Wednesday, July 28, 2021

 புறத்தடைகள் பெரும்பாலும் ஒருவருக்கு அறிமுகமானவர்களால் ஏற்படுத்தப்படுகிறது. சிலர் கெடுதல் செய்வார்கள் .வேறுசிலர் உதவி செய்ய மறுத்துவிடுவார்கள் . தவறான வழிகாட்டி கேடு செய்பவர்களும்  உண்டு ..தானே மற்றவர்களைவிட  யர்ந்தவனாக இருக்கவேண்டும்  என மனத்திற்குள் ஒவ்வொருவரும் நினைப்பதால் . மற்றவர்கள் தன்னைக்காட்டிலும் உயர்ந்த நிலையை அடைந்துவிடக்கூடாது என்று கெடுதல்  செய்கின்றார்கள். எல்லா நேரங்களிலும் எவர் தன்னுடைய வேலைகளைத்    தானே செய்துமுடிக்கவேண்டும் என்று விரும்பிச் செயல்படு கின்றார்களோ  அவர்களுக்கு புறத்தடைகளின் பாதிப்பு    குறைவாகவே இருக்கும் .

 

தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடை யாக இருக்கமுடியாது  என்பதால் யாரும் அகத்தடைகளைப்பற்றி   அதிகம் சிந்திப்பதில்லை. புறத்தடைகளை இனமறிந்து அகற்றிக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் .எதிரிகளை நண்பனாக்கிக் கொள்ளலாம் ஆனால்  நண்பனாகவே  உடனிருக்கும் உள்ளெதிரியை அவ்வளவு  எளிதில் மாற்றிவிடமுடியாது.அதனால் புறத்தடைகளை விட அகத்தடைகளே ஒருவருடைய சுய முன்னேற்றத்திற்குச்  சத்தமின்றி சலனமின்றி அதிக அளவில் பாதிப்[[பாதிப்பை ஏற்படுத்துகின்றன      ..    

Tuesday, July 27, 2021

சுயமுன்னேற்றத்தில் அகத்தடைகள்

 ஒவ்வொருவருடைய  முன்னேற்றத்திற்கும்  தடைகள் இருப்பதுதுண்டு.எந்த   சாதனைகளும்  தடைகளைத் தாண்டி   செல்லும் முயற்சிகளுக்கு அப்பால் தான் படைக்கப்படுகின்றன,பொதுவாகத்  தடைகள் இருவகைப்படும் அவற்றை புறக்தடை என்றும் அகத்தடை என்றும் கூறுவார்கள். புறத்தடைகள் மற்றவர்களாலும் புறக்காரணங்களினாலும் ஏற்படுத்தப்படுவது .ஒருவருடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்பட்டு மனம் பொறுக்காமல் அதைத் தடுக்க  பிறரால் ஏற்படுத்தப்படும் கெடுதல்கள் புறத்தடைகளுள் முதன்மையானதும் மோசமனாதுமாகும் .பொதுவாக இவற்றை நாம் சுய அறிவு மற்றும் அனுபவத்தின்  மூலம் யூகித்தறிந்து கொண்டு தவிர்த்துக் கொள்ள முடியும்  .உடல் நலக்   குறைவு, விபத்துக்கள் ,இயற்கைப் பேரிடர்கள் , குறித்த காலத்தில் கிடைக்காத உதவிகள்  புறக்காரணங்களினால் ஏற்படும் தடைகளாகும் .நுண்ணறிவினால் இவற்றை ஓரளவு முன்னறிந்து கொண்டு  தடுத்துக் கொள்ள முடியும் ஒருவர் தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடையாக இருப்பது அகத்தடையாகும். அகத்தடைகளை யாரும் அகத்தடைகளாகவே  நினைப்பதில்லை மாறாக இனமறியப்படாத யாரோ ஒருவராலும் அல்லது தனக்குப் பிடிக்காத  உறவினராலும் செய்யப்படும் ஒரு செயலாகவே நினைக்கின்றார்கள்.பொதுவாக எல்லோரும் தாங்கள்  மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெற்றுவிட்டால் அதைத் தனது சாதனை என்றும் தோற்றுவிட்டால் அது பிறரால் செய்யப்பட்ட  சதி என்றும் கூறுவார்கள்.  

