. உலகை மாற்றிய புதிய மூலப் பொருட்கள்
உலகை மாற்றிய புதிய மூலப் பொருட்கள்
வெளியீட்டாளர் அமேசான் KDP ஒளியச்சுப்
பதிப்பு
ஆண்டு செப்டம்பர் 2022
பதிவு எண் ASIN BOBFKMJ427
மொழி : : தமிழ்
கருப்பொருள்: பொதுஅறிவியல்
பக்கங்கள் 120 விலை 3.50 USD
உலகில் மக்கள் பெருக்கமும் அவர்களுடைய தேவையும் அதிகரிக்கும் போது மாற்றங்கள் ஏற்பட்டன. கற்களாலான கருவிகள் உலோகங்களைப் பற்றி அறிந்து கொண்டவுடன் உலோகங்களாலான கருவிகளாயின உலோகங்கள் தேவைகளை ஈடுசெய்ய முடியாத போது கலப்பு உலோகங்கள் பயனுக்கு வந்தன . அதன் பின்னர் இயந்திரத் தொழிநுட்பத்தைக் கையாண்டார்கள். இவைகளும் கூட மக்களின் தேவையை முழுமையாக அளிக்கக் கூடியனவாக இல்லை,. அறிவியல் மற்றும் தொழிநுட்பங்களின் வளர்ச்சியால் இன்றைக்கு புதிய புதிய மூலப்பொருட்களையும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். இந்நூல் அப்படிப்பட்ட பொருட்களை பட்டியலிட்டு அவற்றைப் பற்றி விவரிக்கின்றது.
இதில் .நெகிழி எனும் பிளாஸ்டிக்,.கிராபீன்,.ஒளியிழைகள்,.சிலிகோன்கள்,.கலப்பு உலோகங்கள், கண்ணாடி நிலை
உலோகம்,.வடிவம் மறவா கலப்பு உலோகங்கள்,.டெப்லான்,.செர்மெட்டுக்கள்,
.மீக்கடத்திகள்போன்ற 10 புதிய
மூலப்பொருட்களையும் அவற்றின் வளர்ச்சி மற்றும் பயன்பாடுகளையும் விளக்கிக் கூறுகின்றது
2005 ல் அரசுக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு
பெற்றபின் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சில காலம் பணிபுரிந்தேன். அப்போது பொறியியல்
மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் நடத்தியபோது பலபுதிய மூலப் பொருட்களைத் தெரிந்து கொண்டதுடன் புதிய தொழில் நுட்பத்தின் அறிவியலையும் புரிந்து
கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. .இந்நூலை எழுதுவதற்கு என்னுடைய பொறியியல் கல்லூரி அனுபவங்களே
காரணமாக இருந்தது. இந்த
நூலை மணிவாசகர் பதிப்பகத்திற்குக் கொடுத்திருந்தேன். நீண்ட காலம் பதிப்பிக்காமல் வைத்திருந்ததால்
நான் விசாரிக்க ஒருநாள் எனக்கே திருப்பி அனுப்பிவைத்து விட்டார்கள் . நீண்ட காலத்திற்குப்
பிறகு அதை சுய வெளியீடாக அமேசான் KDP மூலம் வெளியிட்டேன்
No comments:
Post a Comment