Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Thursday, March 5, 2026

Tamil poem

 இந்த உலகம் தாங்காதைய்யா தாங்காது

இன்னொரு போரைத் தாங்காது 

முதலிரு போர்கள் விட்டுச் சென்ற சுவடுகள்

இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை  

இன்றும் தொடரும்  விதிமீறிய  இன்னல்கள் 

இறைவனே இன்னும் அழுது ஓயவில்லை

பெற்ற பிள்ளைகளை மீண்டும் இழக்கலாமா-இறுதிவரை  

உற்ற துணைகள் உதவிக்கு இல்லாமற்போகலாமா 

கட்டிய வீடு கண்முன்னே இடிந்து போகலாமா

ஒட்டிய பொருட்கள் எரிந்து சாம்பலாகலாமா

பசியோடு பலநாட்கள் பருகத் தண்ணீரில்லை 

நாடுஇருந்தும் நாடோடியாய் நடைப்பயணம் 

அங்கே அறிவுக்கும்   பொருளுக்கும் மதிப்பில்லை 

மக்களை ஆளவந்த அறிவிலிகளே, 

புத்தியை அடகு வைத்துவிட்டா நாடாளாவந்தீர்கள்

இந்த உலகம் தாங்காதைய்யா தாங்காது

இன்னொரு போரைத் தாங்காது 


Thursday, August 11, 2011

Vanna vanna Ennangal

உடன்கட்டை




என்னோடு நீ உன்னோடு நான்

என்றைக்கும் இணைபிரியாத் தோழர்கள்

நம் நட்புக்கு இல்லை

இன்னொரு எடுத்துக்காட்டு


நான் பிறந்தபோது நீயும் புகுந்தாய்

நீ வளரும் போது நானும் வாழ்ந்தேன்

பிறந்தநாள் மட்டுமின்றி

பிறந்த இடமும் நேரமும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் உண்டபோது நீயும் சுவைத்தாய்

நீ தாகமென்றபோது நானும் குடித்தேன்

நான் நீயாக நீ நானாக

பசிப்பதும் புசிப்பதும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் விளையாண்டபோது நீயும் ரசித்தாய்

நீ வென்றபோது நானும் மகிழ்தேன்

எனக்குள் நீவர உனக்குள் நான்வர

உருவமும் உணர்ச்சியும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் பாடியபோது நீயும் பரவசப்பட்டாய்

நீ ஆடியபோது நானும் பாராட்டினேன்

சிந்தையும் செயலும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் விழுந்தபோது நீயும் வீரிட்டாய்

நீ வாடியபோது நானும் வருந்தினேன்

என்கண்ணில் நீரவர உன்கண்ணில் இரத்தம்வர

இன்பமும் துன்பமும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் உறங்கியபோது நீயும் கனவுகண்டாய்

நீ விழித்தபோது நானும் எழுந்தேன்

நீ நானாக நான் நீயாக

எல்லா நிகழ்வுகளும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


என் ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும்

நீயே காரணமென்று

எல்லோரும் சொல்கிறார்கள்

இருந்தும் உன்னை

இன்னும் அறிந்துகொள்ளவே இல்லை


இறந்தபின்பு என்றால்

அன்பிற்கு களங்கமென்று

நான் இறக்கும்போதே நீயும்

உடன்கட்டை ஏறுவேனென்று

உறுதியாய் இருகிறாய்

நானே நீ நீயே நான்

என்பதைப் புரிந்து கொளவே

என்வாழ்க்கை முடிந்துவிட்டதே

நான் மீண்டும் வருவேன்

உன்னைப் புரிந்து கொளவதற்காக



Vanna vanna Ennangal

ஊக்கம் தரும் ஆக்கம்
             
             



சின்ன ஓட்டை இருந்தால் போதும்

சிங்காரக் கப்பலும் அமிழ்ந்து போகும்

சீரிய ஊக்கம் இருந்தால் போதும்

சிகரம் எட்ட அழைத்துப் போகும்



நுண்ணிய ஓட்டை இருந்தால் போதும்

ஓயாத நுரையீரலும் ஓய்ந்து போகும்

திண்ணிய ஊக்கம் இருந்தால் போதும்

எண்ணியது எண்ணியவாறு நிகழ்ந்து போகும்



அற்பப் பழுதொன்று இருந்தால் போதும்

ஆற்றல்மிகு இயந்திரமும் நின்று போகும்

சிதறாது ஊக்கம் இருந்தால் போதும்

தவறாது வெற்றி வந்து சேரும்

Tuesday, August 9, 2011

Vanna vanna Ennangal

கீதை வழியில் ஒரு மொழி






பிறக்கும் போது யாரிடமாவது அனுமதி கேட்டாயா ?

இல்லைதானே .

வளரும்போது யாரிடமாவது அனுமதி கேட்கின்றாயா ?

இல்லைதானே .

