Tuesday, September 15, 2026

 

இந்தியாவின் அரசியல் பிற நாடுகளிலிருந்து மாறுபட்டிருக்கிறது. இங்கே அரசியல் தலைவர்களை அண்டிப்பிழைப்பவர்கள் அவர்களை ஒரு வரம்பின்றி புகழ்ந்து தள்ளுவார்கள்.  அந்தத் தலைவரால் தனக்கு எதாவது பதவி மற்றும் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் வரை அளவின்றி புகழ்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள் .இது அரசியல் தலைவர்களின் உண்மையான  முகத்தை , மறுபக்கத்தை மூடி மறைத்து விடுகின்றது. இந்தியாவில் அரசியல்தலைவர்கள்  அளவில்லாத சுதந்திரம் , அதிகாரத்தை எடுத்துக்கொள்கிறார்கள்..இதை யாரும் தடுப்பதில்லை என்பதால் ஓர் இலக்கண வரம்பின்றி அரசியல் தலைவர்கள் உருவாகிறார்கள் . நாளுக்கு நாள் அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது .இவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விட மறைவொழுக்க நடவடிக்கைகளில் விருப்பம் கொண்டு பொருள் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்நாள் குறிக்கோளாக க் கொண்டுள்ளார்கள். இது எல்லோருக்கும் தெரியும் என்றாலும் தவறான வளர்ச்சியை த் தடுக்க யாரும் சட்ட ரீதியிலான முயற்சி மேற்கொள்ள முன்வராததால் இந்திய அரசியல் மேலும் மேலும் கீழ்நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது .உழைத்து முன்னேறமுடியாது இனிமேல் மறைவொழுக்க நடவடிக்கைகளால் மட்டுமே வாழ முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment