தலைப்பு : சில நேரங்களில் சில விஞ்ஞானிகள்
வெளியீட்டாளர்: விகடன் பிரசுரம்
ஆண்டு : ஜனவரி 2009
ISBN பதிவு எண்:978-81-8476-183-2
மொழி : தமிழ்
கருப்பொருள் : விஞ்ஞானிகளின் வித்தியாசமான அனுபவங்கள்
பக்கங்கள் 208 விலை Rs.50
நான் ஒரு விஞ்ஞானியாக ஆகவேண்டும் என்ற ஓர் எண்ணம் எனக்குள் இருந்திருக்கவேண்டும். அறிவியலை விருப்பப் பாடமாக படித்ததோடு அறிவியியலில் சாதனை புரிந்த விஞ்ஞானிகளைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். இதற்கு “ஒ ... இந்த விஞ்ஞானிகள்” என்ற தலைப்பில் சயன்ஸ் ரிப்போர்ட்டர் மற்றும் சயன்ஸ் டுடே போன்ற இதழ்களில் தொடந்து வெளிவந்த செய்திக் குறிப்புக்களே காரணாமாக இருந்தது.
120 விஞ்ஞானிகள் பற்றிய சுவாரசியமான அனுபவங்களை அந்த விஞ்ஞானிகளின் படத்துடன் எழுதிமுடித்தவுடன் முதலில் NCBH மூலம் வெளியிட நினைத்தேன். அப்போது விகடன் பிரசுரம் பல பொது அறிவியல் ,கலை, மருத்துவம் சார்ந்த நூல்களைத் தாமாகத் தயாரித்து வெளியிட்டார்கள் . நான் விகடன் வெளியிட்ட பல நூல்களை வாங்கியிருக்கிறேன். விகடன் பிரசுரம் நம்முடைய நூலை பிரசுரிக்க ஏற்றுக்கொள்வார்களோ மாட்டார்களோ என்று சற்று தயக்கத்துடன் அந்நூலை விகடனுக்கு அனுப்பி வைத்தேன். அந்நூல் மிகக்குறுகிய காலத்திலேயே 100 விஞ்ஞானிகளின் சுவாரசியமான தகவல்களுடன் பிரசுரிக்கப்பட்டு ஒரு குறுநூலாக வெளிவந்தது.
திரட்டுப்பால் மாதிரி அறிவியலார் பற்றிய சுவாரசியமான செய்திகளின் குவியல் .இந்த நூலுக்கு தமிழக அரசின் சிறந்த பொது அறிவியல் நூலுக்கான பரிசு கிடைக்கும் என்று முழு நம்பிக்கையில் இருந்தேன். எனோ கிடைக்கவில்ல. தமிழ் வளர்ச்சித் துறை மட்டுமே தீர்மானிக்க வேண்டிய விஷயங்களில் அயலார்களின் குறுக்கீடு தகுதியான வெற்றியாளர்களை ற்றிவிடுகிறது
No comments:
Post a Comment