உணர்சிகள் வெடித்தபோது யாரிடமாவது அனுமதி கேட்கின்றாயா ?

இல்லைதானே .

மடியும் போது யாரிடமாவது அனுமதி கேட்கப் போகின்றாயா ?

இல்லைதானே .



எல்லாம் நடக்கிறது

எல்லாம் தானாக நடக்கிறது

உனக்கு உன்மூலமாக

அவனுக்கு அவன்மூலமாக

எல்லோருக்கும் அவரவர்மூலமாக



எழுச்சியும் வீழ்ச்சியும் ஆண்மையும் அடிமையும்

வெற்றியும் தோல்வியும் இன்பமும் துன்பமும்

ஊக்கமும் உறக்கமும் உயர்வும் தாழ்வும்

வளமும் வறுமையும் சுகமும் சோகமும்



ஏற்பதும் நீதான் இகழ்வதும் நீதான்

அதுவும் நீதான் இதுவும் நீதான்

எல்லாவற்றிற்கும் நீயே காரணமெனில்

எதிரியைச் சுட்டிக்காட்ட என்ன இருக்கிறது ?

இயலாமைக்கு ஒரு காரணம் கிடைத்தது

என்பதைத் தவிர

Saturday, March 19, 2011

Vanna Vanna Ennangal

சின்னச் சின்ன ஆசை கள்




சின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்



ஈழத் தமிழர்களை சமாதிகட்டிவிட்டு

இந்திய மீனவர்களை

எல்லை மீறிநீர் என்று

சிறைப்பிடித்து சித்தரவத்தை செய்யும்

ஸ்ரீலங்கா

நிகழப்போகும் நிலநடுக்கத்தால்

நீண்ட தொலைவு விலகிச் செல்ல ஆசை



சின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்



தீவிரவாதிகளை ஊட்டி வளர்த்து

இந்தியாவில் ஊடுருவ வைத்து

உயிர்க்கொலையும் கொடுமையும் செய்துவிட்டு

உண்மைகளை மறைக்கும்

பாகிஸ்தான்

சீனப் பெருஞ்சுவர் போல இடையே

ஒரு நெடுஞ்சுவர் கட்டிவைக்க ஆசை



சின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்



வல்லரசு என இறுமாந்து

இந்தியாவிற்குச் சொந்தமான

அண்டைப்பகுதி அருணாச்சலப் பிரதேசத்தை

அப்படியே அபகரிக்க நினைக்கும்

சீனா

உள்நாட்டுக் குழப்பத்தால்

உருக்குலைந்துபோக ஆசை



சின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்



இயற்கையின் சீற்றத்தோடு

அணுஉலையின் வெடிப்பும் சேர

ஒரே நாளில் ஓடிந்துபோனது

உழைப்பால் உயர்ந்து வாழ்ந்த

ஜப்பான்

துயரில் வாடும் மக்களுக்கு

தூங்காது உதவ ஆசை



சின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்



இந்தியனாய் இருந்துகொண்டே

இந்தியாவைச் சுரண்டிப் பிழைக்கும்

ஊழல் பேர்வழிகளை ஊக்குவித்து

மக்களைத் திண்டாட விட்ட

இந்தியா

ஒட்டுமொத்தமாய் அவர்களை இனங்கண்டு

அந்தமானில் குடிபெயர்க்க ஆசை



சின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்





vanna vanna ennangal

பூமித்தாய்






நம் எல்லோருக்கும்

ஒரே தாய்

சாகாத சமுதாயத்தின்

பொதுத் தாய்

அவளுக்கு வயது

ஆயிரம் கோடி ஆண்டுகள்

வயதாகி விட்டாள் என்று

அவள் நலனில்

அக்கறை கொள்ள

மறந்துவிடாதே



படர்திருக்கும்

பச்சைத் தாவரங்கள்

அவள் உடுத்தியிருக்கும்

அழகிய ஆடைகள்

பூத்துக் குளுங்கும் பூக்கள்

அவள் சிந்திவைக்கும்

புன்னகைகள்

அழகாய் என்றைக்கும்

இளமையாய் இன்றைக்கும்

அவள் இருக்கின்றாள்



உயர்தோங்கிய மலை

பூமித்தாயின் இதயம் போல

நிலத்தில் ஓடும் நீரோட்டம்

இந்த இதயத்தால்

நிகழும் இரத்தவோட்டம்



பரந்து விரிந்த கடல்

சுருங்கி விரியும் சுவாசப்பை போல

எங்கும் வீசும் காற்றோட்டம்

இதன் இயக்கத்தால்

நிகழும் மூச்சோட்டம்



நெடுந்தூரம் ஓடிச் சென்று

கடலில் கலக்கும்

கடியநீர்

சூரிய ஒளியை சுவாசித்து

ஆவியாக்கி மேகமாக்கி

மேட்டு நிலங்களில்

மலையாய் பெய்து

களைத்துப் போன

உலகை மீண்டும் மீண்டும்

உயிர்பூட்டுகிறது .



