம் அவர்களை இனமறிந்து தண்டிக்கும் . ஆட்சியாளர்கள் தவறுசெய்தால்  தண்டிப்பதற்கு நம்முடைய அரசியல் அமைப்பில் வழியில்லாதிருக்கின்றது.ஆட்சி என்பது ஒரு சேவையாக இல்லாமல் ஒரு  தொழிலாக இருக்கும் வரை இந்த அமைப்பினால் மக்களுக்கு மேலும் மேலும்  ஏமாற்றங்களே பரிசாக அளிக்கப்படும்.

.மக்களுக்காக நேர்மையாகப் பணியாற்றும் ஆட்சியாளர்களும்  அரசு ஊழியர்களும்  இருப்பதற்கான  ஆட்சியியல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.  ஆட்சியில் அதிகாரத்துடன் கூடிய மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். மையத்தில் மக்கள் சபை போல மாநிலத்திலும் ஒரு மக்கள் சபை அமைக்கலாமே . இதில் கட்சி சார்பில்லாத பலதுறை சார்ந்த அறிஞர்கள்  , நன்மக்கள்  உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் . பல்கலைக்கழக பேராசிரியர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள் , ஆன்மிக வாதிகள் , எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகத்  தொண்டாற்றும்  மருத்துவர்கள் , பிரதமரின் விருது பெற்ற காவலர்கள் , விளையாட்டு வீரர்கள் , என ஒரு நூறுபேர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி அரசின் எந்த நலத்திட்டமும் இந்தக் குழுவின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் .என்று வரைமுறைப்படுத்தலாம்.  For that we can reduce the number of ministers in the ministry .


No comments:

Post a Comment