விண்வெளியில் உலா
ஹைட்ரா (Hydra)
பிரித்து வகைப் படுத்தப்பட்டுள்ள 88 வட்டார விண்மீன் கூட்டங்களுள் நீர்ப் பாம்பாக வர்ணிக்கப்பட்டுள்ள ஹைட்ரா மிகவும் பெரியது .130 விண்மீன்கள் இதில் அடங்கி இருந்தாலும் குறிப்பிடும் படியான சிறப்பு ஏதுமில்லை.நீர்ப் பாம்பின் தலை ஆறு விண்மீன்களால் ஆன ஒரு வலை போல உள்ளது . இதன் ஒளிப்பொலிவெண் 3 -4 நெடுக்கையில் காணப்படுகிறது. இது கான்செர் வட்டாரத்திற்கு கீழாக பேரண்ட நடுவரைக் கோட்டிற்கு சற்று வடக்காக உள்ளது. இதன் வால் நுனி இதற்கு 90 டிகிரி விலகி லிப்ராவிற்க்கும் சென்டாரசுக்கும் இடையில் உள்ளது. கிரேக்க புராணத்தில் ஹைட்ரா பல தலை கொண்ட கடல் பாம்பாகக் கற்பிக்கப் பட்டுள்ளது.ஒரு போரில் ஹெர்குலிஸ் என்ற வீரனால் இது கொல்லப் படுகிறது.அந்தப் போரில் ஹெர்குலிஸ்ஸை கான்செர் வட்டாரத்தைச் சுட்டும் நண்டு ஒன்றினால் தாக்கப்படுகின்றான்.
177 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள அல்பார்டு (Alphard) என்றழைக்கப்படும் ஆல்பா ஹைட்ரே ஆரஞ்சு நிறமுடைய பெரு விண்மீனாகும் அரேபிய மொழியில் இதற்கு தனித்து ஒதுங்கி வாழ்கின்ற என்று பொருள். இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 2 ஆகும். ஹைட்ராவில் 3 ஒளிப்பொலிவெண்ணிற்குக் குறைந்த ஒளிப்பொலிவெண் கொண்ட விண்மீன் இது ஒன்றே ஆகும்.
135 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள எப்சிலான்(ε) ஹைட்ரே ஓர் இரட்டை விண்மீனாகும் தொலை நோக்கி இவற்றைப் பகுத்து ஒளிப்பொலிவெண் 3.4 மற்றும் 6.5 கொண்ட விண்மீன்களாகக் காட்டுகின்றது. இதன் சுற்றுக் காலம் 900 ஆண்டுகள்.விர்கோ வட்டாரத்திலுள்ள ஸ்பைகா விண்மீனுக்கு 10 டிகிரி கோண விலக்கத்தில் ஒரு விண்மீன்கள் ஏறக்குறைய சமமான பிரகாசத்துடன் (தோற்ற ஒளிப்பொலிவெண் 3 ) காணலாம் .சில சமயங்களில் பிரகாசமிக்க ஒன்று மட்டும் தெரியும். இது காமா(γ) ஹைட்ரே ஆகும்.மங்கலான மற்றொன்று எப்போதும் வெறும் கண்களுக்குத் தெரிவதில்லை ஏனெனில் இது ஒரு நீண்ட கால அலைவுக் காலம் கொண்ட மாரொளிர் விண்மீனாகும். இதை R ஹைட்ரே எனக் குறிப்பிடுகின்றார்கள். இது மீரா வகைக்குட்பட்ட சிவப்பு நிறப் பெரு விண்மீனாகும்.இது குளிர்ச்சியாகவும் ஆனால் நிறமாலையில் பிரகாசமான உமிழ்வு வரிகளைத் தருவதாகவும் இருக்கிறது இதன் ஒளிப்பொலிவெண் 13 மாதத்தில் ஒரு சுற்று முறைக்கு உட்பட்டு 3 -11 என்று சிறும- பெரும மதிப்புக்களைப் பெற்றிருக்கிறது. பெருமப் பிரகாசத்தின் போது (சிறும ஒளிப்பொலிவெண்) விண்மீன் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் சிறுமப் பிரகாசத்தின் போது எளிதாக இனமறிய முடிவதில்லை பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு R ஹைட்ரேக்கு மிகவும் அதிகம்.
இவ் வட்டாரத்தில் மற்றொரு மாரொளிர் விண்மீனாக U ஹைட்ரே என்ற பெருஞ் சிவப்பு விண்மீன் உள்ளது . 530 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் உருவ அளவு சுருங்கி விரியும் போது ஒளிப்பொலிவெண் 6 முதல் 4 வரை அதிகரிக்கின்றது. மாரொளிர்தலில் ஒரு ஒழுங்கு முறை காணப்படுகின்றது .
காமா(γ) ஹைட்ரே 132 ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப்பொலிவெண் 3 உடனும் சீட்டா(ζ) ஹைட்ரே 157 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒளிப் பொலி வெண் 3 .11 உடனும் நு(ν) ஹைட்ரே 139 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒளிப்பொலிவெண் 3 ,11 உடனும் பை(π) ஹைட்ரே,சை(ξ) ஹைட்ரே எப்சிலான்(ε) ஹைட்ரே லாம்ப்டா(λ) ஹைட்ரே மியூ(μ) ஹைட்ரே தீட்டா(θ) ஹைட்ரே போன்ற இவ்வட்டார விண்மீன்கள் முறையே 101,129 ,135 ,115 ,248,129 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் ,3 .25 ,3 .54 ,3 87,3 .38,3.61,3.83 ,3.89 தோற்ற ஒளிப் பொலி வெண்ணையும் கொண்டுள்ளன. சீட்டா ஹைட்ரேயும் ஆல்பா கான்சரியையும் சேர்த்து ஆயில்யம் நட்சத்திரம் என்று நம்மவர்கள் அழைக்கின்றார்கள்.
மேலும் NGC 3242 எனப் பதிவு செய்யப்பட்ட கோள் வடிவ நெபுலாவையும் M.48 எனப் பதிவு செய்யப்பட்ட தனித்த கொத்து விண்மீன் கூட்டத்தையும்
8 .2 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் தோற்ற ஒளிப்பொலிவெண்
8 .2 உடன் பால் வெளி மண்டலத்தின் வட்டாரத் துணை அண்டங்களுக்கு வெளியே Sc வகை சுருள் புய அண்டமொன்றும் காணப்படுகின்றது.
No comments:
Post a Comment