நம் எல்லோருக்கும்

ஒரே தாய்

பூமித்தாய்

தாயின் பரிவு

இல்லையென்றால்

தவிக்கப்போவது

சாகாத சமுதாயமே



Friday, March 11, 2011

Vanna Vanna Ennangal

யார் சுதந்திரம் பெரிது ?




சுட்டெரிக்கும் சூரியனுகில்லா சுதந்திரம்

விட்டெறிந்த ஒளிக்கற்றைக்குண்டு

ஊடுருவும் ஒளிக்கில்லா சுதந்திரம்

உறங்கும் இருளுக்குண்டு

அச்சம்தரும் இருளுக்கில்லா சுதந்திரம்

அகல்விரி விண்வெளிக்குண்டு



பருத்த அடிமரத்திற்கில்லா சுதந்திரம்

சிறுத்த கிளைகளுக்குண்டு

உறுதியான கிளைகளுக்கில்லாத சுதந்திரம்

உதிரும் இலைகளுக்குண்டு

அசைந்தாடும் இலைகளுக்கில்லா சுதந்திரம்

அதைத்தீண்டும் தென்றலுக்குண்டு



ஒப்பற்ற உழைப்பிற்கில்லா சுதந்திரம்

ஊடறுக்கும் ஓய்விற்குண்டு

உடல்நாடும் ஓய்விற்கில்லா சுதந்திரம்

உடன்வரும் உறக்கத்திற்குண்டு

ஆழ்ந்த உறக்கத்திற்கில்லா சுதந்திரம்

அழகிய கனவுகளுக்குண்டு



ஊமை உண்மைக்கில்லா சுதந்திரம்

ஓங்கி ஒலிக்கும் பொய்க்குண்டு

சிதறும் பொய்க்கில்லா சுதந்திரம்

சிறைப்பட்ட நாவிற்க்குண்டு

நரம்பில்லா நாவிற்கில்லா சுதந்திரம்

நாளும் எழுதும் கோலுக்குண்டு



Thursday, March 10, 2011

Vanna Vanna Ennangal

காதல் என்றால் என்ன ?




காதலென்று சொன்னால் ஒருவர்க்கு

உள்ளம் சிறகடித்து விண்ணில்

உயர உயரப் பறக்கிறது

கடுங் கசப்பைக் குடித்தாலும்

கரும்பின் அடியாய் இனிக்கிறது



காதலென்றால் மற்றொருவருக்கு

இதயம் துடிதுடித்து மண்ணில்

உதிரம் உறையாமல் கொட்டுகிறது

விரைத் தேனை சுவைத்தாலும்

வேம்பின் வேராய்க் கசக்கிறது



ஒரு சொல்லுக்கு இரு அர்த்தமுண்டு

ஒரே காதலுக்கு இரு சுவையுண்டோ?



மனம் மயங்கும் இந்தக் காதல்

என்றால் என்ன ?



அது சுகமான் சொர்க்கமா ?

சொர்க்கம் போன்ற நரகமா ?





பாவையர் மீது கொண்ட பற்றா ?

பூவை நுகரப் பூத்த விருப்பமா?



அழகை அணைக்க விரும்பிய ஆசையா ?

மனதை அடக்க முடியா உணர்வா ?



மூத்தோர் வழி வந்த பண்பா ?

முடிவில்லாத உறவு தந்த பாசமா?



இருவர்மட்டும் பரிமாறிக்கொள்ளும் அன்பா ?

இல்லை இயற்க்கை நிலைபடுத்திய அறமா?



பழகப் பழக அரும்பிய நட்பா ?

பருவத்தில் புகுந்த காமமா?





அது நட்பும் இல்லை

அன்பும் இல்லை



அங்கே ஒளிந்திருப்பது

இனப்பெருக்க உணர்வுகளே !

அடிப்படையில் இந்த உணர்வில்லாமல்

ஆணுமில்லை பெண்ணுமில்லை

காதலுமில்லை,கத்திரிக்காயுமில்லை



காதலுக்கு மனிதன் வேண்டுமானால்

பல பொருள் கொடுக்கலாம்

இயற்கையில் இந்தக் காதல்

சாகாத சமுதாயத்திற்கு

இனப்பெருக்க உணர்வு மட்டுமே.

.



Friday, February 18, 2011

Vanna vanna ennangal

விழித்தெழு



அப்போது இரவுகூட இல்லை

உலகில் நடப்பதையெல்லாம்

வெளிச்சமிட்டுக் காட்ட

ஆதவன் கூட அங்கிருந்தான் .

