Thursday, September 28, 2023

 



தலைப்பு : சில நேரங்களில் சில விஞ்ஞானிகள்

வெளியீட்டாளர்: விகடன் பிரசுரம்

ஆண்டு : ஜனவரி 2009

 ISBN பதிவு எண்:978-81-8476-183-2

மொழி : தமிழ்

கருப்பொருள் : விஞ்ஞானிகளின் வித்தியாசமான அனுபவங்கள்

பக்கங்கள்  208  விலை Rs.50

 

      நான் ஒரு விஞ்ஞானியாக ஆகவேண்டும் என்ற ஓர் எண்ணம் எனக்குள் இருந்திருக்கவேண்டும்அறிவியலை விருப்பப் பாடமாக படித்ததோடு அறிவியியலில் சாதனை புரிந்த விஞ்ஞானிகளைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்இதற்கு  “ ... இந்த விஞ்ஞானிகள்” என்ற தலைப்பில் சயன்ஸ் ரிப்போர்ட்டர் மற்றும் சயன்ஸ் டுடே போன்ற இதழ்களில் தொடந்து வெளிவந்த செய்திக் குறிப்புக்களே காரணாமாக இருந்தது.

120 விஞ்ஞானிகள் பற்றிய சுவாரசியமான அனுபவங்களை அந்த விஞ்ஞானிகளின் படத்துடன் எழுதிமுடித்தவுடன் முதலில் NCBH மூலம் வெளியிட நினைத்தேன்அப்போது விகடன் பிரசுரம் பல பொது அறிவியல் ,கலைமருத்துவம் சார்ந்த நூல்களைத் தாமாகத் தயாரித்து வெளியிட்டார்கள் . நான் விகடன் வெளியிட்ட பல நூல்களை வாங்கியிருக்கிறேன்விகடன் பிரசுரம் நம்முடைய நூலை பிரசுரிக்க ஏற்றுக்கொள்வார்களோ மாட்டார்களோ என்று சற்று தயக்கத்துடன் அந்நூலை விகடனுக்கு அனுப்பி வைத்தேன். அந்நூல் மிகக்குறுகிய காலத்திலேயே  100 விஞ்ஞானிகளின் சுவாரசியமான தகவல்களுடன் பிரசுரிக்கப்பட்டு ஒரு குறுநூலாக வெளிவந்தது.

           திரட்டுப்பால் மாதிரி அறிவியலார் பற்றிய சுவாரசியமான செய்திகளின் குவியல் .இந்த நூலுக்கு தமிழக அரசின் சிறந்த பொது அறிவியல் நூலுக்கான பரிசு கிடைக்கும் என்று முழு நம்பிக்கையில் இருந்தேன்எனோ கிடைக்கவில்லதமிழ் வளர்ச்சித் துறை மட்டுமே தீர்மானிக்க வேண்டிய விஷயங்களில் அயலார்களின் குறுக்கீடு தகுதியான வெற்றியாளர்களை ற்றிவிடுகிறது


 

விஞ்ஞானி ஆவோம் வாரீர் -ஓர் அறிவியல் ஆசிரியரும் இரண்டு மாணவர்களும்


தலைப்பு : விஞ்ஞானி ஆவோம் வாரீர் -ஓர் அறிவியல் ஆசிரியரும் இரண்டு மாணவர்களும்

வெளியீட்டாளர்: தனலட்சுமி வெளியீடு (சுய வெளியீடு )

ஆண்டு டிசம்பர்  2001

மொழி : தமிழ்

கருப்பொருள் பொது அறிவியல் ,இயற்பியல்

பக்கங்கள் 180 விலை Rs.60

 

