சிறு கதை
மாற்றம்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்
நான் ஐந்து வயதுச் சிறுவன் .என் தந்தை கூத்து மேடைகளில் நடிக்கும் ராஜபார்ட் .எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது .அந்த ஊரில் கோயில் திருவிழா வந்து விட்டால் கூத்து நாடகம் போட பல குழுவினர்களுக்கிடையே பலத்த போட்டி இருக்கும். .என் தந்தையார் வாய்ப்புக் கேட்டு அந்த ஊர் தர்மகர்த்தா பெரிய ஜமீன்தாரிடம் போய் நாட்கணக்கில் தவம் கிடப்பார். .ஜமீன்தார் ஹீரோயின் அழகா, இளமையா இருக்காளான்னு கேட்டுத் தெரிந்து கொண்டு சில சமயம் வாய்ப்புக் கொடுப்பார்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் வந்து சினிமா ஸ்டுடியோவில் லைட் பாய்யாகச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு ஒரு உதவி இயக்குனராக வளர்ந்து விட்டேன் .என் மகள் காலத்தின் கோலம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒரு பெரிய சினிமா ஸ்டாராகி விட்டாள்.பல தயாரிப்பாளர்கள் அவளுடைய கால் சீட்டுக்கு வீட்டின் முன்னே தவம் கிடக்கின்றார்கள் . அந்தக் கூட்டத்தில் அந்த பெரிய ஜமின்தாரின் இளைய மகனும் முண்டியடித்து முன் வரிசையில் உட்கந்திருந்தார்.காலத்தின் கோலத்தைக் கண்டு மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டேன்.
No comments:
Post a Comment