தனியே பெண்ணொருத்தி

தன பிள்ளையை இடுப்பிலேந்தி

ஆலயம் நோக்கிச் சென்றாள்



எங்கிருந்தோ ஒரு முரடன்

விரைந்து அருகில் வந்தான்

கழுத்தில் மின்னிய தங்கத் தாலியை

அறுத்துக் கொண்டு ஓடினான்

அலறிச் சத்தமிட்டும்

அவளுக்கு உதவ யாருமில்லை

அபலையானாள் அவள்



காவலனிடம் போய்ச் சொன்னாள்

வழக்குப் பதியக் காசு

திருடனைத் தேடக் காசு

ஆறு மாசம் அலைந்து அலைந்து

அடங்கியதுதான் மிச்சம்

காவலன் நினைத்தால்

கண்டுபிடிக்க முடியும்

கண்டுபிடித்தால் தலைவர்

பிறந்த நாளில் தங்கமில்லா

ஒரு பதக்கத்தை மார்பிலே

குத்தி சாதனை என்பார்கள்

திருடனோடு தொடர்பு கொண்டால்

திருட்டிலே ஒரு பங்கு

முன்னேறுவதற்கு இதைவிட

ஒரு நல்ல வழி எங்கே கிடைக்கப்போகிறது

முரடன் முன்னேறினான்

காவலனும் முன்னேறினான்

ஆனால் சமுதாயம் பின்னேறியதை

அவர்கள் அறியவில்லை

ஒரு முரடன் தான் இருந்தான்

ஒன்று இரண்டாகி ,இரண்டு நான்காகி

நான்கு நாற்பதாகி ,நாற்பது இப்போது

நாலு இலட்சமாகிவிட்டது .

மக்கள் முரடனாய் வாழ்வதுதான்

மக்களுக்குப் பாதுகாப்பு

என்ற எண்ணம் நிலைத்துவிட்டால்

சமுதாயமே முரடாகிவிடாதா

காவல் துறையே

நீதித் துறையே

இந்த இனிய

சமுதாயம் இறந்து வாழ்வதற்கு முன்

விழித்தெழு

நிமிர்ந்து நில்

நிமிர்த்து வை

அது உன் கடமை மட்டுமல்ல

அதுதான் உனக்குப் பெருமை

சாகாத சமுதாயத்திற்கும் பெருமை



Sunday, January 9, 2011

Vanna vanna ennangal-33

சுமக்க முடியாதவை



தாயின் மடியில் தவழ்ந்த போது

கண்கள் சுமக்கமுடியாத தூக்கங்கள்

பள்ளியில் படிக்கும் போது

முதுகு சுமக்கமுடியாத புத்தகங்கள்

கல்லூரிக்கு வந்த போது

இளமை சுமக்கமுடியாத காதல்கள்

வேலை தேடி அலைந்தபோது

எண்ணம் சுமக்கமுடியாத ஆசைகள்

குடும்பத் தலைவனான போது

தோள்கள் சுமக்கமுடியாத சுமைகள்

வேலை ஒன்றைப் பெற்ற பின்பு

கைகள் சுமக்கமுடியாத ஊழல்கள்

ஓ.........

ஐம்பது வயது இந்தியனே

உன் பிறப்பும் அப்படித்தான் என்பதால்

பழக்கங்களும் வரம்பு மீறிப் போனதோ



வீடு சுமக்கமுடியாத பிள்ளைகள்

நாடு சுமக்கமுடியாத மக்கள்கள்

சுமப்பதை சுமக்கமுடியாத இளைஞர்கள்

உழைப்பைச் சுமக்கமுடியாத உடல்கள்



செலவைச் சுமக்கமுடியாத வரவுகள்

செம்மையைச் சுமக்கமுடியாத உறவுகள்

மனம் சுமக்கமுடியாத பேராசைகள்

மாற்றத்தைச் சுமக்கமுடியாத காலங்கள்



வயல்கள் சுமக்கமுடியாத வறட்சி

நாடு சுமக்கமுடியாத கடன்.

இதற்கு நான் எப்படிப் பொறுப்பு ?

கிடக்கட்டும் விடு



ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

இதை நினைத்து

ஆனந்தக் கூத்தாடுவோமே

Wednesday, January 5, 2011

Vanna vanna ennangal

அது மட்டும் தெரிந்தால் ......



உறங்கிக் கிடக்கும் கல்லுக்குள்

உருவமொன்று ஒளிந்திருக்கு தெரியுமா?

கற்பனையில் அதை இனமறிய முடியுமா?

அது தெரிந்திருந்தால் உனக்கு

காணும் கனவுகளெல்லாம்

நாளைக்கு நடக்கப்போகும் நிகழ்வுகளாகுமே



இருண்டு கிடக்கும் இருளுக்குள்

உணரமுடியாத ஒளியிருக்கு தெரியுமா ?

எரியா விளக்கால் வழி காட்டமுடியுமா?