       இயற்பியல் பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை அறிவியலில் ஏற்படும் ஐயங்களுக்கெல்லாம் விளக்கம் கொடுத்து ஒரு நூல் எழுதவேண்டும் என்று எனக்குள் நீண்ட நாள் ஆசை இயற்பியல் மாணவர்களுக்கு பல ஆண்டுகள் அடிப்படை இயற்பியல் பாடங்களை இளமறிவியல் மற்றும் மூதறிவியல் மாணவர்களுக்குத் தொடர்ந்து உள்ளார்ந்த ஆர்வத்துடன் நடத்தி வந்ததாலும்  ,பொறியியல் சேர் விரும்பும் மாணவர்களுக்கும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் MIT ல் சேர விரும்பும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்ததாலும் இது எனக்கு எளிதாக வந்தது இதில் வட்டப்பாதை இயக்கம் ,ஈர்ப்பு ,எடையற்ற நிலை,உராய்வு ,நேர்கோட்டு உந்தம்,நிலைமத் திருப்புத் திறன் ,கோண உந்தம் .ஆர்க்கிமிடிஸ் தந்துவம், மிதத்தல் விதி ,சீரிசை அலைவியக்கம் போன்ற  10 தலைப்புகளில் ஐயங்களையும் விளக்கங்களையும் ஐன்ஸ்டின் என்ற ஒரு ஆசிரியருக்கும்   ராமன் மற்றும் பாபா  என்ற இரண்டு மாணவர்களுக்கும் இடையே நிகழும் கலந்துரையாடல் மூலம் விவரித்துள்ளேன். இது இயல்பான நூலைப்போலன்றி வித்தியாசமாக இருந்ததாலும் ,கூறப்பட்டுள்ள விவரங்கள் அறிவியலின் இயற்கையைப் புரியும் விதத்தில் கணித மொழிகளுடன் விளக்குவதாக இருந்ததாலும் மைசூரில் உள்ள இந்திய மைய மொழியியல் கழகம் ஆய்வுக்குரிய ஒரு நூலாக எடுத்துக்கொண்டு சிறப்புச் செய்தது

 

     நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1968 ஜூலை  முதல் 1971 ஜுலை வரை முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்தேன். எனக்கு முனைவர் V .சண்முகசுந்தரம்  வழிகாட்டியாக இருந்தார். அவருடைய நெருக்கமான நண்பர் ,முனைவர் R .சபேசன் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கின்றார் .இருவரும் எனக்கு மூதறிவியல் வகுப்புகள் நடத்திய ஆசிரியர்கள்..அதை நினைவு கூறும் விதத்தில் இந்நூலை அவர்கள் இருவருக்கும் அன்பளிப்புச் செய்து வெளியிட்டேன் . அது எனக்கு பரிபூர்ண மன நிறைவைத் தந்திருக்கின்றது.

 

      இந்நூலை வெளியீட்டாளர் மூல வெளியிட்டால் காலதாமதம் ஆகலாம் என்று நினைத்து நானே வெளியிட்டேன் . மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும்  என்று நம்பி 1000 பிரதிகள் அச்சிட்டேன். அதன் பிறகுதான் தெரிந்தது நூலை சந்தைப்படுத்துவது எவ்வளவு கஷ்டம் என்று . .என்னுடைய் வழிகாட்டி அப்போது ஒரு பள்ளிக்கு நிர்வாக மேலாளராக இருந்தார். என்னுடைய சிக்கலைப் புரிந்து கொண்டு அவருடைய பள்ளிக்கு 6 பிரதிகளை விலைக்கு வாங்கியது இப்போதும் மனதிற்கு  நெகிழ்ச்சியாக இருக்கின்றது. அதன் பிறகு தமிழக அரசு பொது நூலகங்களுக்கு வாங்குமாறு விண்ணப்பம் கொடுத்தேன். அது ஏற்றுக்கொள்ளப் பட்டு இந்த நூலை அதிகம் வாங்கிக்கொண்டார்கள் .அனுப்பும் செலவை நம்மிடமே கட்டிவிடுவதால் இந்த முயற்சியால்  லாபம் இல்லை அதிக நஷ்டமும் இல்லை. சிறந்த அறிவியல் தமிழ் நூலுக்கு வழங்கும் தமிழக அரசின் பரிசு இந்நூலுக்குக் கிடைக்கும் என்று நினைத்தேன்  ஆனால் அந்த நினைப்பு தமிழ் வளர்ச்சித் துறைக்கு எழவில்லை. நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் வேறு இல்லை என்ற பாடல் வரிகளை மனதிற்குள்லேயே வாசித்துவிட்டு அமைதியாக இருந்தேன்

 

 

