எழுதாத கடிதம்
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று மக்கள் மேடையில் அடிக்கடி விளம்பரப் படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் அள்ளிக் குவித்த சொத்துக்கள் கொஞ்சம் நஞ்சமில்லை .ஒவ்வோர் அரசியல் வாதியும் அவரவர் வகிக்கும் பதவிகளைப் பொறுத்து சொத்தின் அளவு உள்ளது. எம் எல் ஏ, எம் பி என்றால் பொறியியல் கல்லூரிகள்,மற்றும் வேறு பல கல்லூரிகள் ,சொகுசான ஹோட்டல்கள் ,ரியல் எஸ்டேட் ,அப்பார்ட்மென்ட் ,பண்ணைத் தோட்டங்கள், ,ஏக்கர் கணக்கில் நிலங்கள் ,பல சிட்டிகளில் ஆடம்பர பங்களாக்கள், ,பெரிய கார்கள் , வங்கிகளில் பெரும் பணம்,பினாமி பெயரில் சொத்துக்கள், கருப்புப் பணம் அப்பப்பா ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்றைக்கு ஆளையே கடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.நாட்டையே கையில் கொடுத்தாலும் ஆசை இன்னும் அடங்கவில்லை.
இவர்களா மக்களுக்குச் சேவை செய்வார்கள் என்று நம்புகின்றீர்கள் .மக்கள் தான் என்றைக்கும் ஒரு நாட்டின் உண்மையான ராஜாக்கள். இன்றைக்கு இந்த ராஜாக்கள் மந்திரிகளுக்கும் சேவகர்களுக்கும் அடிமைபோல வேலை செய்து அவர்களை மகிழ்வித்து வருகின்றார்கள். என்பதைப் பார்க்கும் போது மனம் கனத்துப் போகிறது. சிக்கன் பீசை யெல்லாம் உள்ளே தள்ளிவிட்டு வெறும் எலும்புத் துண்டுகளை வீசி ஏறிய,அதையே கூட்டம் கூட்டமாய் அலை மோதி நாய்களைப் போல சண்டை போட்டு கவ்விக் கொண்டு ஓடப் பார்க்கும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை இந்த
நாட்டில் மந்திரிகளே ராஜாக்கள். ராஜாக்களோ வெறும் நாடோடிகள் ஓட்டண்டிகள் பணம் சம்பாதிக்கக் கூடிய எல்லா வழிகளையும் அவர்களே வைத்துக் கொண்டார்கள், வெறும் உழைப்பை மட்டும் மக்களுக்குக் கொடுத்து விட்டார்கள். பலருக்கு அப்படி உழைக்கக் கூட வழியில்லை. எல்லாம் அவர்களையே அண்டிப் பிழைக்க வேண்டும் என்பதற்காகவும் , அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு புனைப் படை. நாய்ப் படை என்று ஒரு கூட்டம் இருப்பதற்காகவும் அவர்கள் செய்து கொள்ளும் ஏற்பாடு. உண்மையில் அரசியல்வாதிகளை விட இந்த அடிவருடிகளால் தான் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்.இந்திய அரசியலில் ஒரு மகத்தான வரவேற்கத்தக்க மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் விரும்பினால்,இந்த அடிவருடிகள் கூட்டம் தங்கள் இனத்தின் பெரும்பான்மையினர் நலன் கருதி திருந்த வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.
No comments:
Post a Comment