அது தெரிந்திருந்தால் உனக்கு

செல்லும் வழியெல்லாம்

வெற்றிக்கு வழிகாட்டும் பாதைகளாகுமே



மின்னி மறையும் மின்னலுக்குள்

மின்சாரம் ஓடுது தெரியுமா ?

கம்பியிலா மின்சாரத்தைக் கட்டுப்படுத்தமுடியுமா ?

அது தெரிந்திருந்தால் உனக்கு

செய்யும் செயலெல்லாம்

தொழில்நுட்பச் சாதனைகளாகுமே

Monday, January 3, 2011

Vanna vanna ennangal

பொழுது விடியுமா?


நீ என்ன சொன்னாலும் ஏனோ

நானும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்

ஏற்றுக் கொண்டதால் தானே

எல்லாம் இடியப்பச் சிக்கலானது

இன்னும் இன்னும் ஏற்றுக்கொண்டால்

என்னவாகும் என் நிலைமை

என்று எண்ணஎண்ண எகுறுதே

நெஞ்சிலோர் அச்சம்



நான் என்ன சொன்னாலும் ஏனோ

நீ ஏற்றுக்கொள்ள வெறுக்கிறாய்

ஏமாந்தவன் ஏமாற்றுகிறான் என்றுதானே

எண்ணியதால் எண்ணமே இடியானது

இன்னும் இன்னும் ஏற்றுக்கொண்டால்

இருக்க இடம் இல்லாமல் போகுமோ

என்று எண்ணஎண்ண கொதிக்குதே

உடலில் ஓடும் இரத்தம்




நாம் இருவருமே இப்பொழுது மட்டுமல்ல

எப்பொழுதும் இந்தியர்கள் தாம்

என்றைக்கோ ஒரு காலம்

வேற்றுநாட்டான் ஆண்டுபோனான்

என்பதற்காக நீயும் நானும்

அந்நியர்களாகி விடுவதில்லை

பிரிந்தே இருந்ததால்

நாம் எதிரிகளும் இல்லை


வார்த்தை அம்புகள் நித்தம்

நெஞ்சைத் தைக்க

மனித நேயத்தை மறந்துவிட்டு

இருவருமே வாழ்கிறோம்

இது ஒருநாளும் நிலையில்லை

என்பதை நமக்குணர்த்த இனி

இப்பூவுலகில் நம்மைத்

தவிர்த்து யாருமே இல்லை

Thursday, December 30, 2010

Vanna vanna ennangal

.மரம் போல வாழவேண்டும் மனிதா




மரம் போல வாழவேண்டும் மனிதா

வரமாகும் வாழ்க்கை இனிதாய்



ஓங்கி மரம் வளர்வதற்கும்

ஒடுங்கி இடுங்கிப் போவதற்கும்

சரியான காரணம் சல்லிவேராகும்

மண்ணில் மறைந்திருக்கும் அவை

கண்ணில் என்றும் தெரிவதில்லை



மரத்திற்கு அது வேர்

மனிதனுக்கு அது ஒழுக்கம்



உயர்ந்து மனிதன் வாழ்வதற்கும்

தாழ்ந்து வீழ்ந்து போவதற்கும்

முழுமையான காரணம் ஒழுக்கமாகும்

மனதில் ஒளிந்திருக்கும் அவை

மற்றவனுக்கு உடன் தெரிவதில்லை



மரம் போல வாழவேண்டும் மனிதா

வரமாகும் வாழ்க்கை இனிதாய்



பெருத்து பெருக்கம் செய்வதற்கும்

பெயராமல் உறுதியாய் உய்வதற்கும்

உறுதுணைக் காரணம் ஆணிவேராகும்

பூமிக்குள் புதைந்திருக்கும் அது

புயல் அடித்தாலும் அசைவதில்லை



மரத்திற்கு உறுதி ஆணிவேர் என்றால்

மனிதனுக்கு அது மனமாகும்

 
மரத்தில் விரியும் கிளைகள்


மனிதன் நடக்கும் வழிகள்

கிளையில் துளிர்க்கும் இலைகள்

மனதில் முளைக்கும் எண்ணங்கள்



நஞ்சை உறிஞ்சி நல்லதைத் தரும்

நாளும் பூத்து நற்கனி தரும்

வெயிலைத் தடுத்து நிழலைத் தரும்

வெட்டிய பின்னும் பொருளைத் தரும்



தான்வாழ பிறர்வாழ நினைக்கும்

பிறர்வாழ தான்வாழ நினைக்கும்

இதை மறந்துபோன மனிதனுக்கு

மரமே நீ உணர்த்தவேண்டும்

Wednesday, December 1, 2010

Vanna vanna ennangal-28

எங்கே இருக்கிறது ?