. உலகை மாற்றிய புதிய  மூலப்  பொருட்கள்


உலகை மாற்றிய புதிய  மூலப்  பொருட்கள்  

வெளியீட்டாளர் அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு   

ஆண்டு செப்டம்பர் 2022  

பதிவு எண் ASIN BOBFKMJ427

மொழி : : தமிழ்

கருப்பொருள்: பொதுஅறிவியல்  

பக்கங்கள் 120 விலை 3.50 USD

 

       உலகில் மக்கள் பெருக்கமும் அவர்களுடைய தேவையும் அதிகரிக்கும் போது மாற்றங்கள் ஏற்பட்டன.  கற்களாலான கருவிகள்  உலோகங்களைப் பற்றி அறிந்து கொண்டவுடன் உலோகங்களாலான கருவிகளாயின உலோகங்கள் தேவைகளை ஈடுசெய்ய முடியாத போது கலப்பு உலோகங்கள் பயனுக்கு வந்தன . அதன் பின்னர் இயந்திரத் தொழிநுட்பத்தைக் கையாண்டார்கள். இவைகளும் கூட மக்களின் தேவையை முழுமையாக அளிக்கக் கூடியனவாக இல்லை,. அறிவியல் மற்றும் தொழிநுட்பங்களின் வளர்ச்சியால் இன்றைக்கு புதிய புதிய மூலப்பொருட்களையும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். இந்நூல் அப்படிப்பட்ட பொருட்களை பட்டியலிட்டு அவற்றைப் பற்றி விவரிக்கின்றது. இதில் .நெகிழி எனும் பிளாஸ்டிக்,.கிராபீன்,.ஒளியிழைகள்,.சிலிகோன்கள்,.கலப்பு உலோகங்கள், கண்ணாடி நிலை உலோகம்,.வடிவம் மறவா கலப்பு உலோகங்கள்,.டெப்லான்,.செர்மெட்டுக்கள், .மீக்கடத்திகள்போன்ற   10 புதிய மூலப்பொருட்களையும் அவற்றின் வளர்ச்சி மற்றும் பயன்பாடுகளையும் விளக்கிக் கூறுகின்றது

             2005 ல் அரசுக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சில காலம் பணிபுரிந்தேன். அப்போது பொறியியல் மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் நடத்தியபோது பலபுதிய மூலப் பொருட்களைத் தெரிந்து கொண்டதுடன்  புதிய தொழில் நுட்பத்தின் அறிவியலையும் புரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. .இந்நூலை எழுதுவதற்கு என்னுடைய பொறியியல் கல்லூரி அனுபவங்களே காரணமாக இருந்தது. இந்த நூலை மணிவாசகர் பதிப்பகத்திற்குக் கொடுத்திருந்தேன். நீண்ட காலம் பதிப்பிக்காமல் வைத்திருந்ததால் நான் விசாரிக்க ஒருநாள் எனக்கே திருப்பி அனுப்பிவைத்து விட்டார்கள் . நீண்ட காலத்திற்குப் பிறகு அதை சுய வெளியீடாக அமேசான் KDP மூலம் வெளியிட்டேன்

 

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

வேதித் தனிமங்கள்-1,( ஹைட்ரஜன் முதல் கிரிப்டான் வரை)



தலைப்பு : வேதித் தனிமங்கள்-1,( ஹைட்ரஜன் முதல் கிரிப்டான் வரை)

வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு   

ஆண்டு : ஜூன் 2022

பதிவு எண் ASIN BOB4FRRQQ1

மொழி : : தமிழ்

கருப்பொருள் : வேதியியல்

பக்கங்கள் 130 விலை 5 USD

 