 

Tuesday, July 6, 2021

சுய முன்னேற்றத்தைப் பாதிக்கும் அகத்தடைகள்

 சுய முன்னேற்றத்தைப் பாதிக்கும் அகத்தடைகள் 

 

எல்லோரும் என்ன நினைக்கின்றார்கள் என்றால் அவர்களுடைய முன்னேற்றத்தில் ஏற்படும் தடங்கல்களுக்கும் ,  தடைகளுக்கும் மற்றவர்களே காரணமாக இருக்கின்றார்கள் என்றும் அதில் தங்களுக்கு ஒரு சிறிதும் பங்களிப்பு இல்லை என்றே  நம்புகின்றார்கள் . உண்மையில் ஒருவருடைய முன்னேற்றத்தில் அவரால் ஏற்படும் தடை மற்றவர்களால் ஏற்படும் தடையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகம். இது அகத்தடையாக இருப்பதால் தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடையாக இருப்பதை யாரும் அறிந்திருப்பதும்  இல்லை. சுட்டிக்காட்டினால் ஒப்புக்கொள்வதுமில்லை தனி மனித ஒழுக்கமின்மை ,மறைவொழுக்கத்தால் சமுதாய ஒழுக்க மீறல்கள் ,தொழில் திறமையின்மை ,நேரந் தவறுதல் , ஆளுமைத் திறமையின்மை , பேராசை , முயற்சியின்மை ,நோக்கமின்மை , ஆர்வமின்மை , நம்பிக்கையின்மை ,போன்ற பல அகத்தடைகளால்  ஒவ்வொருநாளும் எல்லோரையும்  எதோ ஒரு வகையில் சறுக்கி  விழுந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த சறுக்களுக்குத் தனக்குப் பிடிக்காத ஒருவரே காரணம்  என்று   .தீர்மானமாய் இருப்பதால் அவர்கள் அவர்களுடைய பிரச்சனைக்கு சரியான தீர்வு காணமுடியாமல் நீண்ட காலம்  தடுமாறி கொண்டிருப்பார்கள்.   .  