எடுப்பதும் விடுப்பதும்

காணும் கனவிலிருக்கின்றது

முடிப்பதும் முறிப்பதும்

தொடரும் முயற்சியிலிருகின்றது

இன்பமும் துன்பமும்

மனதின் மயக்கத்திலிருக்கின்றது

இழப்பும் இருப்பும்

செய்யும் செலவிலிருக்கின்றது

சொர்க்கமும் நரகமும்

ஆற்றும் செயலில்லிருக்கின்றது

நல்லதும் கேட்டதும்

விளையும் பயனில்லிருக்கின்றது

விருப்பமும் வெறுப்பும்

எண்ணத்தின் நிழலில்லிருக்கின்றது

இனிப்பும் கசப்பும்

நாவின் உணர்வில்லிருக்கின்றது

அறிவும் அறியாமையும்

காட்டும் ஆர்வத்திலிருக்கின்றது

அன்பும் பண்பும்

பழகும் பழக்கத்திலிருக்கின்றது .

Tuesday, November 30, 2010

Vanna vanna ennangal-27

உன்னால் முடியும் தம்பி


உன்னால் முடியும் தம்பி
உள்ளுக்குள்ள திறமையை நம்பி
எட்டி நடந்தால் இமயமும்
எட்டும் தொலைவே தம்பி

உன்னாலும் முடியுமென்று
எந்நாளும் சொல்லச் சொல்ல
எட்டிப்பாக்குது ஒ௫ நம்பிக்கை
எக்கித்தள்ளுது நம்மை முன்னுக்கு
செய்யும் செயல் எதுவானாலும்
செம்மையாய் செய்து முடிக்க
முதலில் வேண்டியது மனவுறுதி
முடிவில் வேண்டுவது நல்வி௫த்தி

உன்னால் முடியும் தம்பி
உள்ளுக்குள்ள திறமையை நம்பி
எட்டி நடந்தால் இமயமும்
எட்டும் தொலைவே தம்பி

நெடுந் தொலைவு நடைப்பயணம்
இடை நிலையில் ஓய்ந்துபோய்
ஒதுங்கி நின்றான் ஒ௫காலம்
ஓரடிஈரடி எடுத்து வைக்க
ஒல்லாத கால்கள் மறுக்க
செல்லுமிடம் சே௫வது எக்காலம்
ஒன்று முடியாததும் நம்மிடமே
வென்று முடிவதும் நம்மிடமே

உன்னால் முடியும் தம்பி
உள்ளுக்குள்ள திறமையை நம்பி
எட்டி நடந்தால் இமயமும்
எட்டும் தொலைவே தம்பி

உறங்கி விழித்த ஓர் அசரீறு
உள்ளுக்குள்ளே ஒலித்த போது
சோர்வே சோர்ந்து போனது
ஒருவினாடியில் ஓர் அதிசயம்
சோர்ந்தவன் சோர்விலன் ஆனான்
ஓய்ந்த கால்கள் ஓடத் தொடங்கின .
அலைமனம் த௫வது அசதி
நிலைமனம் கொள்வது உறுதி

உன்னால் முடியும் தம்பி
உள்ளுக்குள்ள திறமையை நம்பி
எட்டி நடந்தால் இமயமும்
எட்டும் தொலைவே தம்பி

Monday, November 22, 2010

vanna vanna ennangal -26

ஒரு தாய் மக்கள்





பூமிக்கு உயிரில்லை என்றாலும்

அவள் ............

உயிரினங்களை உருவாக்கும் ஒரு நிரந்தரத் தாய்

பூமியில் ஒரு தாய்க்குப் பல பிள்ளைகள்

பூமித் தாய்க்கோ பல உயிரினங்கள்

முன்னவள் களவால் கர்ப்பமுற்றாள்

பின்னவள் இயல்பால் உயிர்படைத்தாள்

அவளுக்கு வயிற்றில் பை

இவளுக்கு வயிறே பை

பிறப்பொக்கும் எல்லா உயிரினங்களும்

ஒருதாய் மக்கள் என்பதால்

நாமெல்லோரும் உறவினர்கள்

பிற உயிரினங்கள் எல்லாம் நண்பர்கள்

ஒரு பிரசவத்தில் இரு குழந்தைகள்

என்றால் இருவரும் இரட்டையர்கள்

ஒரு நாள் பூமியில் பிறந்தோரெல்லாம்

ஒருவரையொருவர் அறியா இணையர்கள்

தாயின் உடலிலிருந்து உதிர்ந்த மண்ணே

உயிருக்கு உடலானது

உயிர்பிரிந்து வீழ்ந்த உடலே

உயிரில்லாத் தாய்க்கு உரமானது

தாய்க்கும் தாயானவளே

நீ நெடிது வாழ

என் உடலை உனக்கு

மீண்டும் மீண்டும் அர்பணிப்பேன் .