      சயன்ஸ் டுடே மற்றும் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழ்களில் தொடர்ந்து தனிமங்களை பற்றியும் உலோகங்களைப் பற்றியும் கட்டுரைகள் வரும். அவற்றை நான் ஆர்வமாகப் படிப்பேன். ஒரு குறிப்பிட்ட உலோகம் பற்றிய கூடுதல்   விஷயங்களை த்  தொழில் நுட்பத் துறைகளில் அவற்றின் பயன்பாடுகள் மூலம் தெரிந்து கொண்டு  சயன்ஸ் டுடே யில் வந்தது போல தமிழில் எழுதி விஞ்ஞானச் சுடரில் வெளியிடவேண்டும் என்று விரும்பினேன் .இதற்காக அறிவியல் களஞ்சியங்களை படிப்பேன். இப்பொழுது வலைத் தளங்கள் மிகவும் பயன்தருகின்றன. உலோகங்களைப் பற்றிய பல கட்டுரைகள் விஞ்ஞானச் சுடர் மட்டுமின்றி முத்தாரம் ,தினமணி (வார இணைப்பு)  போன்ற பத்திரிக்கைகளிலும்  வெளிவந்துள்ளன. பின்னர் ஹைட்ரஜன் முதல் யுரேனியம் வரையுள்ள அனைத்துத் தனிமங்களைப் பற்றி ஒரு நூல் எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஏற்கனவே பல கட்டுரைகள் எழுதியதால் வேதித் தனிமங்கள் என்ற தலைப்பில் நூலை எளிதாக எழுத முடிந்தது  . NCBH வெளியிட ஒப்புக்கொண்டு ஒளியச்சு செய்து திருத்தம் செய்வதற்காக எனக்கு அனுப்பிவைத்தார்கள். அதில் திருத்தமே செய்யமுடியாத அளவிற்குப் பலபிழைகள் இருந்ததால அதை அவர்களுக்கு அனுப்பிவைக்கவில்லை. .நூலாக வெளியிட்டுவிடவேண்டும் என்ற ஆற்வத்தில் அமேசான் KDP மூலம் சுய வெளியீடாக  மூன்று பகுதிகளாக்கி வெளியிட்டேன். 92 இயற்கைத் தனிமங்கள் பற்றிய முக்கிய விவரங்களைத் தொகுத்து ,தனிமத்தின் கண்டுபிடிப்பு ,  பிரித்தெடுத்தல். பண்புகள்,பயன்கள் பற்றி இந்நூல்கள் விவரிக்கின்றது. இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு   ஹைட்ரஜன் (அணுவெண் 1) முதல்  கிரிப்டான் (அணுவெண் 36 வரை உள்ள வேதித்தனிமங்கள் முதல் தொகுதியாகவும் ருபிடியம் (அணுவெண் 37) முதல் லாந்தனம் தொடர் (அணுவெண் 57-71) வரைஉள்ள வேதித்தனிமங்சள் இரண்டாம் தொகுதியாகவும்  ஹாப்னியம் (அணுவெண் 72 ) முதன் யுரேனியம் (அணுவெண் 92 ) மற்றும் சில  புறயுரேனியத்தனிமங்கள் (Transuranic elements)  மூன்றாம் தொகுதியாகவும் அமைக்கப் பட்டுள்ளது       

 

 

வேதித் தனிமங்கள்-2, (ருபிடியம் முதல் லாந்தனம் தொடர் வரை)

என் புத்தகங்கள் என் வாழ்க்கை


 

தலைப்பு : வேதித் தனிமங்கள்-2, ( ருபிடியம் முதல் லாந்தனம் தொடர் வரை)

வெளியீட்டாளர்  : அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு   

ஆண்டு ஜுலை 2022

பதிவு எண் ASIN BOB6PDGWG2

மொழி : : தமிழ்

கருப்பொருள்: வேதியியல்  

பக்கங்கள் 70 விலை 4 USD

 

            இந்நூலின் இறுதியில் இரு பிற்சேர்க்கைகளை  இணைதந்துள்ளேன் முதலாவது பிற் சேர்க்கையில் தனிமங்களை வகைப்படுத்தி பட்டியலிடுகிறது இரண்டாவது தனிமங்களின் குறியீடு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ,கண்டுபிடித்தவர் மற்றும் அவரது நாடு போன்ற விவரங்களைக் கொடுத்துள்ளேன்

வேதித் தனிமங்கள்-3, (ஹாப்னியம்  முதல் புற யுரேனியத் தனிமங்கள் வரை)

 



 

தலைப்பு : வேதித் தனிமங்கள்-3, (ஹாப்னியம்  முதல் புற யுரேனியத் தனிமங்கள் வரை)

வெளியீட்டாளர் அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு   

ஆண்டு செப்டம்பர் 2022 

 பதிவு எண் ASIN BOBGWY8CQF

மொழி : : தமிழ்

கருப்பொருள் : வேதியியல்

பக்கங்கள் விலை: 3 USD