மக்களின் திறமை மட்டுமே நாட்டிற்கு வளர்ச்சியைத் தரும் .இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள உரிமையுள்ள கல்வியறிவு தேவை . அதைத் தாய்மொழிக் கல்வி மூலம் எளிதாகப் பெறமுடியும். பள்ளியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே தாய்மொழியை பெற்றோர்கள் மூலம் கற்றுக்கொண்டு விடுவதால் இது இயலுவதாகின்றது . ஒரு வேலை செய்ய அதற்கான திறமை அவசியம். போட்டியான உலகில் இந்தத் திறமை மேலும் மேலும் புதுமைப்படுத்தப்படவேண்டியது தவிர்க்கயிலாததாக இருக்கின்றது . திறமையின் வளர்ச்சியை ஒரு மொழியறிவால் மட்டும் பெறமுடிவதில்லை. பிற மொழிகளில் சொல்லப்பட்ட பயன்மிகு கருத்துக்களையும் தெரிந்துகொண்டால் அது திறமையை மேம்படுத்த உதவுகின்றது . ஆங்கிலம் உலகப் பொதுவான மொழி . அது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கின்றது . அதைப் புறக்கணித்து விட்டு எந்த மொழியும் தனிமனிதர்களின் திறமையை வளர்த்து தானாக வேலைவாய்ப்பை தரக்கூடிய வாய்ப்பைப் பெற்றுவிடமுடியாது . அது அம் மொழி கற்ற அறிஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் செய்த சாதனைகளால் மொழியில் ஏற்படுத்திய வளர்ச்சி . மொழியின் வளர்ச்சி என்பது அதன் சொல்லுந் திறத்தை அதிகமாக்குவதுதான்.
தமிழ் மொழியின் சொல்லுந்திறத்தை மேம்படுத்த புதிய கலைச்சொல்லாக்கம் , மற்றும் பரவலாக்கம் மூலம் மேற்கொள்ளவேண்டும் . அயல் மொழிகளில் உள்ள அறிவியல் மற்றும் தொழிநுட்பா நூல்களை மொழிபெயர்த்து தமிழ்க்கு அறிமுகம் செய்யவேண்டும் . இரு மொழி வல்லுநர்கள் மூலமே இது இயலும் . தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்கள் தமிழகத்தில் மட்டுமே வேலை செய்யமுடியும். திறமையை வளப்படுத்திக் கொள்ள சுய வாய்ப்புக்கு கிடைப்பதில்லை . வேலைவாய்ப்பு கிடைக்காத போது இடப்பெயர்த்து செல்லவேண்டிய அவசியம் ஏற்படும் . அப்போது புதிய இடத்தின் மொழியைத் தெரிந்திருக்கவேண்டும் , பொதுவாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் வேலை தேடிப் பெறலாம் (ஆங்கிலம் தெரியாத வட மாநிலங்களைத் தவிர்த்து).
தமிழும் ஆங்கிலமும் தெரிந்திருந்தால் திறமையைத் தன் சுயமுயற்சியால் வளர்த்துக்கொள்ளவும் , உலகில் எங்கும் வேலைவாய்ப்பைத் தேடவும் முடியும். தமிழும் ஆங்கிலமும் படிப்பின் பூரணத்துவத்தை அளித்துவிடுகின்றது.முன்றாவது மொழி தேவையற்றது . முன்றாவது தாய்நாட்டு மொழியால் ஆங்கில மொழிபோல சுய திறமையை வளர்த்துக்கொள்ள முடிவதில்லை . ஹிந்தி பிற மாநிலங்களில் வேலை நிமித்தமாகச் செல்வோருக்கு மட்டுமே தேவை . மேலும் இரு மொழிக்கொள்கை அணைத்து மாநில ங்களிலும் சமமாகப் பின்பற்றப்படுமானால் ஆங்கிலத்தின் மூலமே இந்தியவெங்கும் மொழிச் சிக்கல் இன்றி பணியாற்ற முடியும்
No comments:
Post a Comment