பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டு தவறானவர்களைத் தேர்ந்தெடுத்து நாட்டுக் குத் தவறு செய்கின்றார்கள் .என்று சொல்கின்றார்கள். இதை யார் சொல்கின்றார்கள் என்றால் ஆட்சியில் இடம்பிடிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் , வாய்ப்பில்லாத அரசியல்வாதிகள், இருக்கும் ஆட்சியை க் குறைகூறி பகைமையை வளர்த்துகொள்ளாமால் மக்களை மட்டுமே குறை கூறுகின்றார்கள். சிந்தித்துப் பார்த்தல் இது சரியான, அரசியல் ரீதியிலான தீர்வில்லை என்பது தெரியவரும். மக்கள் அவர்கள் குறிப்பிடும் தவறானவர்களைத் தேர்தெடுக்காவிட்டால் சமுதாயத்தில் ஊழல் ,மற்றும் பிற தவறுகள் தடுக்கப்பட்டுவிடுமா ? இல்லை புதிதாக வரப்போகும் ஒருவர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாரா ? சந்தேகம் தான் .மக்கள் தவறானவர்களைத் தேர்ந்தெடுக்காவிட்டால் அவர்கள் செய்யும் தவறுகள் தடுக்கப்பட்டுவிடுவதில்லை.ஒருவரை பதவி பெறமுடியாமல் தடுப்பது அவர் ஏற்கனவே செய்த தவறுகளுக்கான தண்டனையாகாது . அதனால் பதவியில்லாத போதும் செய்த தவறுகளை வேறு வழிமுறைகள்மூலம் செய்வதை பழகிக் கொள்கின்றார்கள் .நேர்மையானவர்கள் அரசியலில் வரவேண்டும் என்றால் சமுதாயத்தில் நேர்மையானவர்கள் பெரும்பான்மையினராக இருக்கவேண்டும். அதற்கு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும் . அப்போதுதான் தீயவர்கள் இனப்பெருக்கம் ஒரு கட்டுக்குள் வரும்
No comments:
Post a Comment