Sunday, November 21, 2010

Vanna vanna ennangal-25

பாசிடிவ் திங்கிங்



இரு பிள்ளைகள் ஒரு தந்தைக்கு

இருவரும் இரட்டைப் பிறவிகள்

இதிலொருவன் நல்லவனாய் வாழ்ந்தான்

இன்னொருவன் தீயவனாய் வளர்ந்தான்



நல்லவனுக்கு............

நன்னூலால் நல்லறிவு மிகுந்தது

நற்பண்பால் நல்லொழுக்கம் மிளிர்ந்தது

சிந்தனையால் நல்லமனம் விரிந்தது

சீரிய நல்லெண்ணம் விளைந்தது

வந்தனையால் நல்வினை ததும்பியது

வாழ்வோருக்கு நல்லதே தந்தது

அறவினையால் நல்லவனும் செழித்தான்

அகன்ற நன்னிலமும் செழித்தது



கெட்டவனுக்கு..........

வன்நூலால் புல்லறிவு படர்ந்தது

வணங்காப்பண்பால் பொய்யொழுக்கம் தொடர்ந்தது

ஆசைகளால் கெடுமனம் அலைந்தது

கெட்டஎண்ணம் அங்கே ஆடியது

அழுக்காற்றால் தீவினையே பிறந்தது

அனைவருக்கும் பாதகமாய் இருந்தது

தீவினையால் கெட்டவனும் வீழ்ந்தான்

திக்கற்ற மாநிலமும் வீழ்ந்தது



வீட்டிற்கு வந்த விருந்தாளி ஒருவர்

விளக்கமறிய ஆவலுற்றார்

ஒரு தந்தைக்குப் பிறந்த இரட்டையர்

இப்படி இருப்பது எப்படி?



தீயவனாய் ஏன் வளர்கின்றாய் ?



தீயொழுக்கம் என்னிடம் வந்ததிற்கு

தீயொழுக்கம் மிக்க தந்தையே காரணம்

இப்படிதான் வாழவேண்டும் என்பதை

அவரிடமிருந்தே நான் கற்றேன்

அவரே எனக்கு வழிகாட்டி



நல்லவனாய் எப்படி

நல்லவனாய் எப்படி வாழ் கின்றாய் ?



நல்லொழுக்கம் என்னிடம் வந்ததிற்கு

தீயொழுக்கம் மிக்க தந்தையே காரணம்

எப்படி வாழக்கூடாது என்பதை

எந்நாளும் கற்றேன் அவரிடமிருந்து

அவரே எனக்கு வழிகாட்டி



ஒருவன் நல்லவனாய் வாழ்வதற்கும்

மற்றொருவன் தீயவனாய் வளர்வதற்கும்

உரிய காரணம் புறவெளியில் இல்லை

உள்ளத்தின் அகவெளியில் இருக்கிறது

நல்லதென்றும் கெட்டதென்றும் வகையில்லை

எல்லாம் எடுத்துக்கொள்ளும் விதம்தான் .

Friday, November 19, 2010

vanna vanna ennangal -24

தீபாவளித் திருநாள்






தீபாவளித் திருநாளாம்

தீபவொளியில் தீயவை எல்லாம்

தீய்ந்து போகும் நன்னாளாம்

தீண்டும் தீய எண்ணங்கள்

திரிந்து போகும் பொன்னாளாம்



அதிகாலையில் எழுந்து

அங்கம் குளிர எண்ணெய்தேய்த்து

அழுக்கு நீங்கக் குளித்து

புனித கங்கையில் நீராடிய

புத்துணர்வில் நிறைவாய் களிப்புற்றோம்



புத்தாடை உடுத்தி

புதுமையில்லா மரபு வழி

அருகிலுள்ள ஆலயம் சென்று

அருளும் ஆண்டவனைச் சந்தித்த

அன்பில் ஆனந்தக் கூத்தாடினோம்



விதவிதமாய் இனிப்புகள்

விதவிதமாய்ப் பல பலகாரங்கள்

வயிறு புடைக்க உண்டு

மருந்துக்கு முன் விருந்தென

பசியின்றி ருசித்துக் களைத்திருந்தோம்



வெடி வெடித்து

வீதியெங்கும் குப்பையிட்டோம்

விடுமுறை நாள் என்பதால்

தொலைக்காட்சிப் பேழைக்கு

தொடர்ந்து தொல்லை கொடுத்தோம்

அனைவரும் ஒன்று கூடி

அரட்டை யடித்து சிரித்திருந்தோம்

தொலைபேசி மூலம் தொலைதூரம்

இதயங்களைப் பரிமாறி

இனிய உறவுகளைப் புதுப்பித்தோம்



ஆனாலும் அந்தப் பழைய அழுக்குகள்

எண்ணத்தில் அப்படியே இருக்கு

என்ன தீபாவளி இது !

ஆண்டில் ஒருமுறை சூரியோதையம்

பார்த்தோம் என்பதைத் தவிர !.