Thursday, March 11, 2021

ஊழல்  அதிகாரம்

ஊழல் இவ்வுலகில் உள்ளவரை இல்லை
எந்நாளும் சமுதாய உயர்வு

ஊழல் மறுப்போர் உழைப்போர் மற்றோர்க்கு 
ஊழலே உள் வாழ்க்கை
 
ஊழல் புரிந்து உயிர்வாழ்வதைவிட பிச்சை
எடுத்துப் பிழைப்பது மேல் 

யாவர்க்கும்  உய்வுண்டாம் உய்வில்லை
ஊழல்  புரிந்த மகற்கு 
    
கசையடி  களவுக்கு ஒன்று கொள்ளைக்கு
நூறென்றால் ஊழலுக்கு ஆயிரம்

ஊழல்  வளரவளர சாகாத சமுதாயம்
 படிப்படியாய் மடியுமே செத்து  

Tuesday, March 9, 2021

திருடுதல்,,களவாடுதல், கொள்ளையடித்தல் போன்ற குற்றங்கள்  மக்கள்   ஏமாந்திருக்கும் போது அவர்களுடைய உடைமைகளைத் தனதாக்கிக் கொள்ள   ஏமாற்றுபவர்களால் செய்யப்படுவனவாகும்..அளவு குறைவாக க் கொடுத்தல், கலப்பட மற்றும் .போலிப்பொருளைக் கொடுத்தல், ஈடான பொருள் வாங்கிக்கொண்டு பொருளைக் கொடுக்க மறுத்தல் போன்ற குற்றங்களும் ஏமாற்றி பிறரிடமிருந்.து பொருள் சம்பாதிப்பதாகும்   இவைகளும் ஒருவகையில் ஊழலே .
சிலர் கோயில் உண்டியலையும் ,எ டி எம் மிஷினையும் தூக்கிச் சென்று கொள்ளையடிக்கின்றார்கள் சிலர் நகைக் கடைகளில் கன்னக்கோலிட்டு உட்புகுந்து கொள்ளையடிப்பார்கள்  யாருமில்லாத போது கதவை உடைத்து வீடு, கடைகளுக்குள் நுழைந்து திருடுவார்கள் . ஏ டி எம் மிஷினில் நிரப்ப எடுத்துச் செல்லும் பணத்தையும்,பணப்பட்டு வாட்டிற்காக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்லும் பணத்தையும் சிலர் இடைமறித்து அபகரித்துக் கொள்ளவர்கள் . பிறருடைய வங்கிக் கணக்கு எண்ணையும் ,கடவுச் சொல்லையும் அறிந்து கொண்டு  சிலர் உரிமையில்லாத பணத்தைத் திருட்டுத் தனமாக  எடுப்பார்கள்.   சேமிப்புக் கணக்கு எண்ணையும் ,கடவுச் சொல்லையும் அறிந்து கொள்வதற்கு நாடகமாடுவார்கள். உங்கள் மொபைல் எண்ணுக்குக்  .கோடிக்கணக்கில் பரிசு விழுந்திருக்கின்றது என்று நம்பவைத்து  தேவையான விவரங்களை நம்மிடமிருந்தே கறந்துவிடுவார்கள் .சிலர் வங்கி மேலாளர் பேசுவதாகக்  கூறி  ஏமாற்றி  விவரங்களை கேட்பார்கள் .
பெண்கள் தனியாகச் சாலைகளில் நடந்து செல்லும் போது அவர்களுக்கிருக்கும் பாதுகாப்பின்மையைத்  தெரிந்துகொண்டு அவர்களுடைய கழுத்துச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடுவார்கள். இன்றைக்கு இது கூட்டு முயற்சியில் வெற்றிகரமாகச் செய்யப் படுகின்றது. ஒருவர் துப்புக் கொடுப்பார் . இருவர் ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வண்டியில் விரைந்து  பெண்ணுக்கு அருகாமையில் பயணித்து கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கிலியை அறுத்துக்கொண்டு நொடிப் பொழுதில் காணாமற் போய்விடுவார்கள்.,அடையாளம் தெரியாமலிருக்க ஹெல்மெட் வேறு அணிந்திருப்பார்கள்.
சிலர் பழைய நகைகளுக்கு மெருகுபோடுகின்றேன் என்று தங்கத்தை கரைத்து எடுத்துக் கொண்டுவிடுவார்கள் சிலர் பித்தளைகுத் தங்க முலாம் பூசி ஏமாற்றிவிடுவார்கள் .நகைகளில் அரக்கு போன்ற வேற்றுப்பொருட்களை அடைத்து எடையைக் கூட்டி ஏமாற்றுவார்கள் .சேதாரம் அதிகம் என்று சொல்லி அதிகம் வசூலித்து விடுவார்கள்
