நம் அரசியல்வாதிகள் தாங்கள் நேர்மையானவர்கள் , நாட்டிற்க்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்ய காலத்தால் மாறாத தன விருப்பம் கொண்டவர்கள் என்பதற்கு அடையாளமாக மயக்கும் மொழியிலான பசப்பு வார்த்தைகளைத் தவிர வேறு எந்தவொரு நற்சான்றும் கிடையாது .நிகழ் காலத்தில் எச்சிக்கையால் காக்கையை விரட்டாதவர்களா ,எதிர்காலத்தில் எல்லோருக்கும் சமபந்தி விருந்து வைக்கப்போகின்றார்கள்..மக்கள் இது போல பல கனவுலக எதிர்காலங்களைத் தாண்டியும் இன்னும் நிகழ்காலம் கூட இல்லை இறந்த காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் . இவர்கள் அவர்களுடைய வார்த்தைகளைமக்கள் முழுமையாக நம்புமாறு செய்வதற்கு சிலபல தனித்துவமான செயல்களைச் செய்கின்றார்கள் . முதலில் மக்களைஎப்போதும் வறுமையில் தள்ளாடவிட்டு அரசு ஏதாவது நிவாரணம் கொடுக்காதா என்ற ஏக்கத்துடனேயே வாழும் நிலையில் வைத்திருப்பார்கள் . மக்களிடையே பிரிவினை நிலைத்திருக்க சாதி ,இனம் சார்த்த அரசியலை மறைமுகமாக ஆதரிப்பார்கள் . இதனால் தொண்டர்கள் என்ற பெயரில் முரட்டு அடிமைகள் எப்போதும் இவர்களை சுற்றி சுற்றி வருவார்கள் . இவர்கள் அவர்களுடைய தலைவர்களைப் பாராட்ட மக்கள் இவர்களுக்கு அமோக ஆதரவு இருப்பது போன்ற உணரவைப்பெறுகின்றார்கள் .காசு கொடுத்து விளம்பரம் தேடிக்கொள்ள அதையும் மக்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். அரசியல் தொண்டர்கள் எல்லோரும் நடமாடும் போலி விளம்பரங்கள்மட்டுமல்லாது நம்பாதவர்களுக்கு வில்லன்களுமாவார்கள். ஒரு அரசியல்வாதியின் நேர்மைத்தனம் எதிர்காலத்தில் அவர்கள் செய்வதாகச் சொல்லும் நிகழ்காலப் பேச்சுக்களால் மதிப்பிடக்கூடாது . அதற்கு கடந்த காலத்தில் அவர்கள் பிரதிபலன் எதிர்பாராது சமுதாயத்திற்குச் செய்த நற்பணிகளை ப் பட்டியலிட்டுப் பார்க்கவேண்டும் . இன்றைக்கு சமுதாயத்தில் மக்கள் மக்களாக இல்லை யாரோ ஒரு அரசியல்வாதிக்கு தொண்டன் என்ற பெயரில் அடிமைகளாக இருக்கின்றார்கள் . மக்கள் மக்களின் நலனுக்காக மாறவேண்டும்.
No comments:
Post a Comment