Friday, October 29, 2010

vanna vanna ennangal

. மன அழுத்தத்திற்கு மருந்து மனமே







மன அழுத்தம் வரும் பின்னே

பிரச்சினைகள் வரும் முன்னே

இப் புதுமொழி தரும் உண்மைகள்

எல்லோரும் பெறும் நன்மைகள்



பிரச்சினைகள் பல வந்துவிட்டால்

மனமே நமக்குத் தொல்லை

பிரச்சினைகள் ஏதும் இல்லாவிட்டால்

மனவழுத்தம் என்றும் இல்லை



பிரச்சினைகளின் மூலமும் அவரே

தேடும் தீர்வும் அவரே

கேள்விக்கு விடை உள்ளே இருக்க

வெளியே தேடுவதில் பயனில்லை



வாழ்க்கையைப் புரிந்து கொண்டால்

வரும் பிரச்சினையின் கடுமை குறையுமே

ஆசைகளை விட்டு விட்டால்

அதன் அளவில் பாதி மறையுமே



பிரச்சினைகளே ஒரு பாடம் என்றால்

அதைப் படிக்காமல் விடாதே

பழகினால் அதுகூட உனக்கு

நன்மை தரும் நண்பனே



பிரச்சனைகளை உறுதியோடு சந்தி

பின்னர் உறவாடி சிந்தி

தீயவன் நல்லவனாக மாறிவிட்டால்

தீமைகள் தீண்டுவதே இல்லை

Wednesday, October 20, 2010

Vanna vanna ennangal-22



மனதிற்குள் ஒரு மிருகம்  

மனிதனொரு மிருகம் என்றல்

மனமொரு குரங்கு

கணக்குப் போடும் அவனைப் புலி என்றனர்
சூழ்ச்சி செய்யும் அவனை நரி என்றனர்
வீரமிக்க அவனைச் சிங்கம் என்றனர்
பாரம் சுமக்கும் அவனைக் கழுதை என்றனர்
தூரம் ஓடும் அவனைக் குதிரை என்றனர்
அப்பாவியான அவனைப் பசு என்றனர்
சிதறிச் சாப்பிடும் அவனைப் பன்றி என்றனர்
கொறித்துண்ணும் அவனை எலி என்றனர்
நன்றி உள்ள அவனை நாய் என்றனர்
மானமுள்ள அவனைக் கவரி மான் என்றனர்
முரடனை முட்டும் காளை என்றனர்
குள்ளனை தத்தும் தவளை என்றனர்
சுறுசுறுப்பான அவனைத் தேனீ என்றனர்
உன்னிப்பாகக் கவனிக்கும் அவனைக் கழுகு என்றனர்
சந்தடி இன்றி நடக்கும் அவனைப் பூனை என்றனர்

குண்டான அவளை யானை என்றனர்
குள்ளமான அவளை சிம்பான்சி என்றனர்
மெதுவாக நடக்கும் அவளை ஆமை என்றனர்
குண்டான அவளை யானை என்றனர்
அழகாகப் பாடும் அவளைக் குயில் என்றனர்
ஒயிலாக நடக்கும் அவளை மயில் என்றனர்
மாற்றிச் சொல்லும் அவளைப் பச்சோந்தி என்றனர்
போலிக்கண்ணீர் வடிக்கும் அவளை முதலை என்றனர்
கருப்பாய் இருக்கும் அவளைக் காக்கை என்றனர்
உயரமாய் இருக்கும் அவளைக் கொக்கு என்றனர்
நளினமாய் பேசும் அவளைக் கிளி என்றனர்
அன்பு காட்டும் அவளை அன்றில் என்றனர்
மூக்கு நீண்ட அவளை மரக்கொத்தி என்றனர்
மெல்ல நடக்கும் அழகுப் பெண்ணை அன்னம் என்றனர்
பறந்து செல்லும் அவளைப் பட்டாம் பூச்சி என்றனர்

மனிதனுக்குள் ஒரு மிருகம் இருக்கின்றது
ஒவ்வொரு மனிதனுக்குள் ஒவ்வொரு மிருகம்
ஆனால்
எல்லோருக்குள்ளும் ஒரு மிருகம் -அது

குரங்கு

மனமொரு குரங்கு -மனித
மனமொரு குரங்கு
மனதின் தாகம் மக்கள் மத்தியில்

குரங்குகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்

கருங் குரங்கு, செங் குரங்கு,என நிறத்தால்
கெட்ட குரங்கு , நல்ல குரங்கு என பண்பால்
வத்தக் குரங்கு ,குண்டுக் குரங்கு என உருவத்தால்
வன் குரங்கு வாலில்லாக் குரங்கு என செயலால்
சுட்டிக் குரங்கு கெட்டிக் குரங்கு என குறும்பால்
சின்னக் குரங்கு கிழட்டுக் குரங்கு என வயதால்

குரங்குகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்

மனமொரு குரங்கு -மனித
மனமொரு குரங்கு