நகைக்காக மாதாமாதம் சீட்டுப்பணம் கட்டுபவர்களையும் , அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு  டெப்பாசிட்  செய்தவர்களையும்  ஏமாற்ற ஒருநாள் காணாமற் போய்விடுவார்கள் . வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருகின்றேன் , அரசாங்க வேலைக்குப் பணி  நியமன ஆணை வாங்கித் தருகின்றேன்,சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகின்றேன் என்று சொல்லி நிறையப்  பணம் வாங்கிக் கொண்டு அலையவிட்டு ஏமாற்றிவிடுவார்கள் .மக்கள் மக்களால் ஏமாற்றப்படும் போது சில பெண்கள் தங்கள் கற்பையே பறிகொடுப்பதுமுண்டு..சினிமாவில்  நடிக்க ஆசைப்பட்டு, பெற்றோர்களின் சம்மதமின்றி வீட்டைவிட்டு ஓடிவந்த பெண்களை இந்த ஏமாற்றுக்காரர்கள் எளிதில் ஏமாற்றி  சுகங்களை அனுபவித்து விட்டு இறுதியில் பாலியல் தொழிலுக்குத் தள்ளிவிட்டுவிடுவார்கள் மருத்துவப் படிப்பு மற்றும் ஒரு சில உயர் படிப்புக்கு இடம்  , பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் ,பதிவாளர், தேர்வாளர் பதவிகள்  அரசாங்கப்  பணி  ஒப்பந்தம், உயர் பதவிகள் , தொழில் தொடங்க வங்கிக் கடன்  போன்றவற்றை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்வார்கள்.            
நேர்மையான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டு பின்பற்றி ஒழுகுவதற்கு எளிமையாக இல்லாததால் எதிர்மறையான வழிமுறைகளில்  நாட்டங்  கொண்டு சிலர் ஏமாற்றவும் பலர் ஏமாறவும் செய்கின்றார்கள் . கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் இன்றைக்கு சமுதாயத்தில் மிகுந்து வருகின்றன. பாலில் தண்ணீரைக் கலப்பார்கள். இது உடல் நலத்திற்கு கேடு இல்லை. ஆனால் இன்றைக்கு பாலில் யூரியா போன்ற உரங்கள் வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன  மாளிகைச் சாமான்கள் , அழகு சாதனப் பொருட்கள் ,மது போன்றவற்றில் உடல் நலத்திற்குத் தீங்கு செய்யும் வேற்றுப்பொருட்களைக் கலக்கின்றார்கள்   சுவைக்காகவும்,      அழுத்தமான நிறத்திற்காகவும்  உணவுப் பொருட்களில் நிறமூட்டிகளைச் சேர்பதுண்டு .இவை பெரும்பாலும் உடலுக்கு ஓவ்வாமையைத் தரும் .
மனிதர்கள் மனிதர்களிடம் காட்டும் இரக்கத்தைக் கூடத் தவறான வழிகளில் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் .சிலர் போலி நிறுவங்களுக்கு பொருள் உதவி கேட்டு வருவார்கள் .சிலர் யாசகம் கேட்டும் , தாகத்திற்கு நீர் கேட்டும், எதோ முகவரி விசாரிப்பது போலவும் வருவார்கள். தனியாக இருக்கின்றார்களா என்பதை அறிந்து கொண்டு  கைவரிசையைக் காட்டிவிடுவார்கள் .வீடு புகுந்து கொள்ளையடிப்பது, கழுத்துச் சங்கிலியை பறிப்பது போன்ற செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றார்கள் . சிலர் சிறு குழந்தைகளைக் கடத்தி ஊரில் பிச்சையெடுக்க விட்டு சம்பாதிப்பார்கள் சிலர் கூட்டங்களில் பிக்பாக்கெட்  அடிக்க பழக்கி விடுவார்கள்  . பொதுவாக மகப்பேறில்லாதவர்கள் குழந்தைகளைக் கடத்துவதில்லை.  தவறான வழிகளில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள்தான்  பிள்ளைகளைக் கடத்துகிறார்கள்.பாலியல் தொழில் நடத்துவதற்காக இளம் பெண்களைக் கடத்திச் சிறைப்பிடித்து வைத்திருப்பார்கள் .கடினமான வேலைகளைச் செய்ய அடிமையாய் ச் சிலரைப் பிடித்து வைத்திருப்பார்கள் 

