பழங்காலத்தில் தமிழ் தூய மொழியாக ,பிற மொழிகளின் தாக்கமின்றி அணைத்து மக்களின் பயன்பாட்டு வழக்கில் இருந்துவந்திருக்கிறது . கிராமப்புறத்து பெண்கள் கூட எதுகை மோனையுடன் கவிதை மூலம் செய்தி சொன்னார்கள் . எதிர்ப்பாட்டின் மூலம் கருத்தைத் தெரிவித்தார்கள் . தாலாட்டு ,ஒப்பாரி எல்லாம் தனி இலக்கியம் . உலகில் எம்மொழியிலும் இல்லாத ஒன்று .
சமஸ்கிருதம் மொழி புகுந்தபோது அது தமிழ்மொழியைப் பார்த்து பொறாமைப்பட்டு அதை சீரழிக்க நினைத்து செயல்பாட்டிருக்கவேண்டும் . வேதம் ,கீதை போன்றவற்றிலுள்ள நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ள தமிழர்கள் ஆர்வம் காட்டியபோது சமஸ்கிருத எழுத்துக்கள் மொழியில் திணிக்கப்பட்டன .மொழியின் மரபு சிதைந்தது . அப்போது ஸ்டாலின் வந்தாரு , பஸ் ஸ்டாப் தோன்றியது ,ஜாதகம் கணித்தார்கள், சஷ்டி விரதம் இருந்தார்கள் . தூய தமிழ்ப்பற்றாளர்கள் மொழியின் தனித்துவத்தை ப்பாதுகாக்கப் போராடினார்கள் .எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கண் விழித்துப் பார்த்தது . ஸ்டாலின் தூய தமிழுக்குள் வர மறுக்கின்றது . பஸ் பேருந்தானது, சம்ஸ்கிருத எழுத்துக்களை நீக்கிவிட்டு புழக்கத்திலுள்ள சொற்களுக்கு மறுவடிவம் கொடுத்தார்கள் . ஆங்கிலம் ஆண்ட போது மக்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை நிலைப்படுத்திக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் தமிழோடு ஆங்கிலத்தையும் சேர்த்துப் பேசுவதை ப்பெருமையாகக் கருதினார்கள் . டயம் என்ன ஆச்சு ? ரெம்ப டயடாக இருக்கேன் , இந்த அட்ரஸ் தெரியுமா ? பேங்க் போகணும் , டிரைவர் சார் பஸ்ஸை நிறுத்துங்க . மொழியால் பெருமை கொள்ளும் நாம் இதை எப்படி அனுமதிக்கின்றோம் ? இ ப்ப கைபேசி வந்தவுடன் எழுத்துப் பிழைகளும் சேர்ந்துகொண்டன. திணிக்கப்படாமல் புகுந்த மொழிகளால் ஏற்பட்ட சேதாரத்தையே புதுப்பித்துக்கொள்ள முடியவில்லை . இன்னுமொரு மொழி படையெடுத்தல் நாம் என்ன செய்வோம் ?
No comments:
Post a Comment