தமிழ் மொழிக் கல்வி என்பது மொழி அறிவு மட்டுமின்று பிற பாடங்களையும் தமிழில் கற்பதாகும். தமிழ்மொழியை நாங்கள் தான் வளர்க்கின்றோம் என்ற தோற்றத்தை உருவாக்க தமிழ்வழி கல்வி கற்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் வேறு சில சலுகைகளும் வழங்குகின்றார்கள். இது வேலைதேடும் போது கைகொடுப்பதில்லை.சரியான வேலையில் தேர்வு செய்யப்படுவதற்கு திறமையும் அந்தத் திறமையை வளர்த்ததிற்கும் வளர்ப்பதற்கும் அடிப்படியாக இருக்கும் மொழியறிவும் தேவை. மொழியறிவில்லாதவர்கள் இருக்கும் திறமையை மேம்படுத்திக்கொள்ள முடிவதில்லை என்பதால் சேர்ந்த வேலையில் உயர்நிலையை அடையமுடிவதில்லை. மொழி ஓர் இடைஊடகம் . அதன் மூலமே அம்மொழி தெரிந்த இருவர் செய்திகளைப் பரிமாறிக்கொண்டு தெரியாதனவற்றைத் தெரிந்துகொள்ளமுடியும் . தொழிநுட்பக் கருத்துக்களைப் படித்து அறிந்து கொள்ளமுடியும்.முதலில் ஒருவருடைய அறிவிற்கும் தகுதிக்கும் ஏற்ற வேலையைக் கொடுங்கள். அதில் முன்னேறுவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் சமமாக இருக்கும் போது ,முன்னேறுவதற்கு எது தேவையோ அதை அவர்களாகவே தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். தகுதியில்லாதவர்கள் முன்னுரிமை பெறும் போக்கு நிலவும் போது ஒரு வேலையைப் பெறுவதற்கு குறைந்தபட்ச கல்வி கூடத்தேவையில்லை என்ற மன நிலையே மாணவர்களிடம் மேலோங்கிநிற்கின்றது. ஒரு மொழியைக்கொண்டு தன் திறமையை வளர்த்துக்கொள்ளாதவன் எத்துணை மொழிகள் படித்தாலும் திறமைகளை வளர்த்துகொள்ளத் தெரியாதவனாகவே இருப்பான் .
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மொழியறிவு இல்லை மொழியைக்கொண்டு மக்கள் ஈட்டிய திறமைகள் தான் அதைத் தீர்மானிக்கின்றது . இந்தக் கருத்தின் அடிப்படையில் தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது தமிழ் மொழி மூலம் அறிவியலையும் ,தொழிநுட்பங்களையும் கற்றுக்கொள்ள தடைகள் இல்லாத வழிக ளை ஏற்படுத்து வதோடு , திறமையைச் சுயவிருப்பத்தோடு வளர்த்துக்கொண்ட இளைஞர்களுக்கு அவர்களுக்கான வேலையை அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டிருக்கமால் , வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கவும் வேண்டும் .தமிழில் அறிவியல் , தொழில்நுட்பம், ஆளுமை , சட்டம் போன்ற துறைகளை மேம்படுத்த சங்கம் உருவாக்கப்படவேண்டும் . இது செலவுக்கணக்கு காட்டுவதற்காக இல்லாமல் மொழி மற்றும் நாட்டின் வளர்ச்சியில் கொண்டுள்ள உண்மையான நோக்கமாகவும் இருக்கவேண்டும்.
No comments:
Post a Comment