வேதித் தனிமங்கள்-1,( ஹைட்ரஜன் முதல் கிரிப்டான் வரை)
தலைப்பு : வேதித் தனிமங்கள்-1,(
ஹைட்ரஜன் முதல் கிரிப்டான் வரை)
வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப்
பதிப்பு
ஆண்டு : ஜூன் 2022
பதிவு எண் ASIN BOB4FRRQQ1
மொழி : : தமிழ்
கருப்பொருள் : வேதியியல்
பக்கங்கள் 130 விலை 5 USD
சயன்ஸ் டுடே மற்றும் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழ்களில் தொடர்ந்து தனிமங்களை பற்றியும் உலோகங்களைப் பற்றியும் கட்டுரைகள் வரும். அவற்றை நான் ஆர்வமாகப் படிப்பேன். ஒரு குறிப்பிட்ட உலோகம் பற்றிய கூடுதல் விஷயங்களை த் தொழில் நுட்பத் துறைகளில் அவற்றின் பயன்பாடுகள் மூலம் தெரிந்து கொண்டு சயன்ஸ் டுடே யில் வந்தது போல தமிழில் எழுதி விஞ்ஞானச் சுடரில் வெளியிடவேண்டும் என்று விரும்பினேன் .இதற்காக அறிவியல் களஞ்சியங்களை படிப்பேன். இப்பொழுது வலைத் தளங்கள் மிகவும் பயன்தருகின்றன. உலோகங்களைப்
பற்றிய பல கட்டுரைகள் விஞ்ஞானச் சுடர் மட்டுமின்றி முத்தாரம் ,தினமணி (வார இணைப்பு) போன்ற பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன. பின்னர் ஹைட்ரஜன் முதல் யுரேனியம்
வரையுள்ள அனைத்துத் தனிமங்களைப் பற்றி ஒரு நூல் எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஏற்கனவே
பல கட்டுரைகள் எழுதியதால் வேதித் தனிமங்கள் என்ற தலைப்பில் நூலை எளிதாக எழுத முடிந்தது . NCBH வெளியிட ஒப்புக்கொண்டு ஒளியச்சு செய்து திருத்தம்
செய்வதற்காக எனக்கு அனுப்பிவைத்தார்கள். அதில் திருத்தமே செய்யமுடியாத அளவிற்குப் பலபிழைகள்
இருந்ததால அதை அவர்களுக்கு அனுப்பிவைக்கவில்லை. .நூலாக வெளியிட்டுவிடவேண்டும் என்ற
ஆற்வத்தில் அமேசான் KDP மூலம் சுய வெளியீடாக
மூன்று பகுதிகளாக்கி வெளியிட்டேன். 92 இயற்கைத் தனிமங்கள் பற்றிய முக்கிய விவரங்களைத் தொகுத்து ,தனிமத்தின் கண்டுபிடிப்பு , பிரித்தெடுத்தல். பண்புகள்,பயன்கள் பற்றி இந்நூல்கள் விவரிக்கின்றது. இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஹைட்ரஜன் (அணுவெண் 1) முதல் கிரிப்டான் (அணுவெண் 36 வரை உள்ள வேதித்தனிமங்கள் முதல் தொகுதியாகவும் ருபிடியம் (அணுவெண் 37) முதல் லாந்தனம் தொடர் (அணுவெண் 57-71) வரைஉள்ள வேதித்தனிமங்சள் இரண்டாம் தொகுதியாகவும் ஹாப்னியம் (அணுவெண் 72 ) முதன் யுரேனியம் (அணுவெண் 92 ) மற்றும் சில புறயுரேனியத்தனிமங்கள் (Transuranic
elements) மூன்றாம் தொகுதியாகவும் அமைக்கப் பட்டுள்ளது
வேதித் தனிமங்கள்-2, (ருபிடியம் முதல் லாந்தனம் தொடர் வரை)
என் புத்தகங்கள் என் வாழ்க்கை
தலைப்பு : வேதித் தனிமங்கள்-2,
( ருபிடியம் முதல் லாந்தனம் தொடர் வரை)
வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு
ஆண்டு ஜுலை 2022
பதிவு எண் ASIN
BOB6PDGWG2
மொழி : : தமிழ்
கருப்பொருள்:
வேதியியல்
பக்கங்கள் 70 விலை 4 USD
இந்நூலின் இறுதியில் இரு பிற்சேர்க்கைகளை இணைதந்துள்ளேன் முதலாவது பிற் சேர்க்கையில் தனிமங்களை வகைப்படுத்தி பட்டியலிடுகிறது இரண்டாவது தனிமங்களின் குறியீடு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ,கண்டுபிடித்தவர் மற்றும் அவரது நாடு போன்ற விவரங்களைக் கொடுத்துள்ளேன்
வேதித் தனிமங்கள்-3, (ஹாப்னியம்
முதல் புற யுரேனியத் தனிமங்கள் வரை)
தலைப்பு : வேதித் தனிமங்கள்-3,
(ஹாப்னியம்
முதல் புற யுரேனியத் தனிமங்கள் வரை)
வெளியீட்டாளர் அமேசான் KDP ஒளியச்சுப்
பதிப்பு
ஆண்டு செப்டம்பர் 2022
பதிவு எண் ASIN BOBGWY8CQF
மொழி : : தமிழ்
கருப்பொருள் : வேதியியல்
பக்கங்கள் விலை: 3 USD
No comments:
Post a Comment