Monday, March 1, 2021

ஊழல்

ஒரு குறிப்பிட்ட திறமையை வளர்த்துக் கொள்பவர்கள் அந்தத் திறமையை வாழ்வாதாரமாகக் கொண்டு சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக வாழ்கின்றார்கள் .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை என்பதால் சமுதாயத்திற்கு வேண்டிய எல்லாத் திறமைகளும் கிடைத்துவிடுகிறது.. மக்களுக்கு எதிர்பார்ப்பின்றி சேவை செய்வதற்கு திறமை முக்கியமில்லை ,மனம் தான் வேண்டும்..ஒரு சிலர் மக்களுக்குச் சேவை செய்ய பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்றார்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு சேவை செய்ய முன்வருகிறார்கள் இந்தியாவில் இது இன்றைக்கு அரசியலாக உருவெடுத்துள்ளது .   
இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காகத் திட்டமிடுகிறார்கள் .அதை நிறைவேற்றச் செலவு செய்யும் உரிமையும்  அவர்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது .வரவும் செலவும் ஒருவரின் மேற்பார்வையிலேயே இருக்கும் போது ஒருவர் அந்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்.. மக்களுக்காகச் செலவு செய்யப்படவேண்டிய நிதியைத் தன இஷ்டம் போல செலவு செய்வதும் , தங்களுடைய வசதியான வாழ்க்கைக்கு கொஞ்சம் ஒதுக்கிக் கொள்வதும் ஊழலாகின்றது .
வர்த்தக ஒப்பந்தங்களில் விலைப்பட்டியலில் அதிக விலையைக் குறிப்பிட்டு ஊழல் செய்கின்றார்கள் .அரசுக்குச் சொந்தமான இடங்களை குறைந்த விலைக்கு வாங்கியும்  , தனக்குச் சொந்தமான இடத்தை அரசுக்கு அதிக விலைக்கு விற்றும் ஊழல் செய்கின்றார்கள் .அரசுக் கட்டிடங்களைக் குறைந்த வாடகைக்கு எடுத்து வெளியில் அதிக வாடைக்கு விட்டு அரசின் வருவாயைக் குறைக்கின்றார்கள்
பணம் வாங்கி கொண்டு வரியைக் குறைத்துப் போடுகின்றார்கள். இதனால் அரசின் வருவாய் குறைகின்றது .கோயில் மற்றும் சுற்றுலாத் தளங்களில் சிறப்பு நுழைவுக் கட்டணம் பூங்கா, பொருள்காட்சி ,வாரச்  சந்தை, விமான நிலையம்   ,டோல் கேட் போன்ற இடங்களில் வரி வசூலில் ஊழல் செய்கின்றார்கள்
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் , கட்டுமானப் பணிகள், புதிய சாலைகள் போடுதல் . புனரமைப்புப் பணிகள் , பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் , பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றில்  திட்டத் செலவை உயர்திக் காட்டி ஊழல் மூலம் அரசின் நிதியைக் கொள்ளையடிக்கிறார்கள்
மக்களிடையே தங்கள் செல்வாக்கை உயர்திக் கொள்ள ஆளும் அரசியல்வாதிகள்  இலவச சேலை, வேஷ்டி, இலவச எரி வளிமம் , இலவச வீட்டு உபயோகச் சாமான்கள் என வள்ளல் போல மக்களுக்கு அள்ளிக்கொடுப்பார்கள் இலவசங்களை இழக்க விரும்பாத மக்கள் இதில் நடக்கும் ஊழல்களைத் தட்டிக் கேட்பதில்லை . 

Sunday, February 14, 2021

பானை புதியதாக இருந்தாலும் ,அது ஓடையில்லாமல் இருக்கவேண்டும். அதன் அடிப்பகுதியில் ஓட்டை இருந்தால் அந்தப் பானையால்  பயனேதுமில்லை..பானையில் ஓட்டை இருந்தால் அதில் தண்ணீர் சேமித்து  வைத்து மக்களுக்குப் பயன் படுத்தமுடியாது . நீரை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.
பானையைப் பயன்படுத்தும் போது பழுதடைய  வாய்ப்புண்டு .ஓட்டை விளிம்பில் இருந்தால் பொறுத்துக்கொள்ளலாம்.அடியில் ஓட்டையிருப்பது யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை .  அடியில் ஓட்டை இருந்தால் விரைவில் வழிந்தோடி நீர் காணாமற்போய்விடும்.  அடியில் ஓட்டையிருக்கும் ஓட்டைப் பானை போன்றவர்கள் இந்திய அரசியல்வாதிகள் .அவர்களால் இந்தியப் பொருளாதாரம் காணாமற் போய்க்கொண்டிருக்கிறது
பானையில் ஓட்டையிருந்தால் அதை அடைத்துப் பயன்படுத்தவேண்டிய பொறுப்பும்  , புதிய பானை வாங்கிப் பயனுக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் பானையின் உரிமையாளருக்கு உண்டு. பழைய ஓட்டைப் பானைக்கு புதிய ஓட்டைப் பானை மாற்றாகாது .சரியான பானையைத் தேர்வுசெய்து வாங்கத் தெரிந்தவர்களால் மட்டுமே பழுதில்லாத பானையை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.