Tuesday, October 9, 2012


Micro aspects of developing inherent potentials

நினைவாற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

நினைவாற்றல் என்பது ஒருவருடைய முன்னேற்றத்தில் மிக முக்கியமான பங்கைப் பெற்றுள்ளது .நினைவாற்றலின்றியே வாழ்கையில் முன்னேற முயலும் போது பெரும்பாலும் எதிர்பார்த்த வெற்றி கிட்டுவதில்லை.சிறந்த மேடைப் பேச்சாளர்கள்,ஆசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள்,துப்பறியும் வல்லுனர்கள் நிலைவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.அதிகமான செய்திகளை புள்ளி விவரங்களுடன் ஒரே சமயத்தில் சொல்லும் தகுதியுடையவர்களாக இருப்பதால் இவர்கள் மற்றவர்களுக்கு உடனடிப் பயன்தரக்கூடிய வழிகாட்டிகளாக விளங்குகின்றார்கள்.பொதுவாக நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வளரும்போதே பயிற்சி எடுத்துக் கொள்வதில்லை. மாறாக பண்பாடு, கலாச்சாரம் ,நாகரீகம் இவற்றால் சீர்கெட்டு வரும் சமுதாயச் சூழலில் இயல்பாகப் பெற்றுள்ள நினைவாற்றலையும் காலப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகின்றார்கள்  

மனித மூளை என்பது இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த விலையில்லா கையடக்கக் கணினி . பிறக்கும் போதே இந்த கணினி  நமக்கு இலவசமாகக் கிடைத்து விட்டது. உற்பத்தியாளன் ஒரு சில முக்கியமான புரோகிராம்களை மட்டுமே இதில் பதிவு செய்து வைத்துள்ளான். பிற்பயன் கருதி நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் தான் இதில் வேறு பல செய்திகளைப் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் .இந்தப் பதிவுகளில் குறுக்கீடு இல்லாமலும் ,அழிந்து போய்விடாமலும், வைரஸ் பாதிப்பு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பாகும்.  

மூளையில் செய்திகளைப் பதிவு செய்வதற்கு அங்கே பல பில்லியன் நியூரான் (neuron) செல்கள் உள்ளன இவற்றின் மூலம் எண்ணிலா செய்திகளைப் பதிவு செய்துவைக்க முடியும் . என்றாலும் ஒரு மனிதன் மிக மிகக் குறைந்த அளவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறான். சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் மேதையான ஆல்பர்ட் அயின்ஸ்டீன் தன் மூளையில் சுமார் 2 விழுக்காடு தான் பயன் படுத்தியுள்ளார் என்றும்,சாதாரண மனிதர்கள் இன்னும் குறைவாக சுமார் 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே பயன் படுத்துகின்றார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள் . உண்மையில் மூளையின் பெரும் பகுதி மனிதர்களால் பயன்படுத்திக் கொள்ளப் படாமலேயே இருக்கிறது.

மூளையில் பதிவு செய்த செய்திகளை மட்டுமே ஒருவர் அதை வேண்டும் போது திரும்பப் பெற முடியும்.பதிவு செய்யாத செய்திகளால் ஒருவருக்குப் பயன் வருவதில்லை .காலம் செல்லச் செல்ல நினைவுகள் மெள்ள மெள்ள மறைந்து போய்விடுகின்றன இதை நாம் மறதி எனக் குறிப்பிடுகின்றோம்.மூளையில் அழுத்தமாகப் பதிவு செய்யப்படாத செய்திகளே விரைவில் மறந்து போய்விடுகின்றன.பதிவு செய்யும் போது சுற்றுப் புற இரைச்சல்களையும்(தேவையில்லாத செய்திகள் ) சேர்த்துப் பதிவு செய்வதும்,தொடர்ச்சியின்றி விட்டு விட்டுப் பதிவு செய்வதும், ஏறக்குறைய ஒத்த செய்திகளை வேறு படுத்தாது ஒரே இடத்தில் மேற்பொருந்தி பதிவு செய்வதும் மறதிக்கு முன் விளைவுகளாகி விடுகின்றன .மறதியைத் தவிர்க்க பதிவுகளை ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்கள் .   

அனுபவத்தின் அடிப்படியிலான விவரங்களின் பதிவுகள் ,கண்ணால் உணரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பதிவுகள், பிற உணர் உறுப்புகளின் வாயிலாக செய்யப்பட்ட பதிவுகளை விட ஆழமானவை. அதனால் பதிவு செய்ய வேண்டிய செய்திகளை கண்ணால் உணர்ந்த ,அல்லது ஏற்கனவே நன்கு அறிமுகமான பொருட்களோடு தொடர்பு படுத்தி பதிவு செய்துகொண்டால் நீண்ட நாட்களுக்கு நினைவிற் கொள்ளலாம். எடுத்துக் காட்டாக ஒருவர் தொலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ,என பல விதமான எண்களை நினைவிற் கொள்ளும் போது மறதியால் சில பிழைகளை செய்யலாம் .எண்களை நினைவிற் கொள்ள ஒரு எளிய வழியைச் சொல்லி இருக்கின்றார்கள் இது சட்ட திட்டமான வழிமுறை இல்லை. ஒவ்வொருவரும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பொருட்களை தீர்மானித்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு முறை பயன்படுத்திய பிறகு மாற்றினால் குழப்பம் வரும் .ஒற்றை எண்களுக்கு உயிரில்லாப் பொருட்களும், இரட்டை எண்களுக்கு உயிர்ப் பொருட்களும் சுட்டுப் பொருளாக எடுத்துக் கொள்ளப் படுகின்றன. 1 - தூண்/மெழுகு வர்த்தி (ஒற்றை குச்சி),2 - ஆண்-பெண் (இருபாலர் ) , 3 - மூவண்ணக் கொடி/முக்கனி 4 -பசு மாடு (நாலு கால்கள் ),5 - கை விரல்கள் ,6 - முருகப் பெருமான் (ஆறுமுகக் கடவுள்), 7 -தெரு விளக்கு ,8 - எட்டுக் கால் பூச்சி ,9 - பனை ஒலை விசிறி ,- சிவப்பணு (வட்ட வடிவமான செல் ) உதாரணமாக் 235943 என்ற எண்ணை காதலர்கள் -மூவண்ணக் கொடி -கை விரல்கள் -விசிறி -பசு மாடு-கொடி என்று தொடர்பு படுத்தி பதிவு செய்ய பெரிய எங்களைக் கூட நினைவிற் கொள்ள முடிகிறது.

ஒருவர் எந்த அளவிற்கு சமுதாயத்திற்கு பயன்தரக் கூடியவராக இருகின்றாரோ அவருக்கு அந்த அளவிற்கு மதிப்பு. பயனற்ற எந்தப் பொருளையும் நாம் ஒருபோதும் வாங்குவதில்லை என்பதைப் போல சமுதாயத்திற்குப் பயன் தரமுடியாத ஒருவரை சமுதாயம் விரும்புவதில்லை. சமுதாயத்திற்கு அதிகமாகப் பயன் தர நாம் அதிகமாக நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment