விண்வெளியில் உலா
சிம்ம ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும் -லியோ
விண்ணில் ஒரளவு அகன்ற பரப்பை அடைத்துக் கொண்டுள்ள லியோ (Leo ) வட்டார விண்மீன் கூட்டம்,பதுங்கிய சிங்கம் போன்று கற்பனை செய்யப் பட்டுள்ளது. இது விர்கோற்கும் ஹைட்ராவிற்கும் இடையில் அமையப் பெற்றுள்ளது. இராசி மண்டல விண்மீன் கூட்டமான இதைக் கதிர்வீதியில் உலா வரும் சூரியன் ஆகஸ்டு 10 முதல் செப்டம்பர் 16 வரியிலான காலத்தில் கடக்கிறது.கிரேக்க புராணத்தில் இது ஹெர்குலஸ் ஸால் கொல்லப்பட்ட சிங்கமாகும். இக் கூட்டத்தில் மொத்தம் 70 விண்மீன்கள் வரை இனமறிந்துள்ளனர்.
இவ் வட்டாரத்தில் உள்ள மிக பிரகாச மிக்க விண்மீன் ரெகுலஸ் என அழைக்கப்படுகின்ற ஆல்பா லியோனிஸ் ஆகும்.விண்ணில் தெரியும் பிரகாசமான விண்மீன் களுள் இது 21 ஆக உள்ளது 77 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இதன் தோற்ற மற்றும் சார்பிலா ஒளிப் பொலி வெண் முறையே 1.36 ,௦.52 ஆகும். 1-2 ஒளிப்பொலிவெண் கொண்ட பிரகாசமான வற்றுள் இதுவே மங்கலானது. இது வெப்ப மிக்க வெண் நீலமான விண்மீனாகும்.இதன் புறப் பரப்பு வெப்பநிலை சுமார் 14000 டிகிரி கெல்வினாக உள்ளது அதனால் இது நமது சூரியனை விட 140 மடங்கு ஒளிர்திறன் மிக்கதாய்.விளங்குகிறது.ரெகுலஸ்,சிரியஸ் இருக்குமிடத்தில் இருந்தால்,பேரண்ட வெளியில் தோன்றும் பிரகாசமிக்க விண்மீன் களைக் காட்டிலும் ஆறு மடங்கு பிரகாசமிக்கதகாத் தோன்றும். ஆனால் ரெகுலஸ் ,சிரியஸ்ஸை விட 10 மடங்கு தொலைவு தள்ளி உள்ளது.
ரெகுலஸ் ஒரு பெரிய விண்மீன். சூரியனின் விட்டத்தைப் போல 2 .8 மடங்கு கூடுதலான விட்டமுள்ளது. தொலை நோக்கி இதை ஓர் இரட்டை விண்மீனாகக் காட்டியுள்ளது .இதன் துணை விண்மீன் 177 வினாடிகள் கோண விலக்கத்துடன்,நமது சூரியனைப் போன்ற இயற்பியல் பண்புகளுடனும், தோற்ற ஒளிப் பொலி வெண் 7 .6 கொண்ட ஒரு மஞ்சள் நிற விண்மீனாகும். இதன் சுற்றுப் பாதை இயக்கம் இன்னும் தெளிவாக வரையறுக்கப் படவில்லை என்றாலும், ஹெர்குலஸ் மற்றும் அதன் துணை விண்மீனின் தனித்த இயக்கம் அவையிரண்டும் ஒன்றுகொன்று தொடர்புள்ளவைகளாகக் காட்டியுள்ளது.ரெகுலஸ்,ஒளிப் பொலி வெண் 13 கொண்ட மங்கலான பப்பி போன்று குறு வெள்ளை வகையான ஒரு விண்மீனை மற்றுமொரு துணை விண்மீனாகக் கொண்டுள்ளது. இதில் ஒன்றுக் கொன்று பெரிதும் சிறிதுமாக வேறுபட்ட மூன்று விண்மீன்கள் ஒன்றிணைந்துள்ளன.மிக வித்தியாசமான இந்த மும்மீன் வானவியலாரை வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.ரெகுலஸ்ஸை நம்மவர்கள் மக நட்சத்திரம் என அழைப்பர். ஏப்ரல் 21 ல் இரவு எட்டு மணி அளவில் ரெகுலஸ் உச்சி வானில் காணப்படும்.
எப்சிலான் (ε) மியூ (μ ) சீட்டா (ζ ) காமா (γ) ஈட்டா (η) மற்றும் ஆல்பா (α) லியோனிஸ் என்ற ஆறு விண்மீன்களின் தொகுப்பை சிக்கில்(Sickle) என்பர். இவை திரும்பிய நிலையிலுள்ள கேள்விக் குறி போன்ற அல்லது கொக்கி போன்ற தோற்றத்துடன் ,சிங்கத்தின் தலை மற்றும் மார்புப் பகுதியைச் சுட்டிக் காட்டுகிறது.
No comments:
Post a Comment