ஒரு காலத்தில் மது அருந்தினால் குற்றவாளி என்ற நிலை இருந்தது.இன்றைக்கோ மது விற்பனை அரசாங்கத்தின் வருமானம் .அதனால் மது அருந்துவதை அரசாங்கம் மறைமுகமாக ஊக்குவிக்கின்றது. பூரண மதுவிலக்கை இனி யாராலும் சமுதாயத்தில் சேதாரமின்றி கொண்டு வரமுடியாது . அதுபோல செயற்கை நுண்ணறிவு இன்றைக்கு வளர்ந்து வருகின்றது. இது எதிர்காலத்தில் நம்பமுடியாத அளவிற்கு சமுதாயக் கேடுகளை த் தரலாம். வளர்த்து விட்டபிறகு அதைவிரும்பாத நிலையில் பயன்படுத்த க் கூடாது என்று கட்டுப்படுத்தவே முடியாது . அதைத் தவறான வழியில் பயன்படுத்தி பொருள் சம்பாதிக்கும் கூட்டம் இருக்கும் . கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் வழி தெரியாமல் விழிக்கும் நிலையே அங்கும் தொடரும்
No comments:
Post a Comment