Wednesday, September 9, 2026

 

ஆங்கில இலக்கணத்தில் active voice passive voice என்று இருப்பதைப்போல மனிதர்களில் செயல் வீரன் , செய்யா வீரன் என்று இரு வகைகள் உண்டு. முன்னவன் சுறுசுறுப்பாக ஆக்கப்பூர்வமான செயல்களில்  செயல்படு பவன் பின்னவன் மந்தமாகச் செயல்படுபவன். இலக்கணம் மற்றும் மனிதர்களைப் போல செலவினங்களிலும் நிறை பயன் செலவு (active expenses) என்றும் குறை பயன் செலவு (Passive expenses) என்றும் இரு வகை உண்டு.. முதல் வகைச் செலவுகள் தொடர்ச்சியான முன்னேற்றத்தை வழங்கும். இரண்டாம் வகை இதற்கு எதிராகத்  தொடர் பின்னேற்றத்தை கொடுக்கும்.   ஒரு செலவு செய்தால் அதிலிருந்து பயன் கிடைக்கவேண்டும். அந்தப்பயன் சமுதாயம் தழுவியதாக இருந்தால் பயன் அடுத்தடுத்து பயன்களைக்கொடுக்கும் . தனி மனிதர்களுக்கு இந்தப் பயன் என்பது மனத்திருப்தி மட்டுமில்லை ,மீண்டும் செலவு செய்யும் தகுதியைக் குன்றாமல் தருவதுமாகும் .படித்து  நல்ல திறமைகளை வளர்த்துக்கொள்வதற்குச் செய்யும் செலவு,தொழில் உற்பத்தியைப் பெருக்குவதற்கு திட்டமிட்டுச் செய்யும் செலவு நிறை பயன் செலவு.இன்றைக்கு மக்களும் சரி அரசாங்கமும் சரி குறை பயன் செலவுகளை அதிகரித்துக் கொண்டே வருகின்றார்கள் . இதனால் மக்களும் அரசாங்கமும் எது சரியில்லையோ அதைச் சரி என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் . இந்த எண்ணத்தை மாற்றுவது அவ்வளவு எளிதில்லை தன் பாதிப்பு வரும்காலத்தில் பல சிக்கல்

களை உருவாக்கும்.

No comments:

Post a Comment